Published:Updated:

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!
அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2HFEdNn

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"பிரதமர் மோடி மதுரைக்கு வருவதற்கு முன்பாக, கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க-விலிருந்து 'கிரீன் சிக்னல்' வருமென்று, பி.ஜே.பி தரப்பில் எதிர்பார்த்தனர். இதற்காகவே கடந்த ஒரு மாதமாக அ.தி.மு.க தரப்புக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தினர். ஆனால், பி.ஜே.பி மேலிடத் தரப்பு நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க-வின் பெரும்பாலான தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பி.ஜே.பி கூட்டணியை விரும்பவில்லை. அதனால்தான், கூட்டணி பற்றி எந்த முடிவையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுக்கவில்லை. அதேசமயம் கட்சியில் முழுமையாக ஆளுமை செலுத்தும் முடிவுக்கும் முதல்வர் தரப்பு வந்துவிட்டது என்கிறார்கள்." 

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"...ஒருவழியாக இறங்கிவந்த எடப்பாடி தரப்பு, கூட்டணி பற்றிப் பேசுவதற்காக, மொழிபெயர்ப்பு உதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரை, மதுரை விமான நிலையத்திலேயே இருக்கச் சொல்லியிருக்கிறது. பிளான்படி விமான நிலையத்தில் எடப்பாடி தரப்பு பேச ஆரம்பித்ததும், 'கூட்டணி குறித்தெல்லாம் அமித் ஷாவிடம் பேசிக் கொள்ளுங்கள்' என்று முகத்தில் அடித்ததுபோல சொல்லிவிட்டாராம் மோடி."

- பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது முதல் எல்லாம் முடிந்து புறப்பட்டது வரையில் நடந்த உள்ளரசியலை உள்ளபடியே சொல்லியிருக்கிறார் மிஸ்டர் கழுகு. 

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

" 'ரெட்டைமலை சீனிவாசன், கக்கன் போன்ற தலைவர்கள் சமூக ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்கள். ஆனால் திருமாவளவனோ, 'இந்து சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துகிறார்' என்கிறாரே பொன்.ராதாகிருஷ்ணன்?"

"காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தவர், தலைவர் கக்கன். அவருக்கு அம்பேத்கர் - பெரியார் சிந்தனைகள் தொடர்பான தாக்கம் இல்லை. ஆனால், எனக்குள், அம்பேத்கர் - பெரியார் சிந்தனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சனாதன எதிர்ப்பு என்பது அம்பேத்கர் முன்வைத்த அரசியல்தான். மற்றபடி நானாகப் புதிதாக எதையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. எனவே, என்மீது பொன்.ராதாகிருஷ்ணன் வைக்கிற குற்றச்சாட்டு என்பது அம்பேத்கருக்கு எதிராக அவர் வைக்கிற குற்றச்சாட்டு என்றுதான் அர்த்தம்."

- மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களைத் திரட்டி, திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய 'தேசம் காப்போம்' மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கியக் கேள்வி, 'சனாதனமா... ஜனநாயகமா?' என்பதுதான். அந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் சனாதானக் கோட்பாட்டைக் கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து எதிர் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 'தேர்தலுக்காக விட்டுக்கொடுத்தல்கள் தவறு இல்லை!' எனும் சிறப்புப் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

மணல் கொள்ளையை போலீஸார் கண்டுகொள்வதில்லை என்று பல இடங்களில் புகார்கள் உள்ள நிலையில், 'மணல் கொள்ளையைத் தடுத்ததால் எங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்' என்று அலறுகிறார்கள் வேலூர் மாவட்ட போலீஸார். இதற்கெல்லாம் காரணம் என்று அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளர் ஷியாம்குமாரைக் கைக்காட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட காவல்துறையினர். 

"அரக்கோணம் போக்குவரத்து போலீஸார், கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு மணல் கடத்தல் லாரிகளைப் பறிமுதல் செய்தனர். உடனே மணல் கடத்தல் நபர்கள், ஷியாம்குமாருக்கு போன் செய்தனர். மறுநாளே லாரி மணலுடன் மீட்கப்பட்டுள்ளது. சில நாள்களில் , மணல் கடத்தலைத் தடுத்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்கள்" என்றார் போலீஸ் அதிகாரி ஒருவர். 

