Published:Updated:

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 
அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2HzFHbP

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 


"அதேதான்... 'புதுச்சேரி உட்பட ஒட்டுமொத்தமாக நாற்பது தொகுதிகளுக்கும் சேர்த்து, 1,200 கோடி ரூபாய் வரை செலவாகும். தி.மு.க கூட்டணியில் வி.ஐ.பி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகள் என்றால், கூடுதலாக இருபது கோடி ரூபாய் வரை செலவுசெய்ய வேண்டிவரும். பி.ஜே.பி நம்முடன் அணி சேர்ந்தால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் பூத் கமிட்டிக்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய் தருவார்கள். மீதித்தொகையை நாம்தான் செலவுசெய்ய வேண்டிவரும். ஆகக்கூடி, குறைந்தது 1,500 கோடி ரூபாய் தேர்தல் செலவாகச் செய்யவேண்டியிருக்கும்' என்றெல்லாம் தேர்தல் கணக்குகளை வைத்துப் பேச்சு வந்ததாம்."

"அடேங்கப்பா... 1,500 கோடியா?"

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

"500 கோடி ரூபாய் எங்கள் பொறுப்பு. மீதி ஆயிரம் கோடி ரூபாய் உங்கள் தரப்பிலிருந்து கொடுக்க வேண்டும் என்று அமைச்சர்களை நோக்கிச் சொல்லப்பட, மறுபடியும் சீறிவிட்டாராம் சட்டப்பிள்ளை. 'நான் வைத்திருக்கும் துறையே வருமானம் இல்லாத துறை. பொதுப்பணித்துறையை வைத்திருப்பவர்கள் மொத்தத் தொகையையும் கொடுக்கலாமே. இல்லையென்றால் அந்தத் துறையை என்னிடம் கொடுத்துப்பாருங்கள். முழுத்தொகையையும் நானே கொடுக்கிறேன்' என்று மீண்டும் வம்படியாக அவர் பேச, எடப்பாடி தரப்பு அப்செட்டோ... அப்செட்!"

- தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, செலவு இதையெல்லாம் பேசப்போய், முதல்வர் வீட்டில் பெரிதாக வில்லங்கமே வெடித்திருப்பது குறித்து 'தேர்தல் பட்ஜெட் 1500 கோடி: பாய்ந்த அமைச்சர்கள்... பம்மிய எடப்பாடி' என்ற தலைப்பில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் மிஸ்டர் கழுகு.

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

பிரியங்காவின் பலம், 'இரண்டாம் இந்திரா' இமேஜ். தோற்றம், நடை, உடை, பேச்சு என்று சகலத்திலும் பாட்டியைப் பிரதிபலிப்பவர் பிரியங்கா. அதனால்தான், அவரை அப்படி ஆராதிக்கிறார்கள் மக்கள். ஆனால், இந்திராவின் அரசியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது பிரியங்காவின் அரசியல். பாட்டியைப்போல பாதுகாவலர்கள் சூழ வலம்வந்தாலும், மக்களிடம் நெருக்கமாக இருப்பதையே விரும்புவார் பிரியங்கா. தேர்தல் பிரசாரங்களுக்குப் பயணிக்கும் போது, எப்போது வேண்டுமானாலும் காரை நிறுத்தச்சொல்லிக் கீழே இறங்குவார். மக்கள் அவரது கையைப் பிடித்தும், கன்னத்தைத் தொட்டும் கோரிக்கை வைப்பார்கள். இதுபோன்ற செயல்களை இந்திராவிடம் பார்க்க முடியாது. பிரியங்கா புள்ளிவிவரப் புலியும் அல்ல. எளிய பேச்சுநடையிலான வெகுஜன உரையாடல் அவருடையது. அது, எளிய மக்களை எளிதில் அவர் பக்கம் திருப்பும். ஆனால், அரசியலில் இன்னொருவரைப் பிரதிபலிக்கும் இமேஜ் ஒரு கட்டம் வரை மட்டுமே கைகொடுக்கும். அதற்குப் பிறகும் அதையே நம்பினால், காலை வாரிவிடும்...

- பிரியங்காவின் அத்தியாவசிய அரசியல் பிரவேசம் எந்த அளவுக்கு எடுபடும் என்று விரிவாக அலசுகிறது 'பிரியங்கா பிரம்மாஸ்திரம்! - காங்கிரஸ் ஏவும் கடைசி ஆயுதம்...' எனும் சிறப்புப் பார்வை. 

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

கூடுதலாக மாயாவதியை, "எங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர்" என்றும் அறிவித்திருக்கிறார் அகிலேஷ். ஏற்கெனவே, பிரதமர் ஆசை கொண்ட தலைவர்களின் வரிசை நிறைந்து வழிகிறது. "மோடி என்னைவிட ஜூனியர். மோடியே பிரதமர் ஆகும்போது, நான் ஆகக்கூடாதா?" என்கிறார் சந்திரபாபு நாயுடு. "இரண்டுமுறை தொடர்ந்து வென்றிருக்கிறேன். இது என் நிர்வாகத் திறனுக்குக் கிடைத்த வெற்றி. எனக்கு இல்லையா தகுதி?" என்கிறார்  சந்திரசேகர் ராவ். "மோடியே என்னைக் கண்டு பயப்படுகிறார். நானே அடுத்த பிரதமர்" என்கிறார் மம்தா. இந்தச் சதுரங்க ஆட்டத்தில் 'யானை'யை நகர்த்திவைத்து, ராஜாக்களுக்கு 'செக்' வைத்திருக்கிறார் அகிலேஷ். சொல்லப்போனால் மாயாவதி இவர்கள் அனைவருக்குமே சீனியர். "என்றாவது ஒருநாள் இந்தியாவின் பிரதமர் ஆவேன். அதற்குரிய தகுதி எனக்கு இருக்கிறது" என்று, தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தபோதே அதிரடி காட்டியவர். இப்போது அவரது பிரதமர் கனவுக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறார் அகிலேஷ். 

