Published:Updated:

ரோசையாவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: பெண் வழக்கறிஞர் கைது!

ரோசையாவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: பெண் வழக்கறிஞர் கைது!
ரோசையாவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: பெண் வழக்கறிஞர் கைது!
ரோசையாவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: பெண் வழக்கறிஞர் கைது!

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ரோசையா மற்றும் காங்கிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா. இவர் அம்மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய தமிழக கவர்னர் ரோசையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணா மோகனுக்கு எதிராகவும் ஃபேஸ்புக் இணைய தளத்தில் கருத்து பதிவு செய்தார்.

ரோசையா முதலமைச்சராக இருந்தபோது அவருடனான நெருக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, நிலங்களை வளைத்துப்போட்டு மோசடி செய்ததாக அவர் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

##~~##
இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. போலீசில் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் ஜெயாவை இன்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.