Published:Updated:

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

Published:Updated:
மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி
மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

கோட்-சூட்டுடன் படுபந்தாவாக வந்த கழுகாரிடம், “தமிழக அரசு கூட்டிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் போயிருந்தீரா... சக்சஸ்தானே?’’ என்று கேட்டோம்.

‘‘சக்சஸா, வெறும் சர்க்கஸா என்பது சில நாள்களில் தெரிந்துவிடும். உதாரணத்துக்கு ஒரேயொரு விஷயம். மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலர், பழைய கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்தார்கள். ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம் என்கிறது தமிழக அரசு. ஆனால், அது ‘ஹண்ட்ரட் ஹேண்ட் சிஸ்டம்’ என்பதாகத்தான் இருக்கிறது. சிங்கிள் விண்டோவுக்குப் பின்னாலிருந்து நூறு கைகள் நீள்கின்றன’ என்று அவர்கள் முணுமுணுத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லி, மர்மப் புன்னகையை வெளியிட்டார் கழுகார்.

‘‘தேர்தல் செலவுகள் எல்லாம் பலமாகக் காத்திருக்கும்போது, பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்?’’

‘‘உண்மைதான்... தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, செலவு இதையெல்லாம் பேசப்போய், முதல்வர் வீட்டில் பெரிதாக வில்லங்கமே வெடித்திருக்கிறதாம்.’’

‘‘அடடே, விவரமாகச் சொல்லும்.’’

‘‘கடந்த இதழில் தம்பிதுரை தனி ரூட், குழப்பத்தில் ஓ.பி.எஸ், இறுக்கத்தில் இ.பி.எஸ் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அதன் தொடர்ச்சியாக நிறையக் கூத்துகள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, பி.ஜே.பி கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என்று நினைக்கிறார் எடப்பாடி. இது கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலரைத் தவிர மற்ற அமைச்சர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். அதனால், ஓ.பி.எஸ் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரள ஆரம்பித்திருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது.’’

‘‘தர்மயுத்தத்துக்கு வெற்றியோ!’’

‘‘ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், கூட்டணி விவகாரங்கள், சீட் பேரங்கள் இதெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களைக்கூட, அவருக்கு எதிராகத் திரும்பச் செய்திருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது எடப்பாடி தரப்பு. அவருக்கு இடதும் வலதுமாக இருக்கும் இரண்டு அமைச்சர்களில் ஒருவரே, விரைவில் அவருக்கு எதிராகத் திரும்பினாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். தவிர, தனக்கு எதிராக அமைச்சர்கள் சிலர் சீறியதில் ஆடிப்போயிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.’’

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அந்த அளவுக்கு என்னதான் பிரச்னை?’’

‘‘சில நாள்களுக்கு முன்பு, கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலிருந்து அமைச்சர்கள் பலருக்கு அவசர அழைப்பு வந்ததாம். துணைமுதல்வர் பன்னீர், வேலுமணி, தங்கமணி, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், வீரமணி என்று கிட்டத்தட்ட அமைச்சரவையே கூடிவிட்டதாம். ‘கூட்டணியில் சேரச் சொல்லி பி.ஜே.பி-யிலிருந்து தொடர்ந்து பேசிவருகிறார்கள். எந்த முடிவையும் நாம் சொல்லவில்லை. பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் நம்முடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கும், சீட் விவரங்களை ஆலோசிக்கவும் தனிக்குழுக்களை அமைக்கலாம்’ என்று எடப்பாடி கூறினாராம். உடனே, ‘பி.ஜே.பி கூட்டணி பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்’ என்று சிலர் சொல்ல, வேறு சிலரோ, ‘இப்போதுள்ள நெருக்கடியில் பி.ஜே.பி-யைப் பகைத்துக்கொண்டால், வேறு வகையில் நமக்குச் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்கள்’ என்று சொன்னார்களாம். ‘சட்டென்று முடிவெடுக்க முடியாதுதான். ஆனாலும் பேசுவோம்’ என்றாராம் எடப்பாடி.’’

“மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களா?’’

