Published:Updated:

கிராமங்களில் 1 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு உள்ளது: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சென்னை:  கிராமங்களில் 1 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமலில் உள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தே.மு.தி.க. உறுப்பினர் சேகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கிராமங்களில் 1 மணி நேரம் மட்டுமே மின்வெட்டு உள்ளதாகவும், சென்னையில் தற்போது மின்வெட்டு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு இல்லை

மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போதைக்கு உயராது என்றும் தெரிவித்த அவர், மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில், மின் கட்டணத்தை உயர்த்த மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், அதை தமிழக அரசு தாங்கிக் கொள்ளும் என்று கூறினார்.