Published:Updated:

40 நாள்களுக்கு மேல் தொடரும் மீட்புப் பணி! - சில ஹெல்மெட்டுகள், 2 உடல்கள் மட்டுமே மீட்பு #Meghalaya

40 நாள்களுக்கு மேல் தொடரும் மீட்புப் பணி! - சில ஹெல்மெட்டுகள், 2 உடல்கள் மட்டுமே மீட்பு #Meghalaya
40 நாள்களுக்கு மேல் தொடரும் மீட்புப் பணி! - சில ஹெல்மெட்டுகள், 2 உடல்கள் மட்டுமே மீட்பு #Meghalaya

மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களில் இரண்டாவதாக மற்றொருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக மேகாலயா மாநிலத்தில் உள்ள ஜெயின்டிஷியா குகை பகுதியில் சிறிய அளவிலான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது. மிகச்சிறிய அளவிலான அந்த சுரங்கத்தில்,  மழை நீர் நிரம்பியதால் கடந்த  டிசம்பர் 12-ம் தேதி  சுரங்கத்துக்குள் பதினைந்துப் பணியாளர்கள் சிக்கினர். சுரங்கத்திலிருந்து பணியாளர்களை மீட்பதில் மீட்பு பணியினருக்கு தொய்வு ஏற்பட்டது. நீச்சல் வீரர்களாலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. இந்திய கடற்படையின் சிறிய ஆளில்லாத ரோபோ மோட்டார் மூலம்  உடல் சிதிலமடைந்த நிலையில் அமீர் ஹூசைன் என்பவரின் உடல் மீட்கப்பட்டது.  

இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய  மற்றவர்களும் இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மீட்புப் பணியில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது. சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களின்  உடலை மீட்கும் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக  கடற்படை அறிவித்திருக்கிறது.  ஆனால் நீதிமன்ற உத்தரவு இருப்பதால், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. சுரங்கத்தில் அதிக அளவிலான சல்பர் பொருட்கள் உள்ளதால் அவை உடல்களை எளிதில் அழுக வைத்துவிடும் என்கின்றனர். இந்தநிலையில் 280 அடி ஆழத்தில் இன்று மற்றொரு உடலையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இந்த நாற்பது நாட்களில் அழுகிய நிலையில் இரண்டு உடல்களும் சில ஹெல்மெட்டுகளும் மட்டுமே சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.