Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

@ப.தயாநிதி, ஆதம்பாக்கம், சென்னை-88.
அ.தி.மு.க-வை இத்தனை நாள் விமர்சித்துவிட்டு, தேர்தலுக்காக அதனுடன் கூட்டணி வைப்பது பா.ம.க-வுக்கு ஏற்பட்ட சறுக்கல்தானே?


பெருக்கல்!

கழுகார் பதில்கள்!

@சரவணன், ஓ.ஏ.கே.ஆர், சென்னை-2.
நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சனம் செய்யக்கூடாது என்பது சரி. ஆனால், அவர்களின் கருத்தைக்கூட விமர்சிக்கக் கூடாதா?


தீர்ப்பு வழங்கிய நீதிபதியைத்தான் விமர்சனம் செய்யக்கூடாது. தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. அதேசமயம், நீதிபதியின் கருத்து என்றால், எதிர் கருத்தை முன்வைக்கத் தடையேதும் இல்லை. அது, கருத்து மோதலாகவே கருதப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

வி.சண்முகம், திருவாரூர்.
‘ஒரு எம்.எல்.ஏ இறந்துவிட்டால், இடைத்தேர்தல் நடத்தாமல், அதே கட்சியைச் சேர்ந்தவரை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கலாமே’ என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளதே?


மிகவும் ஆபத்தான யோசனை. அடிக்கடி இப்படி எம்.எல்.ஏ-க்களை நியமிக்க வேண்டியிருக்கும்... பரவாயில்லையா!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கூட்டணி இல்லாமல்தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தால்?


‘கொள்கையில் தேக்கு... கூட்டணியில் நாணல்’ என்றெல்லாம் வியாக்கியானத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய கஷ்டம் இருக்காது.

@முத்துக்கிருஷ்ணன், தராபடவேடு, வேலூர்.
கிட்டத்தட்ட நான்கு லட்சம் கோடி ரூபாயை எட்டிவிட்டது தமிழகத்தின் கடன். இது, அடுத்து ஆட்சிக்கு வருபவர் களுக்குப் பெருஞ்சுமையாகத்தானே அமையும்?


முத்துக்கிருஷ்ணன், முதல்வராக வருவதாக இருந்தால் சுமையாக இருக்கும். ஆனால், எங்கிருந்தோ வாங்குகிறார்கள்... யார் தலையிலோ கட்டுகிறார்கள். இடைப்பட்ட ஐந்து ஆண்டு காலத்தில் நன்றாகக் கல்லா கட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது பெருஞ்சுமையல்ல, சுகமான சுமை!

@கருமாரி கணபதி, மடிப்பாக்கம்.
என்னதான் முரண்பட்டு அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி வைத்துக்கொண்டாலும், ‘வெட்கம், சூடு, சொரணை ஏதேனும் இருக்கிறதா?’ என்று ராமதாஸைப் பார்த்து மு.க.ஸ்டாலின் கேட்டிருப்பது அதிகப்படிதானே?


ஆத்திரத்தில் இப்படியெல்லாம்தான் பேசுவார்கள். அதையெல்லாம் கண்டுக்கப்படாது.  

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.
‘ஸ்டாலினைப் பார்த்துக்கொள்கிறேன் என்று கருணா நிதிக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். அதனால்தான் தி.மு.க-வை ஆதரிக்கிறேன்’ என்று வைகோ கூறியிருக்கிறாரே!


ஒரு கட்சி, மற்றொரு கட்சியை ஆதரிப்பதற்கு ‘நாணல்’ போலக்கூட வளையலாம். அதற்காக, இப்படியெல்லாம் ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டா வளைவது! கட்சிக்கென்று கொள்கைகள் இருக்கக்கூட வேண்டாம். ஆனால், அதையெல்லாம் இப்படியா வெளியில் சொல்லிக் கொள்வார்கள்!

கழுகார் பதில்கள்!

@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.
எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் உடும்புப் பிடியாகப் பிடித்து சிலரால் மட்டும் எப்படி வெற்றியடைய முடிகிறது?


அந்த உடும்புப்பிடிதான் காரணம். ஆனால், அது சிலருக்கு மட்டுமே கைவரக்கூடிய விஷயமல்ல, எல்லோருக்குமே எளிதானதுதான். வெற்றிக்கான இலக்கு, அந்த வெற்றிக்கான தேவை, அதன் முக்கியத்துவம் இதையெல்லாம் உணர்ந்து உடும்புப்பிடி போட்டால், எல்லோராலும் வெற்றிபெற முடியும்தானே!

@சக்திமணிகண்டன்.
உண்மையைச் சொல்லுங்கள், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டிலுள்ள பெரிய பிரச்னைகளில் பாதியாவது தீருமா?


ம்... ஆட்சிக்கு வருவதே அவர்களது சொந்தப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான். இதற்கே ஐந்து ஆண்டுகள் அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், பிரச்னைகள் இரண்டு மடங்காகப் பெருகினால்தானே நன்றாக அவர்களால் ‘அறுவடை’ செய்ய முடியும்.

@வடபழனி ஆர்.கே.எஸ்.மகேஷ், சென்னை.
கவர்னர் மாற்றப்படும் விவகாரத்தில், கழுகாரின் கணிப்பு பலிக்கவில்லையே?