‘‘ம்க்கும்.... பாய்ந்து குதறத் தொடங்கிவிட்டார்களாம். பேச்சுவாக்கில்,  ‘தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்தால் மதுரை, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிகளை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று எடப்பாடி சொன்னதும், சட்டப்பிள்ளை படு பயங்கரமாகப் பாய ஆரம்பித்துவிட்டதாம். கையில் வைத்திருந்த பேப்பரை எதிரில் இருந்த டேபிளில் வேகமாக வீசிவிட்டு, ‘யாரைக் கேட்டுக் கள்ளக்குறிச்சியை விட்டுக்கொடுக்க முடிவு செய்தீர்கள். என் ஏரியாவில் ஏற்கெனவே வேட்பாளரைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறேன். நீங்கள் விஜயகாந்த் கட்சிக்குத் தூக்கிக்கொடுப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்’ என்று வெடிக்கவும், அதிர்ந்தே விட்டாராம் எடப்பாடி. ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தி முடிப்பதற்குள், தொழில்துறை எகிற ஆரம்பித்துவிட்டதாம்.’’

‘‘ஆகா?’’

‘‘கடுங்கோபத்தோடு, ‘கூட்டணிக்குள் பா.ம.க வந்தாலே, வடமாவட்டத் தொகுதிகளைத் தாரைவார்த்துவிடுவீர்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் இந்த முறை அப்படி இருக்கக்கூடாது. குறிப்பாக, கடலூர் தொகுதியைக் கொடுக்கும் எண்ணம் இருந்தால், இப்போதே மறந்துவிடுங்கள். என் மகனை நிறுத்தலாம் என்று ஏற்கெனவே நிறைய ஏற்பாடுகளைச் செய்துவைத்திருக்கிறேன்’ என்று தொழில் கொந்தளிக்க, மொத்தமாகப் பம்ம ஆரம்பித்துவிட்டாராம் எடப்பாடி.’’
‘‘ம்... சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற கதைகளைக் கேட்டு பல நாள்களாகின்றன.’’

‘‘அவர்களின் வேதனை, உமக்குக் கொண்டாட்டம்’’ என்று சிரித்த கழுகார், ‘‘இப்படியே போனால், கதைக்காகாது என்று நினைத்த எடப்பாடி, தொகுதிப் பங்கீடு விஷயங்களிலிருந்து தேர்தல் செலவுப் பக்கம் திசைத்திருப்பிவிட்டாராம். ‘ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் வீதம், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25-லிருந்து 30 கோடி ரூபாய்வரை செலவாகும்’ என்று யாரோ போட்டுக் கொடுத்த கணக்கு அங்கே சொல்லப்பட, மயான அமைதியாம்.’’

‘‘புயலுக்கு முந்தைய அமைதியோ?’’

‘‘அதேதான்... ‘புதுச்சேரி உட்பட ஒட்டுமொத்தமாக நாற்பது தொகுதிகளுக்கும் சேர்த்து, 1,200 கோடி ரூபாய் வரை செலவாகும். தி.மு.க கூட்டணியில் வி.ஐ.பி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகள் என்றால், கூடுதலாக இருபது கோடி ரூபாய் வரை செலவுசெய்ய வேண்டிவரும். பி.ஜே.பி நம்முடன் அணி சேர்ந்தால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் பூத் கமிட்டிக்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய் தருவார்கள். மீதித்தொகையை நாம்தான் செலவுசெய்ய வேண்டிவரும். ஆகக்கூடி, குறைந்தது 1,500 கோடி ரூபாய் தேர்தல் செலவாகச் செய்யவேண்டியிருக்கும்’ என்றெல்லாம் தேர்தல் கணக்குகளை வைத்துப் பேச்சு வந்ததாம்.’’

‘‘அடேங்கப்பா... 1,500 கோடியா?’’

‘‘500 கோடி ரூபாய் எங்கள் பொறுப்பு. மீதி ஆயிரம் கோடி ரூபாய் உங்கள் தரப்பிலிருந்து கொடுக்க வேண்டும் என்று அமைச்சர்களை நோக்கிச் சொல்லப்பட, மறுபடியும் சீறிவிட்டாராம் சட்டப்பிள்ளை. ‘நான் வைத்திருக்கும் துறையே வருமானம் இல்லாத துறை. பொதுப்பணித்துறையை வைத்திருப்பவர்கள் மொத்தத் தொகையையும் கொடுக்கலாமே. இல்லையென்றால் அந்தத் துறையை என்னிடம் கொடுத்துப்பாருங்கள். முழுத்தொகையையும் நானே கொடுக்கிறேன்’ என்று மீண்டும் வம்படியாக அவர் பேச, எடப்பாடி தரப்பு அப்செட்டோ... அப்செட்!’’

