Published:Updated:

பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!

பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!
பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!


- சரோஜ் கண்பத்

த்திய அரசின் முக்கியமான துறைகளான சட்டத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர்களாக

பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!

இருந்தவர்கள் அஸ்வனி குமார் மற்றும் பவன் குமார் பன்சால். சிபிஐ விசாரணையில்  இருக்கும் நிலக்கரி ஊழலின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வருவதை தடுக்க, முக்கிய ஆவணங்களை திருத்திய புகாரில் அஸ்வனி குமாரும், ரயில்வேயில் உயர் பதவிகளை விற்ற பேர புகாரில் சிபிஐயிடம் சிக்கிய அமைச்சர் பவன் குமார் பன்சாலும் ராஜினாமா செய்துள்ளனர்.

‘‘காங்கிரஸ் கட்சி மீது ஏற்படும் களங்கத்தை தடுக்க சோனியாவின் கட்டாயத்தால் பிரதமர் இவர்களை ராஜினாமா செய்ய வைத்தார்‘‘ என்று செய்திகள் வர, மறுப்பு வெளியிட்ட  காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, ''அமைச்சர்களின் ராஜினாமா, சோனியாவும் பிரதமரும் கலந்து பேசி ஒருமித்த வகையில் எடுத்த முடிவு'' என்று விளக்கம் கொடுத்தார்.  

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதியில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் மசோதாக்கள் நிறைவேறக் காத்திருந்தன. இந்த இரு அமைச்சர்களின் ராஜினாமாக்களை கோரிதான் எதிர்க்கட்சிகள் சபையை நிலைக் குலைய செய்தனர். இந்நிலையில் ஆளும்கட்சி, எதிர்கட்சிகளின் பேச்சிற்கு இடம் தரக் கூடாது என்னும் வகையில் செயல்பட்டு காலதாமதமாக ராஜினாமா முடிவை எடுத்துள்ளது.

அஸ்வனி குமார்

பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!

காலதாமதத்திற்கும், ராஜினாமா தருணங்களுக்கும் சின்னதொரு பிளேஷ் பேக்கும் இருக்கிறது.
 
பஞ்சாப்பைச் சேர்ந்த இந்த இரண்டு குமார்களும், மன்மோகன் சிங்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரொம்பவே நெருக்கமானவர்கள். இதில் அஸ்வனி குமார் பிரதமரின் 'கிச்சன் கேபினட்' என்றே வர்ணிக்கப்படுவார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழங்கறிஞர், முன்னாள் கூடுதல் அட்டார்னி ஜெனரல் போன்ற பொறுப்புகளில் இருந்த இவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளராகி கடந்த யுபிஏ ஆட்சியில் வர்த்தகத் துறை இணையமைச்சரானார்.

அப்போது இவர் மீது கட்சியே புகார்களை கூறி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கூறியது.இந்நிலையில் மீண்டும் பிரதமராகி செல்வாக்கை பெற்ற மன்மோகன், தான் விருப்பப் பட்டவர்களையும் அமைச்சராக்கினார். அதில் அஸ்வனிக்கு, அவரது துணைவியார் கவுர் செய்த சிபாரிசு காரணமாக, நாடாளுமன்ற விவகாரத் துறையும் பின்னர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட கமிஷன் போன்ற துறைகளையும் கொடுத்தார் மன்மோகன் சிங்.
 
இதே செல்வாக்கின் மூலம் கடந்தாண்டு சட்டத்துறை கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றார் அஸ்வனி. இந்தளவிற்கு பிரதமரோடு செல்வாக்குடன் நெருக்கம் கொண்டிருந்தவர் தான், இப்போது நிலக்கரி விவகாரத்தில் பலியாகி இருக்கிறார். பதவி கிடைக்க காரணமான மன்மோகன் சிங்கிற்காகவே பதவியை தியாகம் செய்யவேண்டிய நிலைமை.

பவன்குமார் பன்சால்

இதே மாதிரிதான் பவன் குமார் பன்சாலும், படுவேகத்தில் பதவி உயர்வு பெற்றவ‌ர். பஞ்சாப் மாநிலம்

பாவத்தில் முடிந்த பாசம்: ராஜினாமா குமார்களின் கதை!

சண்டிகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்சால், கடந்த முறை நிதித்துறை இணை அமைச்சர். இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவ‌ர் என்றாலும், இவருக்கும் அஸ்வனி குமார் மாதிரியே சொந்தக் கட்சிகாரர்கள் மத்தியில் சுத்தமாக செல்வாக்கு கிடையாது. கடந்த ஆட்சியில் ப.சிதம்பரத்தோடு நிதித்துறையில் இணையமைச்சராக இருந்த பன்சால், மன்மோகன் சிங்கின் ஆதரவோடு இப்போது இரண்டாவது யு.பி.ஏ ஆட்சியில் கேபினட் அமைச்சர் பதவியை பெற்று நீர்பாசனத் துறைக்கும், நாடாளுமன்ற விவகாரத் துறைக்கும் அமைச்சரானார்.

இப்படி இரட்டை துறைகளை பெற்ற பன்சால், ஏகப் பட்ட நெருக்கடிக்களுக்கு மத்தியில் ரயில்வே அமைச்சராகவும் உயர்த்தப்பட்டார். மன்மோகன், தான் விரும்பும் பொருளாதார சீர்திருத்தங்களை ரயில்வேயில் பன்சால் மூலம் மேற்கொள்ள வைக்க முடியும் என்று கருத, பன்சாலோ தன்னுடைய பொருளாதாரத்தை வளமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
   
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வெற்றிக்கு தான்தான் காரணம் என்று சொல்லிக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அவரது வெற்றிக்குரிய அந்த இரண்டாவது ரவுண்ட் ஆட்சி இம்மாதத்தோடு நான்கு வருடம் பூர்த்தி ஆக இருக்கும் நிலையில், இந்த நான்கு வருட ஆட்சியில் நான்கு சட்ட அமைச்சர்களையும், ஐந்து ரயில்வே அமைச்சர்களையும் மாற்றியுள்ளார். யு.பி.ஏ. கூட்டணி ஆட்சியின் ஒற்றுமைக்கும் மன்மோகன் சிங்கின் நிர்வாகத் திறமைக்கும் இது ஏக சான்று.

பிரதமரால் படிப்படியாக பலமான பதவிகளை பெற்று மேலே மேலே வந்த குமார்கள், இப்போது அதே பிரதமரின் மானம் காக்க தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, ஏறிய வேகத்திலேயே வீழ்ச்சி கண்டுள்ளனர்.