Published:Updated:

பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், தாமல் பகுதியில் பஸ் ஒன்று எரிக்கப்பட்டது தொடர்பாக அப்பகுதி பா.ம.க. ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதன் காரணமாக தமிழகமெங்கும் அக்கட்சியினர், சாலைமறியல், போக்குவரத்தை சீர்குலைத்தல்-, பேருந்துகளை எரித்தல் என பல வன்முறை செயல்களை செய்து வருகின்றனர்.

பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

இதையடுத்து பா.ம.க. நிர்வாகிகளை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்த்தில் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தையடுத்த தாமல் பகுதியில் கடந்த வாரம் காஞ்சிபுரத்திலிருந்து வேலுர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மர்ம கும்பல் கொளுத்தியது.

பா.ம.க. ஊராட்சி தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

இதில் தாமல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் நேரடியாக ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்.கிருபாகரன்