Published:Updated:

`மத்தவங்கள விடுங்க; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!'- வெற்றிவேல்

`மத்தவங்கள விடுங்க; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!'- வெற்றிவேல்
`மத்தவங்கள விடுங்க; ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ன சொல்றாங்கன்னு பாருங்க!'- வெற்றிவேல்

"பொன்னையனின் நம்பகத்தன்மை போய் ரொம்ப நாளாச்சு. கூட்டணிகுறித்து எடப்பாடியும் பன்னீர்செல்வமும் என்ன சொல்றாங்கன்னு பாருங்க" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித்தொடர்பாளர் வெற்றிவேல் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், "கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே எங்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். அது தொடர்பாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆளில்லாத கடையில் அ.தி.மு.க டீ ஆத்திக்கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க-வில் இன்று முதல்வர், துணை முதல்வர் இரண்டு பேரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீங்க?

``இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிற மாதிரி காட்ட, இப்படிப் பல முயற்சிகளை எடுத்துட்டுவந்திருக்காங்க. பல சூழ்நிலைகளில் அவர்களது முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.``
 

பொன்னையன் உள்ளிட்டவர்கள் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று தம்பித்துரை வெளிப்படையாகச் சொல்கிறார். உங்கள் கருத்து?

``எடப்பாடியும் பன்னீர்செல்வமும் என்ன சொல்றாங்கன்னு பாருங்க. மற்றவர்கள், இப்போது ஒன்று சொல்வார்கள் பின்னர் மாற்றிப் பேசுவார்கள். ஆறுமுகசாமி ஆணையத்தில் பொன்னையன் ஒண்ணு சொன்னாரு. வெளியில் கொடுத்த பேட்டியில் வேறொண்ணு சொன்னாரு. அவரது நம்பகத்தன்மை போய் ரொம்ப நாளாச்சு.''

கூட்டணிகுறித்து அ.தி.மு.க இதுவரை முடிவு எடுக்கவில்லை. இந்த நேரத்தில் விருப்ப மனு வாங்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் பதில்?

``பா.ஜ.க-வுடன் போவதுகுறித்து அவர்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். அதுக்கு உள்ளே இருக்கிறவர்களைச் சரிசெய்யும் வேலையை அவர்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.''

அ.ம.மு.க கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடத்துறீங்களா?

``துணை பொதுச் செயலாளர், கூட்டணிகுறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் முழு விவரமும் வெளியே வரும்.''