- உள்துறையின் உறக்கம் கலைவது எப்போது? என்ற கேள்வி எழுப்பியிருக்கும் 'அலறவிடுகிறார் அமைச்சரின் உதவியாளர்! - கதறும் வேலூர் காக்கிகள்...' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை அம்பலப்படுத்தும் தகவல்கள் ஏராளம்.

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

'மறைந்த ஜெயலலிதாவுக்காக அரசு செலவில் நினைவு இல்லம் கட்டுவதற்குத் தடை இல்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவு அதிர்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில், அவர் சட்டப்படி குற்றவாளியல்ல என்று கருதுவதாக இரு நீதிமன்ற அமர்வு முடிவுசெய்துள்ளது அதைவிட அதிர்ச்சியளிக்கிறது. இது தவறான கருத்தாகும். இதற்காக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், நீதிபதிகள் செய்த முடிவு சரிதானா என்று ஆராய்வதற்கு முன்பு, முந்தைய சில வழக்குகளைப் பார்த்து, 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கருதும் நீதித்துறைக்கு, மிகப்பெரும் அதிர்ச்சி இந்தத் தீர்ப்பு என்று 'ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா?' தலைப்பிலான சிறப்புப் பார்வையில் நிறுவியிருக்கிறார் சென்னை உயர் நிதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு.

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் 'சம்பளம்தான் பிரச்னை' என்று நினைக்கிறார்கள். பிரச்னை சம்பளம் மட்டுமல்ல... தமிழகத்தில் 3,500 தொடக்கப் பள்ளிகளை இணைக்கிறார்கள். 'இணைப்பு' என்பது நாசூக்கான சொல். 'மூடுதல்' என்பதே அதன் புதைகுழி அர்த்தம். ஆரம்பக் கல்வியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முதல்படி இது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைகிறது எனில், அதைச் சரிசெய்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. அதை விடுத்து, பள்ளிகளை மூடினால் மாணவர்களின் கதி என்னவாகும்? இன்னமும்கூட, பெண்ணுக்கான கல்வியை மறுக்கும் பெற்றோர் இங்கு உண்டு. பெண்களின் எதிர்காலத்தில் மண் அள்ளிப்போடுவதுதான் அரசின் லட்சணமா? ஆனால், இதே அரசுதான் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து, அந்தப் பள்ளிகளுக்கு பல கோடி ரூபாயை ஒதுக்குகிறது. இதில் கோடிகளில் கமிஷன் புரள்கிறது. போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். அதைக் கவனிக்க வேண்டும்.

- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தின் பின்புலத்தையும், உண்மை நிலவரத்தையும் சொல்கிறது 'சம்பளத்துக்காக மட்டுமே போராடவில்லை' எனும் சிறப்புப் பார்வை.

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

ஒன்று, தமிழக அரசு, 'ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி இல்லை' என்று அறிவிக்க வேண்டும். இல்லை, அமல்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஏற்பாடு செய்துவிட்டு அறிவிப்பு கொடுக்கவேண்டும். ஆனால், இரண்டும்கெட்டானாக, 'ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்துகிறோம்' என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, திணறிவருகிறது. 2016, ஜனவரி 1-ம் தேதியிலிருந்து 21 மாதங்களுக்கு இவர்களுக்கான தொகை நிலுவையைத் தர வேண்டும். ஆனால், பொங்கலுக்கு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசை வழங்கியது எவ்வளவு பெரிய துஷ்பிரயோகம்? இவை மட்டுமல்ல... 

எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கு எந்த ஆசிரியர்களைப் நியமிப்பது என்பதில் இந்த அரசுக்குத் தெளிவு இல்லை. ஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மூடப்படும் என்கிற அச்சம்... இவையும் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குக் காரணமாகின்றன. 

- சிறு விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், சிறுதொழில் செய்வோர், தனியார் நிறுவனங்களில் சராசரி பொறுப்புகளில் பணிபுரிவோர் இவர்கள் யாரைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் சம்பளம் பெறும் 'அரசு ஊழியர்களில் எத்தனைப் பேர் உண்மையாக, நேர்மையாக உழைக்கிறார்கள்' என்கிற கேள்வி இப்போராட்டத்தின்போது மக்களிடம் எழுவது தவிர்க்க முடியாதது என்ற வாதத்தையும் முன்வைக்கிறது மற்றொரு சிறப்புப் பார்வை.

