Published:Updated:

பா.ம.க. வன்முறை: வருத்தம் தெரிவிக்கிறார் ஜி.கே. மணி!

பா.ம.க. வன்முறை: வருத்தம் தெரிவிக்கிறார் ஜி.கே. மணி!
பா.ம.க. வன்முறை: வருத்தம் தெரிவிக்கிறார் ஜி.கே. மணி!
பா.ம.க. வன்முறை: வருத்தம் தெரிவிக்கிறார் ஜி.கே. மணி!

ராமநாதபுரம்: பா.ம.க.வினரின் வன்முறைக்காக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டும், பாலங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டும்,  நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டும் பொதுச் சொத்துக்கள் பெருமளவுக்கு சேதம் அடைந்தன. மேலும் கல் வீச்சு சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில் சட்டசபையில் நேற்று இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, வன்முறை சம்பவங்களுக்கு பா.ம.க.தான் காரணம் என்று கூறி அது தொடர்பான விவரங்களை பட்டியலிட்டதோடு, இனிமேல் வன்முறையில் ஈடுபட்டால் குண்டர்சட்டம் பாயும் என்றும், வன்முறையில் ஈடுபடும் கட்சிகள் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னரே கூறியதுபோல் பா.ம.க. வன்முறை சம்பவங்களில் ஈடுபடவில்லை என்றும், போலீசார் உதவியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்தான் வன்முறைகளை அரங்கேற்றியதாகவும், ஆனால் பா.ம.க. மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியதற்காக தமது கட்சி அரசுக்கு எதிராக வழக்கு தொடரும் என்றும் அறிவித்தார்.

##~~##
இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் ராமநாதபுரத்தில் தங்கியுள்ள பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, பா.ம.க.வினர் செய்து வரும் வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களே?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’’ என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " ‘‘பா.ம.க.வை அழிக்கும் வேலையில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாமல்லபுரம் மாநாட்டுக்கு வந்த 500 வாகனங்களை போலீசாரே திருப்பி அனுப்பியுள்ளனர். அதுபோல், மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் நடத்தப்பட்ட கலவரத்தை, பா.ம.க.வினர் செய்தது போல் அரசு திசை திருப்புகிறது. போலீசும், விடுதலை சிறுத்தை கட்சியும் இணைந்து செயல்படுகிறார்கள். இரண்டு வன்னிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை அனைத்தையும் சட்டப்படி நாங்கள் சந்திப்போம்’’ என்றார்.

- செ.சல்மான்