Published:Updated:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர்! - செயல்தலைவர்களாக 4 பேர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர்! - செயல்தலைவர்களாக 4 பேர் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர்! - செயல்தலைவர்களாக 4 பேர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ். அழகிரியை நியமித்து அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் ஹெச்.வசந்தகுமார் உள்ளிட்ட 4 பேர் செயல்தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் இருந்த திருநாவுக்கரசர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், அந்தப் பதவியில் முன்னாள் எம்.பி கே.எஸ்.அழகிரியை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதேபோல், 4 செயல்தலைவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுருக்கும் அறிவிப்பில், செயல் தலைவர்களாக ஹெச். வசந்த்குமார், கே. ஜெயக்குமார், எம்.கே விஷ்ணு பிரசாத் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எஸ். அழகிரி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மேலும், கடலூர் தொகுதியின் எம்.பியாகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.