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"ஊட்டி நகராட்சியில் மட்டுமே ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள், விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் அரசுக் கட்டடங்களும் அடங்கும். யானை வழித்தடங்களில் உள்ள சொகுசு விடுதிகளை அகற்றியபோது, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வேலை நடந்தது. குன்னூரில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் விதிகளை மீறிக் கட்டிய கட்டடத்துக்கு, நகராட்சி கமிஷனர் சரஸ்வதி சீல் வைத்தார். கடுப்பான ஆளுங்கட்சியினர், அமைச்சரிடம் சொல்லி அவரை இடமாற்றம் செய்துவிட்டனர். இங்கிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் அலுவலகமே விதிகளை மீறிக் கட்டப்பட்டதுதான்" என்று அடுக்கினார்கள்.

- ஒருகாலத்தில் சோலைக்காடாக இருந்த நீலகிரி, இப்போது கான்கிரீட் காடாகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில், விதிகளை மீறிய கட்டடங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நீலகிரியின் இயற்கை வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்த கள அலசல் தருகிறது 'மலையெங்கும் முளைக்கும் கட்டடங்கள்... ஆபத்தின் உச்சத்தில் நீலகிரி!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

மாநகராட்சியின் எட்டாவது மண்டலமான அண்ணாநகரில் நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், "ஊழல் கண்காணிப்புத் துறையே ஒரு கொள்ளைக் கும்பல் மாதிரி செயல்படுது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் யார் யார்னு கணக்கெடுப்பாங்க. ஊழல் அதிகாரி மேல புகார் கொடுக்கச் சொல்லி, கீழ்நிலை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுப்பாங்க. யாருமே ஒத்துவரலைனா, மொட்டை பெட்டிஷன்  போடுவாங்க. அந்த பெட்டிஷன் இவங்களுக்கே விசாரணைக்காக வரும். அதை வெச்சிக்கிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேரம் பேசுவாங்க. பேரம் படிஞ்சதும் 'க்ளீன் சர்டிபிக்கேட்' கொடுத்துடுவாங்க" என்றார்கள்.

- சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டிய ஊழல் கண்காணிப்புத் துறையே ஊழலுக்குத் துணைப்போவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அடிக்கடி நீதிமன்றத்திடம் மாட்டி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விழி பிதுங்குகின்றனர். இதை விவரிக்கும் முக்கியமான செய்திக் கட்டுரை: ஊழலுக்குத் துணைபோகிறதா ஊழல் கண்காணிப்புத் துறை? - விழிபிதுங்கும் சென்னை மாநகராட்சி!

அவலங்களும் கருத்துகளும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் குலைத்துப்போட்ட மக்களின் வாழ்க்கை இன்னும் சீரடையவில்லை. புயலின் கொடூரத் தாக்குதலில் வீடு வாசல், கால்நடைகள், தோட்டங்கள் என மொத்தத்தையும் இழந்த மக்கள், இந்த நிமிடம்வரை நாதியற்றுக் கிடக்கிறார்கள். புயல் பாதித்த சில தினங்களில் மட்டும் ஏரியாவில் சுற்றித்திரிந்த அமைச்சர்களும் அதிகாரிகளும், அதன் பிறகு எட்டிக்கூடப் பார்க்கவில்லை. புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைத்துவிட்டதா என்பதை அறிவதற்காக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விசிட் செய்தோம். பெரும்பாலான ஊர்கள் களையிழந்து காணப்பட்டன. குறிப்பாக, பொங்கல் பண்டிகையின்போது பல வீடுகளில் பொங்கல் வைக்கவில்லை. நாம் சந்தித்த அனைவருமே, "ஊர் உலகத்துக்கே சோறு போட்ட எங்க நிலைமையைப் பார்த்தீங்களா..." என்று கண்கலங்கிப் பேசினார்கள். 

- தற்போதைய நிலவரத்தை மக்களின் மொழியிலேயே தரப்பட்ட மிக முக்கியமான செய்திக் கட்டுரை: "தை பிறந்தது... வழி பிறக்கவில்லை!" - கஜா நிவாரணம் கிடைக்காமல் கதறும் டெல்டா மக்கள்

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2HHGurc