Published:Updated:

வேலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் மாவட்ட பா.ம.க. செயலாளர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது வன்முறையில் ஈடுபட்ட வேலூர் பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட மூன்று பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யபட்டதை கண்டித்து வேலூர்

##~~##
மாவட்டத்தில் பஸ் எரிப்பு, பஸ்மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது. இதுதொடர்பாக வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், வாலாஜா அடுத்த பெரியதகர குப்பம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன் (வயது 32), மேல்வேலத்தை சேர்ந்த பிச்சாண்டி (40) ஆகியோர் கைது செய்யபட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.
இவர்கள் மீது பஸ்மீது கல்வீச்சு, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்பட பல்வேறு பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இதையொட்டி இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரெண்டு ஈஸ்வரன் கலெக்டர் சங்கருக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற கலெக்டர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் இன்று வழங்கப்பட்டது.