Published:Updated:

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!
அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2BqmCU7

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2G6IkjA

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"அ.தி.மு.க-வின் ஒவ்வொரு மூவ்மென்ட் பற்றியும், உளவுத்துறையான ஐ.பி அனுப்பிய ரிப்போர்ட்டை வைத்துதான் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் தொடங்கி அனைவருக்கும் ஆட்டம் காட்டிவருகிறது டெல்லி.  அந்த வகையில், லேட்டஸ்ட்டாக வந்த ஒரு ரிப்போர்ட்டில், தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது, டெல்லியைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது. ஏற்கெனவே பல வகைகளிலும் தி.மு.க-வைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பி.ஜே.பி தரப்பில் முயற்சி செய்தார்கள். ஆனால், அது கனிந்துவருவதாகத் தெரியாததால்தான், அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுத்து, கூட்டணிக்குள் கொண்டுவரும் வேலைகள் தொடர்கின்றன. அதேசமயம் தி.மு.க-வை வீக் செய்வதற்கான காரணமும் கிடைத்துவிட்டதால், குறி வைத்துவிட்டனர்!"

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

- தமிழகத்தின் முக்கியமான இடங்களில் நடக்கும் ஐ.டி ரெய்டுக்குப் பின்னணியில் உள்ள அரசியலையும், தமிழகத்தை மையமாக வைத்து டெல்லி நகர்த்தி வரும் தேர்தல் வியூக மூவ்களையும் ஆழமாக அறிந்து 'ஸ்டாலினுக்கு குறிவைக்கும் மோடி! - ஐ.பி ரிப்போர்ட்... ஐ.டி ரெய்டு' எனும் தலைப்பில் அடுக்கியிருக்கிறார் மிஸ்டர் கழுகு.

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்குப் பங்கீடு என்பது பிச்சை அல்ல. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமை. ஓர் ஏழைக்கு வருடத்துக்கு எவ்வளவு கொடுப்பது என்பது பற்றிய ஆலோசனைகள் நடை பெற்றுள்ளன. மாதம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை தரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஏழைகள் என்றால் யார், அவர்களை எந்த அளவீட்டின் கீழ் குறிப்பிட முடியும் எனப் பலகட்ட ஆய்வுகளும் பொருளாதாரத் தரவுகளும் எங்கள் வசம் உள்ளன. எனவே, இந்தத் திட்டம் செயலுக்கு வரும்போது முழுமையாக எந்தக் குறைபாடும் இல்லாமல் செயல் படுத்த முடியும். 'ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடப்படும்' என்று மோடி சொன்னது போன்ற அறிவிப்பாக இது இருக்காது."

- 'ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்' என்ற அதிரடியான வாக்குறுதியை அறிவித்து, தங்களின் எதிர்தரப்பான பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி. இந்த அறிவிப்பு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும் என காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியில் இருக்க, பி.ஜே.பி-யினரோ இதன் மீது கடும் விமர்சனங்களை எழுப்புகிறார்கள். இந்தச் சூழலில், 'அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம்... சாத்தியமா?' என்ற செய்திக் கட்டுரை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

தனியார் மருத்துவமனையில் ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து சிகிச்சை பெறமுடியாத நோயாளிகள்தான், அரசு மருத்துவமனையை நாடுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய சிகிச்சையைப் பெறமுடியாவிட்டால், உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இப்படியான நிலையில்தான் பலகோடி ரூபாய் செலவழித்து வாங்கப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்தாமல் மூலையில் போட்டுவைத்திருக்கிறது, சுகாதாரத் துறை. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட எந்திரங்களை மூன்று ஷிப்டுகளுக்கும் பயன் படுத்தினால், நாள் ஒன்றுக்கு 3,600 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், தற்போது ஆயிரம் நோயாளிகளுக்குக்கூட டயாலிசிஸ் செய்யப்படுவதில்லை. காரணம் கேட்டால், சுத்திகரிக்கப்பட்டத் தண்ணீர் பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை, டெக்னீஷியன் கள் பற்றாக்குறை என்று பட்டியலிடுகிறார்கள்.

