Published:Updated:

‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’
‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

முனைவர் வைகைச்செல்வன், மேனாள் கல்வி அமைச்சர் - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்

பிரீமியம் ஸ்டோரி
‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

மிழகத்தின் இன்றைய அரசியல் சூழல், நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. தடுக்கி விழுந்தால் கட்சிகள் ஆரம்பிக்கும் காலமாக மாறிவிட்டாலும், ஆலமர விழுதுகள்போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும், யாராலும் வீழ்த்த  முடியாத சுயம்புவாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் முன்னேற்றம் என்பது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின்  வருகைக்குப் பின்னர்தான் புது வேகம் எடுத்தது. அந்தத் தலைவர்களின் வரிசையில், எளியவர்களாகவும், தவிர்க்க முடியாத சக்தியாகவும் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் திகழ்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் இரண்டாம் வரலாற்றை எழுதிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒன்றரை கோடித் தொண்டர்கள் கொண்ட பேரியக்கத்தின் பெரும் தலைவி. புதுடெல்லியைத் தமிழகத்துக்கு வரவழைத்த கம்பீரம். வாழ்வின் இறுதிவரை வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம் என்பதற்கேற்ப தன் வாழ்வை அமைத்துக்கொண்ட தலைவி.

மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் முதலமைச்சரின் அரிய திட்டம் தமிழகத்தில் வறுமையை விரட்டி, பசியைப் போக்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், குறைந்த வருவாய் உடையவர்களுக்கு அம்மா உணவகம் ஒரு வரப்பிரசாதமாகும். தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்குவதுடன், பாராட்டையும் பெற்றுள்ளது.

‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்குத் தேவையான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளிக்கல்விக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் யாவும், சீர்மிகு முத்தான திட்டங்களாகும். மாணவச் செல்வங்களுக்கு மிதிவண்டியிலிருந்து மடிக்கணினிவரை பதினான்கு வகையான நலத்திட்டங்களை வாரி வழங்கிவருகிறது. அ.தி.மு.க ஆட்சியில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அரசு வேலைவாய்ப்பு, சுயதொழில் செய்ய கடனுதவி எனப் பெண்கள் முன்னேற்றத்துக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா தனது இறுதி மூச்சுவரை, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, இடைவிடாத சட்டப்போராட்டங்களை நடத்தினார். இதன் காரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.

‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’

ஜெயலலிதாவின் வழி வந்த கழக அரசும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக, கழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில், திறமையான வாதங்களை எடுத்துவைத்தது. இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருப்பது, ஜெயலலிதாவின் நீண்டகால சட்டப் போராட்டத்துக்கும், தமிழக விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்,
வெற்றி வந்தால் பணிவு அவசியம்,
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்,

எது வந்தாலும் நம்பிக்கை அவசியம் - என்ற எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் நடைபோட்டு வருகிறது இவ்வரசு. செயல்படத்தூண்டும் சவால்களுக்கும், சாதிக்கத் தூண்டும் பகைவர்களுக்கும் நன்றி சொல்கிறோம்!

- தொகுப்பு : த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு