இறந்த பிறகும் சர்ச்சைகளைச் சுமக்கிறார், ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியா, நிரபராதியா என்கிற சர்ச்சை மேலோங்கி இருந்த நிலையில், அவரைக் குற்றவாளி எனச் சொல்லக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரது உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைத்ததை எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்த்தார்கள். பின்னர், தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றத்துக்குச் சென்றது. அந்த வழக்கில், ‘சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் தலையிட முடியாது’ என நீதிமன்றம் தெரிவித்ததால், விவகாரம் ஓய்ந்தது. அடுத்ததாக, மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவகம் அமைக்கத் தடைகோரி சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “சென்னை மெரினா கடற்கரையில், ரூ.50.80 கோடி மதிப்பீட்டில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவருக்கு மக்களின் வரிப்பணத்தைச் செலவுசெய்து நினைவகம் அமைப்பது தவறானது. இந்தப் பணிகளை நிறுத்தும்படி தமிழகத் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ஜெயலலிதாவுக்கு நினைவகம் அமைக்க, மக்களின் வரிப்பணத்தைச் செலவழிப்பதைத் தடுக்க வேண்டும். இதுவரை செலவிட்ட தொகையை வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாரயணன், ராஜமாணிக்கம் அமர்வில் நடந்த விசாரணைக்குப் பின்னர், ஜனவரி 23-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், “சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். அதனால், அவரைக் குற்றவாளி என்று கருத முடியாது. நினைவிடம் கட்டுவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று மனுவைத் தள்ளுபடி செய்தது.

மேடைதோறும், தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் ஜெயலலிதாவைக் ‘குற்றவாளி’ என்று விமர்சனம் செய்துவந்ததற்கு, நீதிமன்றமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக, ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்தவரும் தற்போதைய ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை நம்மிடம் பேசினார்.

அவர், “முன்னாள் முதல்வருக்கு நினைவகம் அமைப்பதை எதிர்த்து, அரசியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக வழக்குத் தொடரப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்புவந்தபோது, அவர் உயிருடன் இல்லை. ஏற்கெனவே ‘கபூர் - தமிழக அரசு’ இடையேயான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘ஒருவர் நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது அவர் உயிருடன் இல்லை என்றால், அந்தத் தீர்ப்பு அவரைக் கட்டுப்படுத்தாது’ என்று குறிப்பிட்டுள்ளது. எனவே, ஜெயலலிதா நிரபராதியாகவே மறைந்துவிட்டார். யாராவது இனிமேல் அவரைக் குற்றவாளி என்று குறிப்பிட்டுப் பேசினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவோம்’’ என்றார் ஆவேசமாக.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் தொல்காப்பியனிடம் கேட்டதற்கு, “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, அவரை உச்ச நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், அவர் உயிருடன் இல்லாததால் அவருக்கான தண்டனையை வழங்க முடியாது என்பதால் மற்றவர்களுக்கு மட்டும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போது, ஜெயலலிதாவைத் தவிர, இந்த வழக்கில் அவருடன் சேர்ந்த அனைவரும் சிறையில் உள்ளனர். தற்போது வந்துள்ள தீர்ப்பை எதிர்த்து, வழக்குத் தொடர்ந்தவர் மேல்முறையீடு செய்வாரா என்பதைப் பொறுத்தே இந்த விவகாரத்தில் முடிவுசெய்ய முடியும்” என்றார்.

இதனிடையே, வழக்கைத் தொடர்ந்த ராஜன் என்பவர் மேல்முறையீடு செய்யும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இந்த விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தெரிகிறது.

-பி.ஆண்டனிராஜ்,
படம்: எல்.ராஜேந்திரன்