கூட்டணி முடிவாகி சீட் பங்கீடு வரை ஃபைனல் செய்து, வேகம் காட்டுகிறது அ.தி.மு.க. இத்தனை நாள்களாக பி.ஜே.பி-யை ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை, இப்போது அந்தக் கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளன. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்றாலும், தேர்தலின்போது சொல்ல சில சமாளிப்புகள் தேவை அல்லவா? அதனால் அய்யனாரால் முடிந்த ஏதோ சில ஐடியாக்கள்!

‘‘நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் நாங்கள் முதலிலிருந்தே பி.ஜே.பி-யுடன் இணக்கமாகத்தான் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உடனே நீங்கள் தம்பிதுரை பேசினாரே எனக் கேட்கலாம். தம்பிதுரை பேசியதைக் கேட்டீர்கள்தானே? எவ்வளவுக் கருத்தாகப் பேசினார்! அப்படிப் பேசுபவர்கள் எப்படி அ.தி.மு.க-வில் இருக்கமுடியும்? அவர் எங்கள் கட்சியே கிடையாது’’ என அ.தி.மு.க சார்பில் சொல்லலாம்.

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு வைத்த, அதே கூட்டணியைத்தான் இப்போதும் வைத்திருக்கிறோம். ஒரே வித்தியாசம் ம.தி.மு.க-வுக்கு பதில் அ.தி.மு.க. அரசியல் ரீதியாகப் பார்த்தால், இப்போது அந்த இரு கட்சிகளுமே ஒரே சைஸில்தான் இருக்கின்றன. எனவேதான், சப்ஸ்டிட்யூட்டாக அ.தி.மு.க-வைச் சேர்த்தோம்’’ என பா.ம.க., தே.மு.தி.க தலைவர்கள் பேட்டி தட்டலாம்.

‘‘காங்கிரஸ் 2004-ல் தொடங்கி, தொடர்ந்து பத்தாண்டுகள் ஆண்டது. அதனால், இந்தியா மிக மோசமான நிலையை அடைந்தது. அந்த நிலைமைக்கு இந்தியாவை ஐந்தே ஆண்டுகளில் பி.ஜே.பி கொண்டுவந்துவிட்டாலும், அவர்களையும் பத்தாண்டுகள் ஆளவிட்டால்தானே மேட்ச் டிரா ஆகும்! அப்போதுதானே யார் பெஸ்ட் எனக் கண்டுபிடிக்க முடியும்! அதற்குத்தான் இந்தக் கூட்டணி’’ என டெக்னிக்கலாகத் தட்டிவிடலாம்.

‘‘அம்மா வழியில் ஆட்சி என்பதை சும்மாப் பேருக்குச் சொல்பவர்கள் கிடையாது நாங்கள். அம்மா இப்படித்தான் ஒரு தேர்தலில் தனியாக நின்றால், அடுத்தத் தேர்தலில் கூட்டணி வைப்பார். 2014-ல் தனியாக நின்றார். அதனால், இப்போது கூட்டணி வைக்கவேண்டும் என்ற அவரின் கணக்குப்படியே கூட்டுச் சேர்ந்துள்ளோம். அதுவும் 2009-ல் அவர் வைத்த கூட்டணி போலவே’’ எனச் சொன்னால் ர.ர-க்கள் நெகிழ்ந்துவிடுவார்கள்.

‘‘உப்பத் தின்னவன் தண்ணி குடிக்கணும். தப்புப் பண்ணவன் சரிசெய்யணும்’’ என்பது பழமொழி. கடந்த ஐந்தாண்டுகளாக மோடி தலைமையிலான அரசு நிறையத் தவறுகள் செய்துள்ளது. அதை அவர்கள்தானே சரிசெய்ய முடியும். எனவே, அவர்களோடு கூட்டணி வைத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறோம்’ என பி.ஜே.பி தவிர்த்து மற்றக் கட்சிகள் மொத்தமாகச் சொல்லலாம்.