Published:Updated:

சீன ஊடுருவல்: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மீது மோடி கடும் சாடல்

சீன ஊடுருவல்: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மீது மோடி கடும் சாடல்
சீன ஊடுருவல்: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மீது மோடி கடும் சாடல்
சீன ஊடுருவல்: மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை மீது மோடி கடும் சாடல்

புதுடெல்லி: எல்லையில் ஊடுருவிய எதிரி நாட்டுடன் ( சீனா ) உறவு பாராட்டுவதாக கூறி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.

குஜராத் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள குஜராத்தியர்கள் அமெரிக்காவின் 18 நகரங்களில் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே உரையாற்றிய அவர், மேற்கண்ட குற்றச்சாட்டை கூறினார்.

ஊடுருவல் விவகாரத்தில் நமது ராணுவத்தினரை நாம் கையாலாகதவர்களாக்கி விட்டதோடு, ஊருவலுக்கு காரணமான நாட்டின் பிரதமருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிக்கொண்டிருக்கிறோம். தனக்கு சொந்தமான நிலத்திலிருந்து நமது படையினரை வாபஸ் ஆகுமாறு இந்திய அரசு ஏன் சொன்னது என்று எனக்கு புரியவில்லை என்றும்,
சமீபத்தில் சீனா தனது ஆக்கிரமிப்பை திரும்பப் பெற்றுக்கொண்ட விஷயத்தில் அரசு என்ன செய்தது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

##~~##
குஜராத் அரசை மத்திய அரசு விமர்சிக்கிறது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவிய விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்தது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். சீன ராணுவம் ஊடுருவல் விஷயத்தில் மத்திய அரசு 120 கோடி மக்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் தலைமை தவறான வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குஜராத்தின் முன்னேற்றம் உலகம் முழுவதும் உற்றுநோக்கப்படுவதாக குறிப்பிட்ட மோடி, இது தனது வெற்றி அல்ல என்றும், 6 கோடி குஜராத்தியர்களின் வெற்றி என்றும் தெரிவித்தார்.
குஜராத்தின் வளர்ச்சி ஒருங்கிணைந்த வளர்ச்சியாக உள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்கும் உயரிய தொழில்நுட்பங்கள் சென்றடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது செயல்பாடுகளைத்தான் மக்கள் கவனிக்கிறார்களே தவிர தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை அல்ல என்றும் மோடி தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியதாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த மோடி, அதற்கானப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.