- "தமிழகத்தில் 17.5 கோடி ரூபாய் செலவில் 200 நவீன டயாலிசிஸ் எந்திரங்கள் நிறுவப்படும்" என்று 2018, ஜூலை 14-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதையடுத்து, "ஏற்கெனவே, 2017-ம் ஆண்டு இறுதியில் தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 100 டயாலிஸிஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பயன்பாட்டுக்கு வராத நிலையில், புதிதாக 200 எந்திரங்கள் எதற்காக வாங்கப்படுகின்றன" என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விகடன் தகவல் உரிமைக் குழு தகவல்களைத் திரட்டியது. இதில் தமிழகத்தில்  ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகள் அரசின் அலட்சியத்தால், தினமும் எப்படியெல்லாம் செத்துப்பிழைக்கிறார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்களின் தொகுப்பே 'RTI அம்பலம்: சிறுநீரக நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு!' எனும் கட்டுரை. 

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"இத்தனை நாள்களாக என் மகன் விடுதலையை காங்கிரஸ்தான் தடுக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. 'சட்டப்படியான விடுதலையை நான் தடுக்கமாட்டேன்'னு ராகுல் காந்தி சொல்லிட்டதால இப்போ பி.ஜே.பி தயங்குதுன்னு சொல்றாங்க. எதுக்கு இந்த அரசியல்? எல்லா உண்மைகளும் தெரிஞ்சிருச்சு. உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொல்லிருச்சு. இதுக்கு மேலயும் என் மகனை உங்க அரசியலுக்குப் பயன்படுத்தாதீங்க. சிறையில சிதைஞ்சுப்போன என் மகனின் இளமைக்காலங்கள்ல் ஒரு நாளைக்கூட உங்களால இனி திருப்பித்தர முடியாது. தயவுசெஞ்சு என் மகனை என்கிட்ட கொடுத்துடுங்க. எங்கேயாச்சும் ஓர் ஓரமா நாங்க வாழ்ந்துக்குறோம். அய்யா கவர்னரே... நான் உங்ககிட்டக் கெஞ்சலை. சட்டத்தை மதிச்சுக் கையெழுத்துப் போடுங்கன்னுதான் சொல்றேன்..."

- அற்புதம் அம்மாள்... 28 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மகனை மீட்கும் போராட்டத் தீயில் தவிப்போடு நிற்கும் தாய். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்கள் விடுதலையில், 'தமிழக அரசு முடிவு எடுக்கலாம் ' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பெழுதி நூறு நாள்கள் கடந்து விட்டன. தீர்ப்பை அமல்படுத்தும்படி கவர்னருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துவிட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், மக்களிடம் நியாயம் கேட்டு நடைப்பயணம் தொடங்கியுள்ளார் அற்புதம் அம்மாள். கோவையில் நடந்த முதல் சந்திப்பை விவரிக்கிறது "என் மகனை விட்டுடுங்க... ஒரு ஓரமாக வாழ்ந்துக்கிறோம்" எனும் தலைப்பிலான செய்திக் கட்டுரை.

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது உண்மையா? விசாரணை அதிகாரி வினய் அறிக்கையில் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா?"

