Published:Updated:

`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி

திருப்பூரில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக இன்று திருப்பூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ``பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்காக திருப்பூரில் இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் இடம் உறுதி செய்யப்படும். மோடி பங்கேற்கும் அந்தப் பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் மக்கள்வரை கலந்துகொள்வார்கள். மோடியின் திருப்பூர் வருகையின்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதைப் போன்றதொரு அரசாங்க திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

`அரசு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு!’ - திருப்பூர் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு வரும் மோடி

அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். தேர்தலில் அரசியல் மாற்றம் என்பது தமிழ்நாட்டிலும் இருக்கும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க-வில் ஸ்டாலினின் நிலைப்பாடு இரட்டை நிலைப்பாடு என மக்கள் உணர்ந்துகொள்ளத் துவங்கிவிட்டார்கள். மோடி ஒழிக என்று கூறுவதைவிட, அவர்களுடைய திட்டங்களைச் சொல்லி வெற்றி பெற முயற்சி செய்யலாம் என்று தெரிவித்தார்.