Published:Updated:

`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்

`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்
`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்

``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொள்ளை, கொலைப் பழி வந்திருக்கு. நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்காமல்  விடாப்பிடியாக முதல்வர் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்’’ என்று தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.

`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்

ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ``எந்தத் தேதியில் எப்போது தி.மு.க-வில் இணையப்போறீங்க என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு சிரிப்புடன் பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், `எப்படிச் சொல்றீங்க. எதை வச்சு சொல்றீங்க?’ என்று வினா எழுப்பினார். அப்போது, செய்தியாளர், தகவல் அடிப்படையில் கேட்கிறேன் என்றார். உடனே தங்க தமிழ்ச்செல்வன், எப்படித் தகவல் அடிப்படையில் கேட்கிறீங்க என்று கேள்வி எழுப்பினார். மேலும், எப்படி நான் தி.மு.க-வில் இணைய முடியும்? தவறான செய்தியை ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கிட்டே இருக்கீங்க. இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல. இது தவறான செய்தி.

இதேபோல்தான் செந்தில் பாலாஜி சொன்னார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அவர் சொல்லவே இல்லையே. அவரிடம் நீங்க கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. நீங்க என்னிடம் கேட்கிறீங்க, நான் சொல்றேன். எங்க குடும்பம் எப்போதும் எம்.ஜி.ஆர் குடும்பம்தான். எங்க குடும்பத்துக்கு எல்லாம் அ.தி.மு.க, இரட்டை இலைதான். இன்று நேரம் சரியில்லாம அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து அ.தி.மு.க-வை கைப்பற்றுவதற்காக சசிகலா, தினகரன் தலைமையில் இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அ.தி.மு.க, இரட்டை இலையைக் கைப்பற்றி ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவோம். தி.மு.க-வில் நான் இணையப்போவது எல்லாம் தவறான செய்தி. யாரும் நம்ப வேண்டாம்.

செந்தில் பாலாஜி, அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு ஆட்களை இழுப்பதாகத் தகவல் வெளியாகியிருக்குது. உங்கள் நண்பர் செந்தில் பாலாஜி அழைத்தால் தி.மு.க-வுக்கு செல்வீர்களா?

``அவர் எனக்கு நண்பர்தான். நண்பர் கூப்பிட்டால் போய்விடுவாங்களா? அது தவறான செய்தி.’’

பா.ம.க, கமல்ஹாசனுடன் அ.ம.மு.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறதே?

``எல்லாக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வந்த பிறகும் எல்லாக் கட்சிக்கும் கூட்டணி பற்றி பேசுவதற்கு உரிமை இருக்கு. அதைத் தடுக்க முடியாது. கடைசி நாளில்தான் யார் பக்கம் போறோம் என்று முடிவு பண்ணுவோம். இன்றைக்கு இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் செய்திகள் கசியும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இரண்டு கட்சிகளுடன் பேசுது, அங்க பேசுறாங்க இங்க பேசுறாங்கன்னு செய்தி கசியும். ஊர்ஜிதமா நம்ப வேண்டாம். கடைசிநாளில்தான் இறுதி முடிவாக இருக்கும்.’’

`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்

ஸ்டாலின் கிராம சபைக் கூட்டம் நடத்துவது பற்றி உங்கள் கருத்து?

``எங்கள் துணை பொதுச் செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஏற்கெனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இப்படி கூட்டம் நடத்தவில்லை. இன்றைக்கு கிராம சபைக் கூட்டம் நடத்துகிறார். அவங்க கட்சி நடத்துது. அதில் நாம தவறு சொல்லக் கூடாது. இந்தக் கூட்டத்துல கட்சிக்காரங்கதான் இருக்காங்க. இந்தக் கூட்டம் செயற்கை மாதிரி இருக்கு. இயற்கையா மக்களிடம் வந்து அவர்களின் கருத்தைக் கேட்டால் நல்லா இருக்கும். இது என்னுடைய கருத்து.’’

தமிழக முதல்வர், போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இது குறித்து உங்கள் கருத்து?

``அழைத்துப் பேச வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அழைத்துப் பேசாமல் வேண்டுகோள்விட்டால் வர மாட்டார்கள். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என்பது தமிழகத்தில் மிகப்பெரிய அமைப்பு. அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இரண்டு மாசம்கூட போராட்டம் நடத்தி சாப்பாடு இல்லாம இருப்பாங்க. அங்களுக்குத் தேவை கோரிக்கை நிறைவேறணும். 9 கோரிக்கைகளில் 2 கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள். பேச்சுவார்த்தை மூலம் இதற்குத் தீர்வு காண முடியும்.’’

`செந்தில் பாலாஜி சொல்லல, நான் சொல்றேன்!’ - தங்க தமிழ்ச்செல்வன் ஓப்பன் டாக்

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பற்றி பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன. இது குறித்து உங்கள் பார்வை?

``பல்வேறு மர்மங்கள் ஜெயலலிதா சாவிலும் நீடிக்கின்றன. இதை இன்னும் முடிக்கவில்லை. இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொள்ளை, கொலைப் பழி வந்திருக்கு. யாரோ சொல்லிட்டாங்க. நான் குற்றமற்றவன் என்று முதல்வர் நிரூபிக்கணும். முதல்வர் வந்து, நான் பதவியிலிருந்து விலக்கிக்கொள்கிறேன், தற்காலிகமாக ஒரு முதல்வரை போடுறேன் என்று சொல்லணும். 10 நாளில் விசாரணை செய்து நான் நல்லவனா கெட்டவனான்னு சொன்னா மக்கள் ரசிப்பாங்க. அதைச் செய்ய மாட்டேன் என்கிறார். விடாப்பிடியாக முதல்வர் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்.