அது, கணிப்பு இல்லை, தகவல். நிர்மலாதேவி விவகாரத்துக்குப் பிறகு அவர் மாற்றப்படுவார் என்பதுதான் ஒரே பேச்சாக இருந்தது. டெல்லியிலிருந்து நேரடி விசாரிப்புகளும் நடந்தன. மத்திய, மாநில உளவுப் பிரிவுகளின் குறிப்புகளும்கூட டெல்லிக்குப் பறந்தன. அடுத்தடுத்த நாள்களில் காட்சிகள் மாற, அவர் மாற்றப்படவில்லை. அவ்வளவுதான்! கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கும் நிலையிலும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

@பி.எஸ்.எ.ஜெய்லானி, கடையநல்லூர்.
வாக்குறுதிகள் மற்றும் இலவசத் திட்டங்களை அரசியல் கட்சிகள் காப்பி அடிப்பதைத் தடுக்க, முன்கூட்டியே அவற்றை வாங்கி சீலிட்ட கவர்களில் வைத்திருந்து குறிப்பிட்ட தேதியில் தேர்தல் ஆணையமே வெளியிடலாமே?


ரொம்ப முக்கியம்!

@ஞானப்பிரகாஷ், தொம்பக்குளம்.
கஜா புயலின்போது வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. இப்போது, எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடி, அமித் ஷா, யோகி என்று அனைவரும் தமிழகத்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள்?


உங்களுக்குக் கோபம் இருந்தால், முக்காடு போட்டுவிடுங்களேன்!

குமரி. எம்.மரியஏசுதாஸ், மாடத்தட்டுவிளை.
தமிழகத்தில் மதுவை ஒழிக்க யார் மனம் வைக்கவேண்டும்?


‘குடி’மக்களும் குடிமக்களும்தான்!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம், தஞ்சாவூர்.
‘மோடிக்கு எதிராகப் பேச யாருக்கும் தைரியம் இல்லை’ என்கிறாரே மம்தா?


முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றி மோசடி செய்த சாரதா சிட் ஃபண்டு நிறுவனத்தில் இவரின் கட்சிக்காரர்கள் பலரும் பங்காளிகள். அதேபோல மாநிலத்தின் பல்துறை அதிகாரிகளும் கூடப் பங்காளிகள். அதை விசாரிக்கிறது சி.பி.ஐ. இந்த நிலையிலும் மோடியுடன் மோதுகிறார் என்றால், இவர் அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்லைதான்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சை - 6.
‘யாருக்கு ஓட்டுப் போட்டோம்’ என்பதை வாக்காளர் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ‘ஒப்புகைச் சீட்டு’ இயந்திரம் மூலம் காட்டப்படுமாமே! அந்தச் சீட்டை வாக்காளர்களின் கைகளிலேயே கொடுத்தால்தான் என்ன?


 ‘ஆஹா... அரசியல் கட்சிகளுக்குப் பயன்படும். பயனுள்ள யோசனை ஆயிற்றே இது! பணம் வாங்கும் வாக்காளர்கள், தங்களுக்குத்தான் போட்டார்களா என்று அவர்களால் உறுதிப் படுத்திக்கொள்ள முடிவதில்லை. ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். ஒப்புகைச் சீட்டாகவே கொடுத்துவிட்டால், அவர்களுக்குக் கணக்குப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஏற்கெனவே அரசாங்கப் பணத்தையே அதிகாரபூர்வமாக விநியோகம் செய்கிறார்கள். இதை நீதிமன்றம்கூட எதிர்க்கவில்லை. எனவே, ‘ஒப்புகைச் சீட்டைத் தேர்தல் ஆணையம் வாக்காளரிடமே கொடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில்கூட வழக்குப் போடலாம்.

@மு.கல்யாணசுந்தரம், நடூர், மேட்டுப்பாளையம்.
‘நூறு கருணாநிதி, நூறு ஜெயலலிதா, ஆயிரம் ஸ்டாலினுக்குச் சமமானவர் விஜயகாந்த்’ என்று அவர் மகன் விஜய் பிரபாகரன் கூறியுள்ளாரே?


‘புள்ளிவிவரப் புலி’க்குப் பிறந்தது பூனையாகுமா!

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.
‘தேர்தலில் நோட்டாவுக்குப் போடப்படும் ஓட்டு, வெறுப்பைத்தான் காட்டும்’ என்று கமல் கூறுகிறாரே?


ம்... பி.ஜே.பி-க்கு இணையாகவாவது ஓட்டுகளை வாங்கிவிட நினைக்கிறார். போட்டுவிட்டுத்தான் போங்களேன்.      

கழுகார் பதில்கள்!

ஜி.குணசேகரன், செங்கல்பட்டு.
புதுச்சேரி முதல்வரின் தர்ணா போராட்டத்தைக் கிண்டலடிக்கும் வகையில் காக்கைப் படங்களை வெளியிட்டுள்ளாரே கவர்னர் கிரண் பேடி?


காக்கைகள் மானநஷ்ட வழக்கு போடாது என்கிற தைரியத்தில்தான்!

பிரதீபா ஈஸ்வரன், மேட்டுக்கடை.

‘ஊழல் கட்சிகளுடன் இணைந்து ஏற்படுத்தும் கலப்படக் கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே மோடி!


அப்படியென்றால், தமிழகத்தில் அமைக்கப் பட்டிருப்பது ‘கலப்படமில்லாக் கூட்டணியா’. குட்கா ஊழல், பொதுப்பணித்துறை ஊழல், முட்டை ஊழல் என்று வரிசையாக அ.தி.மு.க மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் பதிவாகியுள்ளன. சிலவற்றை மோடியின் சி.பி.ஐ-தான் விசாரிக்கிறது. ‘ஒருவேளை ஊழல் எதுவும் நடக்கவில்லை’ என்று சீக்கிரமே சி.பி.ஐ அறிவிக்குமோ!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை,
சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism