
ஐடியா அய்யனாரு!
தேர்தல் பிரசாரத்தை முந்திக்கொண்டு தொடங்கியிருக்கிறது பி.ஜே.பி. முன்னாள் பிரதமரைக் குத்தம் சொல்லும் ‘தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’, இந்நாள் பிரதமரைப் போற்றிப் பாடும் ‘உரி’ என வரிசை கட்டித் திரைப்படங்களை இறக்குகிறார்கள். இதே ரீதியில் மற்ற கட்சிகளும் கோலிவுட்டில் களமிறங்கினால்?

ரத்தத்தின் ரத்தம்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை
இயக்கம்: எடப்பாடி பழனிசாமி
இணை இயக்கம்: ஓ.பி.எஸ்
வசனங்கள்: அமைச்சர் ஜெயக்குமார்
த்ரில்லர் காட்சியமைப்புகள்: டி.டி.வி தினகரன்
தயாரிப்பு அலுவலக அட்ரஸ் : 6A, பண்டிட் தீன்தயாள் உபாத்யாய மார்க், புது டெல்லி.
வந்தா முதல்வராதான் வருவேன்
இயக்கம்: சபரீசன் அண்டு கோ
வசனங்கள்: ஸ்டாலினும் அவரது துண்டுச்சீட்டுக் குறிப்புகளும்
காமெடி டிராக் : துரைமுருகன்
கெளரவத் தோற்றம்: மூன்றாம் கலைஞர் உதயநிதி
பக்கத்து இலையிலிருந்து எடுக்கப்பட்ட பாயாசம்
தயாரிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கதை: சொந்த ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி பல ஆண்டுகள் ஆவதால், கூட்டணியிலிருந்து கடன் வாங்கிக்கொள்வார்கள்.
சண்டைக் காட்சிகள்: காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்.
நிர்வாக ஒருங்கிணைப்பு : ராகுல் - பிரியங்கா!
தமிழனும் டி.என்.ஏ-வும்
கதை, வசனம்: அண்ணன் சீமான்
ஸ்கிரிப்ட் உதவி மற்றும் உதவி இயக்கம்: அண்ணனின் விழுதுகள்
பார்வையாளர்கள்: லண்டன், கனடா வாழ் தமிழர்கள்.
ஆளவந்தான் ஆண்டவன்
கதை, வசனங்கள், நடிப்பு, கலை, இசை, இயக்கம், வி.எஃப்.எக்ஸ், மேக்கப், இதுபோக இன்னும் பல விட்டுப்போன வேலைகள் எல்லாமே கமல்ஹாசன் ஒருவரே கவனித்துக்கொள்கிறார்.
ரிலீஸ் : இரண்டு வரிக்காட்சிகளாக வெட்டி, ட்விட்டரில் ரிலீஸ் செய்யும் திட்டம் இருக்கிறது. அப்படி ரிலீஸானால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் எல்லாம் சைடு வாங்கிக்கொள்ளும்!