Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ருவதாக அறிவித்தாலே ட்விட்டரில் கோ பேக் என ட்ரெண்டு ஆக்குகிறார்கள். அதைத் தாண்டி வந்தால், கறுப்புக்கொடி தொடங்கி பலூன் வரை பறக்கவிட்டு அலறவிடுகிறார்கள். சரி, வீடியோ கான்ஃபரன்ஸில் பேசுவோம் என முடிவெடுத்தால், அதிலும் எகிடுதகிடாகக் கேள்வி கேட்கிறார்கள். பாவம் பாரதப் பிரதமர் பரிதாபகரமான நிலையில் இருக்கிறார். போதாக்குறைக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திரும்பவும் தமிழகம் வருகிறார். இந்த முறை அவரின் பயணம் சுமூகமாக முடிய சில யோசனைகள்.

ஐடியா அய்யனாரு!

• வருவதற்கு முன்னாலேயே தமிழக பி.ஜே.பி-யின் ஆஸ்தான வம்பு வீரர் ஹெச்.ராஜாவை ஏதாவது உளறச் சொல்லலாம். கூட்டம் மொத்தமும் அவரை மொத்தும் கேப்பில் சத்தமில்லாமல் வந்துசென்றுவிடலாம்.
ஹெச்.ராஜாவுக்கும் இது புதிதல்ல. ‘இந்தத் தடவை அடிக்க வந்த கூட்டம் கம்மிதான்’ என வருத்தப்படுவாரே தவிர, கோபப்படமாட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• காவிக் கலரின் ரசிகர்களாக முக்கிமுனகித் தேடினாலும், இங்கே 300 பேர்தான் தேறுவார்கள். அதனால் தமிழகத்தில் மட்டும் பி.ஜே.பி-யின் அதிகாரபூர்வ கலர், கறுப்பு என அறிவித்துவிடலாம். “பார்த்தீங்களா எவ்ளோ பாசமா வரவேற்குறாங்க” என்று தமிழிசை அக்காவைப் பேசச் சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ளலாம். குழப்பத்தில் ரெண்டு ஓட்டுகள் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

• எப்படியும் திரும்பவும் #GoBackModi ட்ரெண்டாகத்தான் போகிறது. எனவே, ‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் ஒருவேளை தோற்றுப்போகலாம். ஆனால், திரும்பவும் பிரதமர் பதவிக்கு நீங்கள் திரும்பவேண்டும் என்பதைத்தான் தமிழகம் ட்ரெண்டாக்குகிறது. தமிழ்நாட்டுக்காரய்ங்க பாசக்காரய்ங்கய்யா’ என முன்னாடியே ஸ்டேட்மென்ட் விட்டுவிட்டால் தேர்தல் சமயத்தில் பயன்படும்.

• எதுவும் சொல்லாமல் சர்ப்ரைஸ் விசிட்டாக வந்து இறங்கலாம். கேட்டால் ‘தமிழக அரசின் மீது பல குற்றச்சாட்டுகள் குவிகின்றன. எனவே திடீரென வந்து இன்ஸ்பெக்‌ஷன் செய்தேன். தேவைப்பட்டால்  அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவோம்’ எனச் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்.

• ‘எனக்குக் கறுப்புக் கொடி காட்டாதீங்கன்னு சொல்லலை. காட்டுங்க. கோடிக்கணக்குல துணி வாங்கிக் காட்டுங்க. காட்டுனதுக்கு அப்புறம் அதை அப்படியே பந்தலா தைச்சு சென்னை மேல போர்த்திவிடுங்க. வெப்பம் குறையும்’ என செல்ஃபி வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிடலாம். கடைசியாக, ‘இந்த ஐடியாவைக் கொடுத்த தம்பி சிம்புவுக்கு நன்றி’ என க்ரெடிட் கட்டாயம் கொடுக்க வேண்டும்.