Published:Updated:

சாலை விபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி காயம்

சாலை விபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி காயம்
சாலை விபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி மனைவி காயம்

புதுச்சேரி: மத்திய இணையமைச்சர் நாராயணசாமியின் மனைவிக்கு சாலை விபத்தில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

##~~##
மத்திய இணையமைச்சராக இருப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி கலைச்செல்வி (50). இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்தார். தட்டாஞ்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த வேன் மோதியது. இதில் கலைச்செல்வியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று கலைச்செல்விக்கு ஆறுதல் கூறினர்.