Published:Updated:

பெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்

பெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்
பெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்
பெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்

கோவை: பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், கோவையில் இருந்து கைது செய்யப்பட்ட 6 பேரின் வீடுகளில் பெங்களூரு போலீசார் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஜெலட்டின் குச்சிகள், அம்மோனியம் நைட்ரேட், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் அருகே கடந்த 17ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்ததனர். இந்த தாக்குதல் குறித்து தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தில் திட்டமிடப்பட்டது என்றும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கான உபகரணங்கள் தமிழகத்திலிருந்து கொண்டுச் செல்லப்பட்டது என்றும் சந்தேகித்த பெங்களூரு போலீசார், இது தொடர்பாக கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 பேரை  கைது செய்தனர். இவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக தீவிர‌ விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி, வளையல் ஹக்கிம், அஸ்கர் அலி, ரெகமத்துல்லா, தென்காசி சுலைமான், கோவை சுலைமான் ஆகிய 6 பேரை பெங்களூரு போலீசார் இன்று கோவை அழைத்து வந்தனர்.

##~~##
கோவை மாநகர போலீசார் உதவியுடன், கைது செய்யப்பட்டவர்களின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருள் தயாரிக்கப்படும் அமோனியம் நைட்ரேட், சேட்டிலைட் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டனர்.
ச.ஜெ.ரவி