Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

@சுந்தரம், சென்னை.
அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலையில் நடத்திய ‘கின்னஸ் சாதனை’ ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைக்க, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்த... சந்தோஷமான நிகழ்வுதானே?


தொடர்ந்து வேதனைகளையே கொடுத்துக்கொண்டிருந்தால் மக்கள் பாவம் என்று, நடுநடுவே ‘சாதனை’களையும்  முயற்சி செய்கிறார்கள்!

கழுகார் பதில்கள்!

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பெயரை வழிமொழியச் சொன்னால், யாரை நீங்கள் கைகாட்டுவீர்கள்?


அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, வேறு ஒருவரை நான் கைகாட்ட வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்!

எஸ்.பழனிவேல், காரைக்குடி.
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என விசாரணைக் கமிஷன் அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறதே?


நாங்கள்லாம்... கமிஷனுக்கே ‘கமிஷன்’ கொடுக்கறவய்ங்க!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர் .
‘வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்’  என ‘துக்ளக்’ குருமூர்த்தி கூறியிருப்பது பற்றி?


திருதராஷ்டிர ஆலிங்கனம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

@காட்டாவூர் இலக்கியன், செங்குன்றம், சென்னை.52
இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில் கழுகார் பார்த்து வியந்தது... பிடித்தது?


வழக்கம்போலவே தேடலுடன்கூடிய வாசகர்கள் குவிந்ததும், விகடன் பிரசுரம் வெளியிட்ட வியத்தகு படைப்பான ‘வீரயுக நாயகன் வேள்பாரி’  மீது வாசகர்கள் காட்டிய அளவில்லாத ஆர்வமும் வியக்க வைத்தது. ஆனால், பிடித்தது என்பதைவிட, பிடிக்காததுதான் நிறைய. டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அரங்குகளின் விவரங்கள், புத்தகங்களின் இருப்பு, விலைப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை மொபைல் போன், கணினி மூலமாகவே தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், தள்ளுவண்டி காபி விற்பனையை அறிமுகப்படுத்தி நடைபாதையில் நிறுத்திவைத்து மகா இடைஞ்சலைத்தான் ஏற்படுத்தியிருந்தனர். அறநிலையத்துறை, சரஸ்வதி மகால், தொல்பொருள்துறை போன்ற முக்கியமான துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படாதது, உறுத்தலான விஷயம். அதேசமயம், ஆளுங்கட்சியின் ‘நமது அம்மா’, ‘நியூஸ்ஜெ’  இவற்றுக்கெல்லாம் அரங்குகளைக் கொடுத்திருந்தார்கள். ‘நமது அம்மா’ அரங்கின் உள்ளே மட்டுமல்ல, அதன் வாசலிலேயும் யாருமே இல்லை!

@பார்த்தசாரதி, திருப்பூர்.
தமிழகத்தில் திரைப்படமும், மதுவும்தான் பண்டிகைகளின் அடையாளம் என்றாகிவிட்டதே?


உலகம் முழுக்கவே பெரும்பாலும் இதுதான் அடையாளம். நம் ஊரில் எதையுமே கொஞ்சம் ஓவராகச் செய்வார்கள். இப்போது, ரொம்பவே ஓவராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்!

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
லயோலா கல்லூரியில் நடந்த கிராமிய கலை நிகழ்ச்சியின்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் இந்து மதம், பி.ஜே.பி ஆகியவற்றை இழிவுபடுத்தியதாக மிரட்டல் விடுக்கப்படுகிறதே?


லயோலா கல்லூரி பாரம்பர்யம் மிக்கக் கல்லூரி. ஆனால், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அமைப்பால் நடத்தப்படும் கல்லூரி என்கிறபோது கூடுதல் எச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும். மாற்று மதம், அரசியல் கட்சி ஆகியவற்றை இழிவுபடுத்தும் வகையிலான ஓவியங்கள் உள்ளிட்டவற்றை அனுமதித்தது தவறான செயலே. இரண்டு நாட்களாக இத்தகைய தவறு நடந்துகொண்டிருந்ததை அனுமதித்துவிட்டு, பிறகு வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை. பொதுவாகவே கல்வி நிலையங்களில் மதம், சாதி போன்றவற்றுக்கு இடங்கொடுப்பது பரவிவருகிறது. குறிப்பாக மதங்களின் சார்பில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் அதிகமாகவே இருக்கிறது. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பலவும் தீவிரமாக மதத்தை உயர்த்திப்பிடிக்கும் பல்வேறு அமைப்புகளும் பயிற்சிகளை எடுக்கும் இடமாக மாற்றப்பட்டுவருகின்றன. ‘கல்வி, அறிவு சார்ந்த நிகழ்வுகளைத் தவிர, வேறு எந்த நிகழ்வுகளுக்கும் கல்விக்கூடங்கள் பயன் படுத்தப்படக் கூடாது’ என்று சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இப்படிப்பட்ட செயல்கள் தொடர்வது, கல்வி நிறுவனங்களின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

கழுகார் பதில்கள்!

