அலசல்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

‘மக்கரு குக்கருமா’ என எந்த நேரத்தில் முன்னாள் இளைய தளபதி பாடினாரோ தெரியவில்லை ‘குக்கரு, குண்டுச்சட்டி ஒண்ணும் கிடையாது’ என தினகரன் தரப்பை அதிரவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஏற்கெனவே பல கோடிக்கு பப்ளிசிட்டி செய்துவிட்ட நிலையில், அடுத்து என்ன என்று கையைப் பிசைகிறது தினகரன் தரப்பு. கவலை வேண்டாம். நாங்களே ஐடியா தருகிறோம்.

ஐடியா அய்யனாரு!

• அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை மூட்டுவது, பங்காளிகளுக்குள் கோள் மூட்டுவது எனக் கலக காம்பெடிஷனில் முதலிடம் தினகரனுக்குத்தான். இந்தப் போட்டியில் நாரதரையே அண்ணன் அசால்டாக நாக் அவுட் செய்வதால், அவரின் அடையாளமான தம்புராவையே தேர்தல் சின்னமாகவும் கேட்டு வாங்கிவிடலாம்.

• மைக்கால் கெட்டவர்கள் பலர் உண்டு. ஹெச்.ராஜா, சிம்பு என லிஸ்ட் ஏகத்துக்கும் பெருசு. ஆனால், மைக்கால் வாழ்ந்தவர்களில் முதலிடம் அண்ணன் டி.டி.வி-க்குத்தான். பிரஸ்காரர்கள் வர லேட்டாகிவிட்டால் மைக் எடுத்து, தனக்குத்தானே பிரஸ்மீட் வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கருத்து மழை பொழிகிறார். அதனால் மைக்கை கேட்டுப்பெறலாம்.

• தினகரனின் பிரதான நோக்கமே எடப்பாடி பழனிசாமியை மாற்றுவதுதான். கொடநாடு விவகாரத்தின் புண்ணியத்தில் அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. பங்களா கிளப்பிய பக்பக்கில் திகிலடைந்து கிடக்கிறது அவரது முகாம். எனவே, நன்றிக்கடன் செலுத்தும்விதமாக பங்களாவைக் கட்சிச் சின்னமாகக் கேட்டுப் பெறலாம்.

• பத்து ரூபாய் பார்க்கிங்கில்கூட டிமிக்கி கொடுக்கும் நம் ஆட்களை டோக்கனுக்காக ஏங்க வைத்தது ஆர்.கே நகர். டோக்கனும் 20 ரூபாய் நோட்டும், குக்கரையும் தாண்டி மக்கள் மனதில் பதிந்தன. எனவே, ரூபாய் நோட்டைச் சின்னமாக வாங்கிவிட்டால் பப்ளிசிட்டி எல்லாம் தேவையே இல்லை. ஓட்டுகளைக் குவித்துவிடலாம்.

• இது எதுவுமே சரிவரவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது குக்கரின் தாத்தாவான பொங்கப்பானை. அதை சின்னமாகக் கேட்டுப் பெற்று ‘இது தமிழனின் அடையாளம். ஓட்டுப் போடுங்க. உங்க வாழ்க்கையும் பொங்கோ பொங்குனு பொங்கும்’ எனப் பிரசாரம் செய்யலாம்.