‘‘சட்டப்பிள்ளைக்கு ஏன் இவ்வளவு கோபம்?”

‘‘ஏற்கெனவே ‘நியூஸ் ஜெ’ சேனல் செலவுக்குக் கணிசமான அளவில் பங்காற்றியிருக்கிறாராம். ஆனால், ‘சொன்னபடி எடப்பாடி தரப்பில் நடந்துகொள்ளவில்லை’ என்கிற வருத்தம் இருக்கிறதாம். இதையெல்லாம் தாண்டி, சட்டப்பிள்ளையின் பின்னால் கொங்கு பகுதியைச் சேர்ந்த முக்கிய அமைச்சரும் இருக்கலாம் என்கிற பேச்சும் கிளம்பியிருக்கிறது.’’

‘‘கொங்கு என்றாலே எடப்பாடித் தரப்புக்கு நெருக்கமாயிற்றே?’’

‘‘அதெல்லாம் பழைய கதை என்கிறார்கள். இப்போது சில விஷயங்களால், அந்த கொங்கு அமைச்சருக்கும் எடப்பாடிக்கும் இடையே உரசலாம். குறிப்பாக, செந்தில்பாலாஜியை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவர, தான் எடுத்த முயற்சிக்கு எடப்பாடி தரப்பு ஒத்துழைக்கவில்லை என்று வருத்தமாம். கூட்டணி விவகாரத்திலும் அவரது கருத்தை எடப்பாடி தரப்பு ஏற்க மறுக்கிறதாம். தவிர, கோவை அல்லது பொள்ளாச்சி தொகுதியில், தனது ‘அன்பு’க்குரிய அண்ணனை நிறுத்த வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் அந்த அமைச்சர். அதற்கும் எடப்பாடி தரப்புப் பிடிகொடுக்கவில்லையாம்.’’

‘‘என்ன இது, ஒரே வாரிசு மழையாக இருக்கிறதே?’’

‘‘தொழில் பார்ட்டி கடலூரில் மகனை நிறுத்த நினைக்கிறது. பன்னீரோ, தேனியில் மகனைக் களம்காணத் துடிக்கிறார். இப்படி ஏகப்பட்ட வாரிசுகள் படையெடுக்கவே, சேலத்தில் தன்  வாரிசை நிறுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தீர்மானித்துவிட்டாராம் எடப்பாடி.’’

‘‘சரி, தி.மு.க தரப்பில் என்ன நடக்கிறது?’’

மிஸ்டர் கழுகு: தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி

“கிராம சபை கூட்டத்தை நடத்திக்கொண்டே, பூத் கமிட்டி வேலைகளையும் ஆரம்பித்து விட்டார்கள். தி.மு.க தலைவர் பொறுப்பில் ஸ்டாலின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், நாற்பது தொகுதிகளையும் அள்ளிவிட வேண்டும் என்று மும்முரமாக வேலை செய்கிறார்கள். தேர்தல் செலவு பற்றியும் அறிவாலயத்தில் ஆலோசனை நடக்கிறது. எத்தனைக் கோடிகள் என்கிற கணக்குகள் அங்கே இன்னமும் ஆரம்பமாகவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த முறை எல்லாவகையிலும் நெருக்கடி அதிகமாக இருக்குமாம். குறிப்பாக, தொகுதியை ஒதுக்குவதுடன் ஒதுங்கிக்கொள்ளும் தி.மு.க தலைமை, இம்முறை வேட்பாளர்கள் தேர்வு விஷயத்திலும் தலையிடுமாம். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியில் யார் நின்றால் வெற்றிபெற முடியும் என்று தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்கப்படுமாம். ‘அதன் பிறகே கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்க முடிவுசெய்திருக்கிறார்களாம்.’’

‘‘புது ட்ரெண்டாக இருக்கிறதே?’’

‘‘கடந்த காலங்களில் கேட்ட தொகுதிகளை வாரிக்கொடுத்துவிட்டு, கூட்டணி கட்சிகள் தோல்வியைச் சந்தித்ததால் தி.மு.க-வுக்குச் சரிவு ஏற்பட்டது. அதனால்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்” என்று சொன்ன கழுகார், “காங்கிரஸ் தலைமை சரியென்று சொல்லிவிட்டதாகக் கேள்வி’’ என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

படம்: கே.ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism