இதுவரை தமிழகத்தை ஆண்ட தமிழக முதல்வர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு. ‘எடப்பாடியெல்லாம் முதல்வர் ஆவார்’ என்று தமிழக மக்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஏன், எடப்பாடி முதல்வராவார் என்று எடப்பாடியே கனவுகண்டிருக்க மாட்டார். எப்படியோ, அந்தக் கொடுங்கனவு நனவாகி இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. தான் முதல்வர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி, பக்கம் பக்கமாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறார் எடப்பாடியார். இருந்தாலும் அவருக்குத் தன்னடக்கம் அதிகம். இதோ அவர் சொல்லாமல் விட்ட சில சாதனைகள்...

*தேர்தல் என்று ஒன்று வந்துவிட்டால் ‘மக்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை எடப்பாடி’ என்று ஆகிவிடும் என்ப தாலோ என்னவோ, எடப்பாடிக்கு இப்போது தமிழகத்தில் பிடிக்காத வார்த்தை ‘தேர்தல்.’ ‘இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தி.மு.க வழக்கு தொடுத்ததைக் காரணம் காட்டியே, நீதிமன்றத்தில் பல வாய்தாக்கள் வாங்கி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார் எடப்பாடி. அதுசரி, எடப்பாடியின் ‘நல்லாட்சி’ இருக்கும்போது ‘உள்ளாட்சி’ எதற்கு?

*மழையே வராதபோது ‘ரெட் அலெர்ட்’டைக் காரணம் காட்டி, இடைத்தேர்தலைத் தள்ளிவைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூருக்குத் தேர்தல் தேதி அறிவித்து, ‘கொட்டும் மழைக்காலம் உப்பு விக்கப் போனேன்; காத்தடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்’ என்று ‘அபூர்வ சகோதரர்கள்’ அப்புவைப்போல தேர்தல் ஆணையத்தைப் பாடவைத்த சாதனை, எடப்பாடி ஆட்சியில்தானே நடந்தது! 21 தொகுதிகளுக்கு இப்போது எம்.எல்.ஏ-க்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட பத்தில் ஒருபங்கு தொகுதிகள் எம்.எல்.ஏ-க்களே இல்லாமலிருந்த சாதனை, எடப்பாடி ஆட்சியைத் தவிர வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?

*இயற்கை விவசாயம், இயற்கை மருத்துவம் ஆகியவையெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், ‘மதகுக்குக் காய்ச்சல் வந்ததால்தான் உடைந்தது’ என்று இயற்கைக்கே மருத்துவம் பார்த்த இயற்கை விஞ்ஞானி அல்லவா எடப்பாடியார். அந்தளவுக்கு இயற்கைமீது ‘பேரன்பு’ கொண்டவர் அவர். இயற்கை கொடூரமானது!

*அவர் மட்டுமா விஞ்ஞானி, வைகை ஆற்றுக்குத் தெர்மாகோல் மூடி போட்ட செல்லூர் ராஜூ, “வருடம் முழுக்க புரட்டாசி மாதமாக இருந்தால் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசன் என்று ஏராளமான விஞ்ஞானிகள் அமைச்சர்களாக இருக்கும் ஒரே ஆட்சி எடப்பாடி ஆட்சிதானே! ஒருபுறம் கறையான்களை ஒழிக்க பன்னீர்செல்வம் அறையில் யாகம், இன்னொருபுறம் விஞ்ஞானிகளே அமைச்சர்களாக இருக்கும் யோகம் என்று வேதமும் விஞ்ஞானமும் கலந்த பர்பெக்ட் கலவை எடப்பாடி ஆட்சி!

* ‘மரங்களை அழித்துவிட்டுப் பசுமைவழிச்சாலை அமைக்க முடியும்’ என்று நவீன விஞ்ஞான வழிகளையும் நமக்குக் காட்டியவர் எடப்பாடியன்றோ? ‘அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்துவிடக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்படும்’ என்றார் அண்ணல் காந்தி. அந்த காந்தியின் வழியைப் பின்பற்றித் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடும் அதிகாரத்தைத் துணைவட்டாட்சியருக்கு வழங்கிய ஆட்சியும் எடப்பாடியின் ஆட்சிதானே!

*பலபேர் ஒரே ஒரு ராமாயணம்தான் இருக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், தாய்லாந்து ராமாயணம், பௌத்த ராமாயணம், நாட்டுப்புற ராமாயணம் என்று பல ராமாயணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாத தகவல், ‘சேக்கிழார் எழுதிய சேக்கிழார்கம்ப ராமாயணம்’ என்ற ஒன்று இருப்பது. இந்த அரிய உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இலக்கிய ஆய்வாளர் அல்லவா எடப்பாடியார்!

*எடப்பாடியைப் போல ‘வெளிப்படையான’ ஆட்சி நடத்திய முதல்வர்கள் தமிழகத்தில், ஏன், இந்தியாவிலேயே இல்லை. சி.பி.ஐ-யோ வருமானவரித்துறையோ யார் வேண்டுமானாலும் தலைமைச் செயலகம் வரை வந்து ரெய்டு நடத்திவிட்டுப் போவதற்கு ‘வெளிப்படையாக’க் கதவுகள் திறந்துகிடக்கும் அளவுக்கு வெளிப்படையான ஆட்சி எடப்பாடி ஆட்சி. ஆனால் இந்த ரெய்டுகளின் முடிவுகள் என்ன ஆனது என்பது வெளிப்படையாகத் தெரியாதது மட்டும்தான் ஒரே குறை.

*பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பவர் எடப்பாடியார்.

‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார் தந்தை பெரியார். எடப்பாடி ஆட்சியில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஓர் அரசு விளம்பரமே அதற்கு உதாரணம். கோயில் அர்ச்சகர் பக்தரிடம் ‘`எந்த சாமிக்கு அர்ச்சனை?” என்கிறார். பக்தரோ, “நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான்” என்கிறார். ஆக, ‘சாமி’யாகிய கடவுளை மறந்துவிட்டு, ‘ஆசாமி’யான எடப்பாடியை நினைக்கச் சொல்வதைவிடவுமா ஒரு பகுத்தறிவுப் பிரசாரம் செய்துவிட முடியும்?

‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்றார் அறிஞர் அண்ணா. எடப்பாடி ஆட்சியிலே நாம் குடிமக்களாக இருப்பதற்கு அண்ணாவின் வார்த்தைகளை அன்றாடம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். ‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும்; துணிவு வர வேண்டும்’ என்பது எம்.ஜி.ஆர் பாடல். முதல்வர் பதவி வரும்போது சின்னம்மாவின் காலில் விழுந்து ‘பணிவு’ காட்டியவர் எடப்பாடி. பிறகு சின்னம்மாவையும், கூடவே தினகரனையும் தூக்கியெறிந்து ‘துணிவு’ காட்டியவரும் அவரே.

இரண்டாண்டுகளிலேயே இத்தனை சாதனைகள் என்றால், இனிவரப்போகும் ஆண்டுகளில் இன்னும் எத்தனை சாதனைகளைக் காணப்போகிறோமோ!

சுகுணா திவாகர் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி