Published:Updated:

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

‘கர்நாடக’ புகழேந்தி பேட்டி

சிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் விதிமுறைகளை மீறிச் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட விவகாரம் முடிவுக்கு வரவில்லை. அந்தப் புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் தனது விசாரணை அறிக்கையில், ‘சிறையில் சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்ற புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைதான் விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் டி.ஜி.பி சத்ய நாராயணா, டி.ஐ.ஜி ரூபா ஆகியோரிடம் விசாரணை நடத்திய கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர், கர்நாடக மாநில அ.ம.மு.க செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், கட்சி வேலைகள் தொடர்பாக மதுரை வந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

“சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது உண்மையா? விசாரணை அதிகாரி வினய் அறிக்கையில் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா?’’

“சின்னம்மா சசிகலா, இளவரசி இருவரும் பல்வேறு உடல் உபாதைகளுடன் சாதாரணச் சிறையில்தான் இருக்கிறார்கள். அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களுக்குச் சிறையின் மாடியில் தனித்தனியாக செல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடையில் மூன்று செல்களை சும்மா வைத்திருக்கிறார்கள். அவற்றில் எந்த வசதிகளும் இல்லை. தண்டனையை அறிவித்த நீதிமன்றம், இவர்களுக்கு என்ன மாதிரியான சலுகைகளைக் கொடுக்கலாம் என்பதை, சிறைத்துறை அதிகாரிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியது. சிறை விதி 348-ன்படி, இவர்கள் முதல் வகுப்பு கைதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள், கைதி சீருடை அணியத் தேவையில்லை. சமையல் செய்யவும், உதவிக்கும் ஆள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதில் எந்தச் சலுகையும் சின்னம்மாவுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர் சிறையைவிட்டு வெளியே சென்றதாகச் சொல்லப்படுவது கடைந்தெடுத்தப்பொய். சின்னம்மா தன் வக்கீல்களைக்கூட, சிறை அதிகாரியின் அறைக்கு அருகிலுள்ள அறையில்தான் சந்தித்துள்ளார். சர்க்கரை நோய், கழுத்து வலி, முதுகு வலி, கண்ணில் நீர்வடிதல் எனக் கடும் உடல் உபாதைகளுடன் இருக்கும் சின்னம்மா, சிறையில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

“அப்படியென்றால் டி.ஐ.ஜி ரூபா எழுப்பியப் புகார்கள் பொய் என்கிறீர்களா?’’

“டி.ஐ.ஜி ரூபாவைப் பற்றி பல தகவல்கள் வருகின்றன. அவர் விளம்பரம் தேடிக்கொள்ளவே இப்படியெல்லாம் அவதூறுப் பரப்புகிறார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால் நேரடியாக வரட்டும். காவல் துறையில் சேர்வதற்கு முன்பு, அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் அவர். அதனால் எப்போதும் மீடியா வெளிச்சம், தன் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். துறைரீதியாக அவருக்கு இருமுறை மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்தவர், சிறைத் துறை ஐ.ஜி மீது பழிபோட்டிருக்கிறார். ரூபா மீது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார் சத்ய நாராயணா. அதில் உண்மைகள் வெளிவரும். நாங்களும் அவர் மீது வழக்கு தொடரவிருக்கிறோம்.’’

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

“டி.ஜி.பி சத்யநாராயணாவை நீங்கள் சந்தித்ததே இல்லையா?’’

“சின்னம்மாவைச் சந்திக்கச் சிறைக்குச் சென்றபோது, நாங்கள் கொண்டுசென்றப் பழங்களை அனுமதிக்க முடியாது என்று தடுத்தார் அவர். அப்போது மட்டும்தான் அவரைப் பார்த்தேன். வேறு எப்போதும் பார்த் ததில்லை. போனில்கூட பேசியதில்லை. அரசியலுக்காக ஒரு அதிகாரி மீது பழிபோடுவது தவறு.”

“லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உங்களிடம் என்ன விசாரித்தார்கள்?’’

“என்னுடைய மொபைல் போன் கான்டாக்ட் பட்டியலை வைத்துக்கொண்டு இவர் யார், அவர் யார் என்று கேட்டார்கள். கட்சி நிர்வாகிகள், தெரிந்த நண்பர்கள் என்று விளக்கமாகச் சொன்னேன். டி.ஜி.பி-யுடன் நான் பேசியிருக்கிறேனா என்பதையும் சோதனை செய்தார்கள். எதுவும் கிடைக்கவில்லை.’’

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

“வேறு யாரையும் விசாரிக்க உள்ளார்களா?’’

“சின்னம்மா, இளவரசி ஆகியோரின் உறவினர்களிடம் விசாரிப்பதாகச் சொன்னார்கள்.’’

“கொடநாடு கொள்ளை, கொலை விவகாரங்கள் பற்றி..?”

“எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரிடம் விசாரிக்க வேண்டும். இருவரையும் முறையாக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும்.

- செ.சல்மான், அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!

புகழுக்காகச் செய்யவில்லை!

பு
கழேந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.ஜி ரூபாவிடம் கேட்டோம். “சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கியது குறித்த எனது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையே. இதை வினய்குமார் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கை உறுதிசெய்துள்ளது. முன்னாள் டி.ஜி.பி சத்ய நாராயணா, எனக்கு எந்த மெமோவும் வழங்கவில்லை. அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றனர். அவர்களின் கருத்துகளுக்கு நான் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. இந்த விசாரணைக்குழுவின் அறிக்கைகூட எனக்கு முறையாக வழங்கப்பட வில்லை. ஆர்.டி.ஐ-யின் கீழ் போராடி, பல மேல்முறையீடுகளுக்குப் பிறகு, இந்த அறிக்கையை ஒரு சாதாரண நபராகப் பெற்றிருக்கிறேன். என் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் அளிக்கவே இதைச் செய்தேன். இந்த விஷயத்தை வைத்துப் புகழ்பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

- எம்.வடிவேல்