"சின்னம்மா சசிகலா, இளவரசி இருவரும் பல்வேறு உடல் உபாதைகளுடன் சாதாரணச் சிறையில்தான் இருக்கிறார்கள். அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களுக்குச் சிறையின் மாடியில் தனித்தனியாக செல்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடையில் மூன்று செல்களை சும்மா வைத்திருக்கிறார்கள். அவற்றில் எந்த வசதிகளும் இல்லை. தண்டனையை அறிவித்த நீதிமன்றம், இவர்களுக்கு என்ன மாதிரியான சலுகைகளைக் கொடுக்கலாம் என்பதை, சிறைத்துறை அதிகாரிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியது. சிறை விதி 348-ன்படி, இவர்கள் முதல் வகுப்பு கைதிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். இவர்கள், கைதி சீருடை அணியத் தேவையில்லை. சமையல் செய்யவும், உதவிக்கும் ஆள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதில் எந்தச் சலுகையும் சின்னம்மாவுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர் சிறையைவிட்டு வெளியே சென்றதாகச் சொல்லப்படுவது கடைந்தெடுத்தப்பொய். சின்னம்மா தன் வக்கீல்களைக்கூட, சிறை அதிகாரியின் அறைக்கு அருகிலுள்ள அறையில்தான் சந்தித்துள்ளார். சர்க்கரை நோய், கழுத்து வலி, முதுகு வலி, கண்ணில் நீர்வடிதல் எனக் கடும் உடல் உபாதைகளுடன் இருக்கும் சின்னம்மா, சிறையில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்கவில்லை."

- கர்நாடக மாநில அ.ம.மு.க செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தியின் 'சசிகலாவும் இளவரசியும் சிறையில் கஷ்டப்படுகிறார்கள்!' எனும் பேட்டி கவனத்துக்குரியது.

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

தனக்குப் பிடித்தமான முட்டைப் பரோட்டாவும், புள்ளி வாழைப்பழமும் வேண்டும் என்று ஜெயலலிதாவிடமிருந்து அடிக்கடி உத்தரவு வரும். அதை வாங்குவதற்கு ராணியும் கனகராஜும்தான் காரில் செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முக்கிய ஆவணங்கள், வி.ஐ.பி-க்கள் தரும் விலையுயர்ந்த பரிசுப்பொருள்கள் போன்றவற்றை போயஸ் கார்டனிலிருந்து சிறுதாவூர் பங்களாவுக்குக் கொண்டுசெல்லும் பணியையும் இவர்கள்தான் செய்துள்ளனர். ஆனால், ராணி மட்டுமே ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று பொருள்களை வைத்துவிட்டு வருவார்...

- கொடநாடு விவகாரம், தமிழக அரசியலில் தொடர் சூறாவளியாகச் சுழன்று வருகிறது. இதில் புதிய திருப்பமாக, பங்களாவுக்குள் புகுந்து கொள்ளையடிக்க கனகராஜ் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது உள்ளிட்ட மேலும் அதிர்ச்சியூட்டும் பல பின்னணித் தகவல்கள் ஜூ.வி.க்கு கிடைத்துள்ளன. அதுகுறித்த செய்திக் கட்டுரையே 'கொடநாடு விவகாரம்... 'ராணி' வாய்திறந்தால் மர்மக்கோட்டை கதவு திறக்கும்?'

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

ரவியிடம் பேசியபோது, "என் மனைவி கொலை வழக்கு தொடர்பாக மாங்காடு போலீஸார் என்னிடமும் என் மகன் ஸ்ரீபாக்யனிடமும் விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையத்தில் என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, அம்பிகாவை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும்படி அடித்தனர். என் மகனையும் மிகக் கேவலமாக நடத்தினர். நான் சொன்ன எதையும் போலீஸார் கேட்கவில்லை. என்னை 15 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்திருந்தனர். அப்போது ஸ்ரீபாக்யன், பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தான். தேர்வு நேரம் என்பதால் அவனை விட்டுவிட்டனர்... போலீஸார், எங்களைத் தாக்கிய வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் எங்களுக்கு ஓரளவு நியாயம் கிடைத்துள்ளது. ஆனால், அம்பிகா கொலை வழக்கில் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கு விசாரணை கிடப்பிலேயே கிடக்கிறது" என்றார் கண்ணீருடன்.

ஸ்ரீபாக்யன் கூறுகையில், "அம்மா கொலை வழக்கில் என்னையும் அப்பாவையும் போலீஸார் விசாரித்த விதம் அநாகரிகமானது. தேவையில் லாமல் எங்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து, அடித்துத் துன்புறுத்தினர். போலீஸை எதிர்த்து நாங்கள் கடுமையாகப் போராடியதற்கு நீதி கிடைத்துள்ளது" என்றார்...