- உத்தரப் பிரதேச அரசியல் நிலவரத்தை கச்சிதமாக அலசிக் காட்டுகிறது 'அத்தையும் மருமகனும் கலைத்த காங்கிரஸின் கனவு!' எனும் சிறப்புக் கட்டுரை. 

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

'தி.மு.க தலைமையிலான கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார மாநாடு' என்று வர்ணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த கூட்டத்தால் திருச்சி நகரம் திணறிப்போனது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம் காப்போம்' மாநாடு திருச்சியில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி, காவல்துறை ஆணையரிடம் பி.ஜே.பி., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மனுக் கொடுத்திருந்தனர். அதனால், ஆரம்பம் முதலே திருச்சியில் பரபரப்பு நிலவியது. இந்த மாநாட்டுக்காக, திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2HzFHbP

டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தி.மு.க மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல் படுகிறோம். மோடியின் ஆட்சியில் தலித்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு இல்லை. அதானி களும் அம்பானிகளும் தான் இந்த ஆட்சியில் வளர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. கம்யூனிஸ்ட்களைப் பயங்கரவாதிகளாகவும், விடுதலைச் சிறுத்தைகளை வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கிறார்கள். அவற்றையெல்லாம் கடந்து, வரும் தேர்தலில் 40-க்கு 40 வெற்றிபெறுவோம்" என்றார். 

- வைகோ, சீதாராம் யெச்சூரி, திருநாவுக்கரசர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசியதன் முக்கிய அம்சங்களைப் பதிவு செய்திருக்கும் செய்திக் கட்டுரை: "தமிழக ஆவி ஆட்சியும் மத்திய காவி ஆட்சியும் ஒழிக்கப்பட வேண்டும்!" - 'தேசம் காப்போம்' மாநாட்டில் முழக்கம்!

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

"சமுக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீட்டுத் தத்துவத்தை, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பிரித்துப்பார்ப்பது சரியா?"

"இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. அதுவும்கூட பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்ற நிபந்தனையுடனே கொடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு, பிற்காலத்தில் வந்தது. அன்றைய காலக்கட்டம் முதலே, 'முற்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்' என்பதுதான், இடதுசாரிகளின் கருத்தாக இருந்துவருகிறது. நாங்கள் எப்போதும் இதில் தெளிவாக இருக்கிறோம். எனவே, இந்த முடிவைத் திடீரென நாங்கள் எடுக்கவில்லை."

- முற்பட்ட சமூகத்தினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்த இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது. உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, தமிழக அரசியல் களத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜன் அளித்துள்ள "இது ஒன்றும் திடீர் முடிவு அல்ல!" எனும் சிறப்புப் பேட்டி கவனத்துக்குரியது. 

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2S8qhPX

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

...தம்பிதுரையிடம் குறுக்கு விசாரணை செய்த சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், "நீங்கள் 2018, மார்ச் 29-ம் தேதி லண்டனில் டாக்டர் ரிச்சர்ட் பீலேவைச் சந்தித்தது உண்மையா?" என்று கேட்டதும், ஒரு நிமிடம் அமைதி காத்தார் தம்பிதுரை. பின்பு, "ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வருவதற்கு முன்பு அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. ரிச்சர்ட் பீலே நல்ல மருத்துவர். ஆனால், அவர் எந்தத் துறையில் சிறப்பு மருத்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரை லண்டனில் நான் சந்தித்தது உண்மைதான். எனது உடல்நிலை குறித்து அவரிடம் கேட்டேன். அவர் வேறு ஒரு மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார்" என்று சொல்லியுள்ளார் தம்பிதுரை.

- ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரை, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை லண்டனில் வைத்து ரகசியமாகச் சந்தித்ததை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை பின்னணியுடன் தந்திருக்கிறது 'பீலேவை லண்டனில் சந்தித்த தம்பிதுரை! - ஆணையத்தில் வெளியான ரகசியம்' எனும் செய்திக் கட்டுரை. 

அரசியல் 'கணக்குகள்' - 5 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 7 தெறிப்புகள்! 

ஓவியக் கண்காட்சி நடத்திய முகிலனின் தரப்பில் பேசியவர்களோ, "இதற்கு முன்பு குஜராத் கலவரம் தொடர்பாகத் தஞ்சையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் முகிலனின் படங்கள் வைக்கப் பட்டிருந்தன. அந்தப் படங்களைப் பார்த்து, மக்கள் கண்ணீர்விட்டனர். தன் படைப்புகள் அனைத்தும் மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. இது பெரியார் பிறந்த மண். இங்கு இந்துத்வவாதிகளின் வேலைகள் எடுபடாது. முகிலனின் கையை வெட்டுவோம் என்கிறார்கள். ஆனால், அவரது தூரிகையில் உள்ள ஓர் இழையைக்கூட அவர்களால் பறிக்க முடியாது" என்றார்கள்.

"மானுடத்தை நேசிக்கும் மனிதனாக இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னைச் சிலர் மத அடையாளத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அது அவர்களால் முடியாது. அவர்கள் என்னை விமர்சிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது" என்று வெடிக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். லயோலா 'வீதி விருது' நிகழ்ச்சியின் பின்னணியில் பி.ஜே.பி-யினர் சிலர் இவரை விமர்சித்ததைத் தொடர்ந்துதான் இப்படிக் கொந்தளித்துள்ளார். - முழு பின்னணியை விவரிக்கிறது 'லயோலா விவகாரம்... நடந்தது என்ன?' எனும் செய்திக் கட்டுரை. 

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2S8qhPX