Published:Updated:

நிபந்தனை ஜாமீனுக்காக தோப்புக்குள் பா.ம.க.வினர் தஞ்சம்

நிபந்தனை ஜாமீனுக்காக தோப்புக்குள் பா.ம.க.வினர் தஞ்சம்
நிபந்தனை ஜாமீனுக்காக தோப்புக்குள் பா.ம.க.வினர் தஞ்சம்

ராமநாதபுரம்: நிபந்தனை ஜாமீனுக்காக ராமநாதபுரத்தில் தங்கியிருந்து, காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக சென்ற பா.ம.க.வினருக்கு ஓட்டல்களில் இடம் கிடைக்காததால் தோப்பு ஒன்றில் பந்தலிட்டு தங்கியுள்ளனர்.

நிபந்தனை ஜாமீனுக்காக தோப்புக்குள் பா.ம.க.வினர் தஞ்சம்

மரக்காணம் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜி.கே.மணி உட்பட, பா.ம.க.வினர் 362 பேருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கிய விழுப்புரம் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை, ராமநாதபுரத்தில் தங்கியிருந்து, அங்குள்ள நகர காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நேற்று இரவு 362 பேரும் ராமநாதபுரம் வந்து சேர்ந்தனர். இவர்கள் மொத்தமாக தங்குவதற்கு திருமண மண்டபங்களோ, தங்கும் விடுதிகளோ கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், ஆரம்ப காலத்தில் இப்பகுதியில் பா.ம.க. நிர்வாகிகளாக தேவேந்திர சமுதாயத்தினர் அதிகம் இருந்தனர். பா.ம.க.வின் தலித் விரோத நடவடிக்கைகளுக்கு பின், அனைவரும் அக்கட்சியிலிருந்து விலகி விட்டனர். அதனால் பா.ம.க.வுக்கு ஏற்பாடுகள் செய்வதற்கு யாருமில்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஒரு காலத்தில் பா.ம.க. கட்சியில் சேர்ந்து, கவனிக்கப்படாத தலித் அல்லாத நிர்வாகிகளை தேடி அலைந்தனர், சென்னையிலிருந்து வந்திருந்த சில நிர்வாகிகள்.

நிபந்தனை ஜாமீனுக்காக தோப்புக்குள் பா.ம.க.வினர் தஞ்சம்

உதவி செய்ய யாருமே இல்லாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், தொண்டியிலிருந்து தேவிபட்டினம் வரையுள்ள கடற்கரை கிராமங்களில் மீன் பிடித்தொழில் செய்யும் படையாட்சி சமுதாயத்தினர் கொஞ்சம் பேர் வாழ்கிறார்கள். எப்படியோ அவர்களை தொடர்பு கொண்டு, முடிவீரன்பட்டினம் என்ற கிராமத்தில், தோப்பு ஒன்றில் பந்தல் அமைத்து தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

##~~##
ஜி.கே.மணி மட்டும், ராமநாதபுரம் ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று காலை 362 பேரும் கையெழுத்து போட வந்ததை, பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். கோயில் திருவிழாவில் மைக் செட்டில் ஒருவரை அழைப்பதுபோல், ஒவ்வொருவரையும் போலீசார் பெயர் சொல்லி அழைக்க, கையெழுத்துப் போட சென்றனர். ஆள் மாறாட்டம் ஏதும் செய்திருக்கிறார்களா என்பதை, டி.எஸ்.பி. தலைமையிலான காவல் துறையினர் உன்னிப்பாக கவனித்தனர். கடுமையான வெயிலில் இவர்கள் கஷ்டப்பட கூடாதென்பதற்காக காவல் நிலையம் முன்பு பந்தல் போடும் பணி நடந்து வருகிறது.
செ.சல்மான்

படங்கள்: உ.பாண்டி