- விசாரணை என்ற பெயரில் குற்றச் சம்பவத்துக்குத் தொடர்பு இல்லாதவர்களைக் கொடுமை செய்வது போலீஸாரின் விசாரணை பாணிகளில் ஒன்று. அதற்கு குட்டு வைக்கும் வகையில், சென்னையில் பெண் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது பெண்ணின் கணவரையும், மகனையும் தாக்கிய போலீஸார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு பின்னணியைத் தருகிறது 'அப்பாவிகளைத் தாக்கிய போலீஸார்... - அதிரடி தீர்ப்பளித்த மனித உரிமைகள் ஆணையம்!' எனும் செய்திக் கட்டுரை.

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

"தூக்குத்தண்டனைக் கைதிகளுக்கென பிரத்யேகமாக அறைகள் உள்ளன. ஆனால், தஷ்வந்த் ஏற்கெனவே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச்சென்றவர் என்பதால், பிரச்னைகளில் ஈடுபடும் கைதிகளை அடைக்கும் செல்லுலார் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தூக்குத் தண்டனை கைதி என்பதால், 'ஏ' கிளாஸ் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு தஷ்வந்துக்கும் வழங்கப்படுகிறது. காலை 6 மணிக்கு எழுந்துவிடும் தஷ்வந்த், நடைப்பயிற்சி முடித்துவிட்டு, இறகுப்பந்து ஆடுவது வழக்கம்..."

- "யார் இந்த தஷ்வந்த்?" என்று கேட்பவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். சென்னையில் தன் வீட்டுக்கு எதிரே குடியிருந்த தம்பதியின் ஆறு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்து தீயிட்டு எரித்த வழக்கில் தண்டனை பெற்றவர்தான் இந்த இளைஞர். தற்போது தமிழகத்தில் தூக்குக் கயிறை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒரே குற்றவாளி தஷ்வந்த். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தஷ்வந்த் எப்படி இருக்கிறார்? என்பதை விவரிக்கிறது 'புழல் சிறைக்குள் என்ன செய்கிறார் தஷ்வந்த்?' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

அரசியலும் அம்பலமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 9 தெறிப்புகள்!

" 'நான் வெற்றிபெற்றால் தர்மபுரியிலேயே வீடு எடுத்து, குடும்பத்துடன் தங்குவேன். தர்மபுரிதான் என் தாய்வீடு' என்று அவர் கொடுத்த முக்கியமான வாக்குறுதியையே நிறைவேற்றவில்லை. கட்சிக் கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்வுகளுக்கு ஒரு விருந்தாளிபோலத்தான் வருகிறார். எளிய மக்கள் அவரை அணுக முடிவதில்லை" என்று புலம்புகிறார்கள் தர்மபுரிவாசிகள்...

தர்மபுரியை அடுத்த மோடாங்குறிச்சி பஞ்சாயத்தை அன்புமணி தத்தெடுத்திருக்கிறார். அங்கே சென்றோம் "நத்தமேட்டில் நூலகம் கட்டப்பட்டுவருகிறது. பெத்தானூர், மோட்டாங்குறிச்சியில் ஹைமாஸ் லைட் போட்டுள்ளார். அதைத்தவிர வேறு எதுவும் செய்யவில்லை" என்றார்கள் கிராம மக்கள். 

- 'மாற்றம்... முன்னேற்றம்' என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்னிறுத்தியபோது, பா.ம.க முன்வைத்த வாசகம் இது. மாநிலத்துக்கு முதல்வராகும் அவரது கனவு நிறைவேறவில்லை. ஆனால், தர்மபுரிக்கு எம்.பி ஆகிவிட்டார். தனது தொகுதியில் என்னென்ன மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அவர் செய்துள்ளார் என்பதை ஆய்வு ரீதியில் அணுகியிருக்கிறது 'என்ன செய்தார் எம்.பி? - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)' எனும் பகுதி.