Published:Updated:

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு

பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு
பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு

சென்னை: பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 6,000 ரூபாயிலிருந்து  7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களது குடும்பச் சூழ்நிலைகளையும், தற்போதைய காலச் சூழ்நிலையையும், கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை 6,000 ரூபாயிலிருந்து  7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இதே போன்று, பத்திரிகையாளரின் மனைவிக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம்  3,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையின் முக்கிய அங்கமாக விளங்கும் அரசு மைய அச்சகம் பல்லாண்டுகளாக தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசுத் துறைகளைச் சார்ந்த அனைத்து ஆவணங்களும் அச்சிடப்படுகின்றன. இந்த மையத்தின் காகிதக் கிடங்கு பழமை வாய்ந்த கட்டடத்தில் ஓடு வேய்ந்த கூரையின் கீழ் சிதிலம் அடைந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.

##~~##
பழமை வாய்ந்த அக்கட்டடத்தில் ஏற்படும் சேதங்கள் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வந்தாலும், மழைக் காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு காகிதங்கள் சேதம் அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.   எனவே அரசு மைய அச்சகத்திற்கு என புதிய  காகித கிடங்கு 4000 சதுர அடியில்,  56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.