ஏ.ராஜசேகரன், நன்னிலம்.
‘கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி தினகரன்தான்’ என்கிறாரே முன்னாள் அமைச்சர் மதுசூதனன்?


‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தின் பிடியில்தான் அ.தி.மு.க இருந்தது. தங்கள் வாழ்க்கைக்காகவும், வசதிக்காகவும் அந்தக் குடும்பத்தின் நண்டுசிண்டுகளைக்கூட முதலாளிகளாக ஏற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க பிரமுகர்களும் அவர்களின் கால்களில்தான் விழுந்து கிடந்தார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் மறுபேச்சு இல்லாமல் நிறைவேற்றினார்கள். தங்கள் குடும்பங்களையும் எடுபிடிகளையும் வளமாக்கிக் கொண்டார்கள். ஆக, நடந்த, நடந்துகொண்டிருக்கிற அனைத்துக் குற்றங்களிலும் இவர்கள் எல்லோருக்கும் தொடர்பு உண்டா என்கிற சந்தேகம் எழுவது இயற்கையே.

எஸ்.பொற்கொடி, கோவை.

ஒரு முதலமைச்சர் மீதே பழி சுமத்துகிறார்கள் என்றால், அத்தகையோரைக் கைது செய்யாமல் எப்படி இருக்க முடியும்?


முதலமைச்சர் என்ன...  ஜனாதிபதியே ஆனாலும், அவர்கள் அனைவரும் நாட்டின் குடிமகன்கள் மட்டுமே. அந்தப் பதவிகளில் இருப்பதால், மக்களுக்குத் தேவை யானவற்றைச் செய்வதற்கான அதிகாரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன... அவ்வளவே. மற்றபடி, குற்றச்சாட்டு என்று வந்துவிட்டால் எல்லோரும் ஒன்றுதான். ‘முதலமைச்சரையே எதிர்ப்பாயா?’ என்று கேட்பது சர்வாதிகாரத்தைத்தான் காட்டும். முதலமைச்சர் பதவியை வகிப்பவர் தனிநபர். அவர் செய்யும் குற்றங்கள், அந்தப் பதவியைப் பாதிக்கக்கூடாது. அதனால்தான் பழி வரும்போது, பதவி விலகிக்கொண்டு விசாரணையை எதிர்கொள்வார்கள். ஆனால், ‘அண்ணன் எப்ப சாவான்... திண்ணை எப்ப காலியாகும்’  என்று பலரும் காத்திருக்கும்போது, பதவி விலகத் தயக்கம் வருவதிலும், அதிகாரத்தை வீராவேச மாகக் கையில் எடுப்பதிலும் வியப்பு இல்லைதான்.

கழுகார் பதில்கள்!

@சிவக்குமார்.டி. சீலப்பாடி, திண்டுக்கல்.
‘அ.தி.மு.க-வும், பி.ஜே.பி-யும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’  என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறாரே?


உலக மகா நடிப்புடா சாமீ!

@மு. நடராஜன். திருப்பூர் 7.
‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னை நிரூபிக்க தீயிலும் இறங்குவார்... கடலிலும் இறங்குவார்’  என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்கிறாரே?


‘இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளப்படுத்தறாய்ங்களே!’ என்கிற எடப்பாடி யின் மைண்ட் வாய்ஸ் யாருக்குக் கேட்கப் போகிறது!

@விஷ்ணுகோபால்.

‘பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள்’  என்று சொல்லும் தொல்.திருமாவளவன், இந்தத் துரோகத்துக்குத் துணைபோகும் காங்கிர ஸுடன் எப்படி கூட்டணி போடுகிறார்?


கொள்கை வேறு... கூட்டணி வேறு!

@மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-33.

தோல்வி நிச்சயம் என்கிற நிலையி லுள்ள கட்சிகளும், தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவதை வாடிக் கையாக வைத்துள்ளனவே, எதற்காக?


அப்படிப் போட்டியிடும்போது தானே, அந்தத் தலைவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கான ‘சத்து டானிக்’  கிடைக்கிறது!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism