Published:Updated:

லேப்டாப், 5 செல்போன்கள் மாயம்! - கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதுள்ள புகார் என்ன?

லேப்டாப், 5 செல்போன்கள் மாயம்! - கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதுள்ள புகார் என்ன?
லேப்டாப், 5 செல்போன்கள் மாயம்! - கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதுள்ள புகார் என்ன?

சாரதா சிட்பண்ட் வழக்கில் ஆதாரங்களை அழித்ததாகக் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். 40 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகளை விசாரணை நடத்த மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. கொல்கத்தாவில் உள்ள கமிஷனரின் வீட்டு முன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது. கொல்கத்தாவில் சி.பி.ஐ அதிகாரிகள் முடக்கப்பட்டுள்ளனர். சாரதா சிட்பண்ட் வழக்கை 2013-ம் ஆண்டு ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்புப் படையினர் விசாரித்து வந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவையடுத்து சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. 

லேப்டாப், 5 செல்போன்கள் மாயம்! - கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதுள்ள புகார் என்ன?

வழக்கில் முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க ராஜீவ் குமார் தவறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. சாரதா சிட்பண்ட் நிறுவனத் தலைவர் சுதிப்தோ சென்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், 5 செல்போன்கள் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ்கள் தங்களிடம் ஒப்படைக்கவில்லை  என்று சி.பி.ஐ குற்றம்சாட்டியுள்ளது. இவை அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சி.பி.ஐ சந்தேகிக்கிறது. மேற்கு வங்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் சாரதா சிட்பண்ட் வழக்கில் தொடர்பு உள்ளதால் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ஆதாரங்களை அழித்திருக்க வாய்ப்பிருப்பதாக சி.பி.ஐ குற்றம் சாட்டுகிறது. 

அதேவேளையில் சி.பி.ஐ முன் அனுமதி வாங்காமல் விசாரணை நடத்தச் சென்றதாக மாநில முதல்வரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவஸ்த்தவா கூறுகையில், ``உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எங்களிடம் ஒப்படைத்துள்ளது. இதுவரை எந்தத் தொய்வும் இல்லாமல் விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கெனவே நாங்கள் நடத்தி வரும் வழக்கில் போலீஸ் கமிஷனரை விசாரிக்க வேண்டுமென்றால் யாரிடமும் முன் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று மம்தாவுக்குப் பதில் கூறியுள்ளார். மம்தா பானர்ஜியோ, நாட்டில் ஜனநாயகத்தை மத்திய அரசு சிதைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எமர்ஜென்சியைவிட மோசமான நிலை நிலவுகிறது என்றும் மம்தா விமர்சித்துள்ளார்.  

லேப்டாப், 5 செல்போன்கள் மாயம்! - கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மீதுள்ள புகார் என்ன?

இதற்கிடையே  உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், விசாரணைக்குக் கொல்கத்தா போலீஸ் ஒத்துழைக்க உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. சி.பி.ஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு  4 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் தொடர்புடைய ஆதாரங்களைக் கொல்கத்தா கமிஷனர் அழித்திருந்தால் அதற்காக நிச்சயம் வருத்தப்பட நேரிடும். சம்பந்தப்பட்ட பொருள்களை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் எச்சரித்துள்ளார்.