Published:Updated:

``மோடியின் வருகை கொங்குமண்டலத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கும்'' - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

``மோடியின் வருகை கொங்குமண்டலத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கும்'' - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!
``மோடியின் வருகை கொங்குமண்டலத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கும்'' - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

'பாண்டிய மண்டலத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் போலவே கொங்குமண்டலத்திலும் பிரதமர் மோடியின் வருகை மாபெரும் எழுச்சியை உண்டாக்கும்' என மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

``மோடியின் வருகை கொங்குமண்டலத்தில் மாபெரும் எழுச்சியை உண்டாக்கும்'' - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில், பா.ஜ.க சார்பில் பிப்ரவரி 10 -ம் தேதி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தைப் பார்வையிடுவதற்காக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருப்பூர் வந்திருந்தார்.  மைதானத்தைப் பார்வையிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சமீபத்தில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவிலான மக்கள்  வந்திருந்தனர். அதேபோல, அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கும் குறைந்தபட்சம் 2 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள். பிரதமர் மோடி வந்தபோது பாண்டிய மண்டலமான மதுரையில் ஏற்பட்ட எழுச்சியைப் போலவே, கொங்குமண்டலத்தின் திருப்பூரிலும் ஒரு மாபெரும் எழுச்சி உண்டாகும்.

மேலும், மதுரையில் அமைய உள்ள மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதற்கு முன்பாகவே பா.ம.க-வின் அன்புமணி ராமதாஸ் அடிக்கல் நாட்டியதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுவந்தது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல, மத்திய அரசின் மீதான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் குற்றச்சாட்டுக்கு, நானும் அண்ணன் தம்பிதுரையும் தனியாகப் பேசிக்கொள்ளும்போது, பல விஷயங்களைப் பற்றி யோசித்திருப்பதாகவும், அதனால் அதுகுறித்தும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்றும் தெரிவித்துவிட்டு நகர்ந்தார்.