இரண்டு அசுரக் கூட்டணிகளுக்கு மத்தியில் சூறாவளிச் சுற்றுப்பயணம், அதிரடி அறிக்கைகள் என ‘ஒன் மேன் ஷோ’வாகக் கலக்கிவருகிறார், அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரின் முக்கியத் தளபதியாகக் கருதப்படும் அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்செல்வனிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

“அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளன. நீங்கள் தனித்துவிடப்பட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?”

‘‘அவர்கள் அமைத்திருப்பது பலமான கூட்டணி அல்ல. சந்தர்ப்பவாத கூட்டணி. நேற்றுவரை அ.தி.மு.க–வைக் கீழ்த்தரமாக விமர்சித்துவந்த பா.ம.க., இன்று விருந்து அளித்துக் கூட்டணி அமைத்துள்ளது. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முயல் - ஆமை கதையில், ஆமை ஜெயித்தது போன்று நாங்கள் ஜெயிப்பது உறுதி.’’

“தேசியக் கட்சிகள் யாரும் உங்களுடன் கூட்டணி வைக்க விரும்பாததால்தானே, மாநிலக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்திருக்கிறீர்கள்?”

‘‘இல்லை. நாங்கள் நினைத்திருந்தால் காங்கிரஸ், பி.ஜே.பி–யுடன் அணி சேர்ந்திருக்க முடியும். எங்கள் பலம் தேசியக் கட்சிகளுக்குத் தெரியும். 2014 தேர்தலில், அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால்தான், தமிழகத்துக்கு எதிரான நீட், உதய் மின் திட்டம் விவகாரங்களில் தமிழகத்தின் உரிமையை அம்மாவால் நிலைநாட்ட முடிந்தது.’’

“ஆயிரம் சொன்னாலும், அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் என்கிற முகம் இருக்கிறது. உங்களுக்கு அது இல்லையே?”

‘‘மோடியா, இந்த லேடியா என்று அம்மா கேட்டபோது, பிரதமர் வேட்பாளர் என்கிற பிம்பம் தமிழக வாக்காளர்களின் கண்ணுக்குத் தெரிந்ததா? எங்களுக்கு தமிழக நலனை யார் பாதுகாக்கிறார்களோ, அவர்கள்தான் முக்கியம். பிரதமர் வேட்பாளர் என்கிற முகம், இத்தேர்தலில் எடுபடாது. பி.ஜே.பி–யுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.’’

‘‘அங்கீகாரம் இல்லாத கட்சியையும், சின்னத்தையும் வைத்துக்கொண்டு, அங்கீகாரம் இல்லாத தலைவராக தினகரன் அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகிறாரே?”

“(பலமாகச் சிரிக்கிறார்) நாங்கள்தான் உங்களுக்கு (அ.தி.மு.க-வுக்கு) ஒன்றுமில்லை என்றாகிவிட்டதே. அதன்பின் ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்? எங்கள் மீதுள்ள பயத்தை மறைப்பதற்கு, இப்படியெல்லாம் உளறிக்கொட்டுகிறார்கள். வரும் தேர்தலில் யாருக்கு அங்கீகாரம் கிடைக்கப்போகிறது, யார் அங்கீகாரமற்று ஓடப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.’’

“தொண்டர்கள் அ.தி.மு.க பக்கமும், குண்டர்கள் அ.ம.மு.க பக்கமும் இருக்கிறார்கள் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறாரே?”

‘‘டி.டி.வி.தினகரன் இல்லையென்றால், ஓ.பி.எஸ் இல்லை என்பது ஊருக்கே தெரியும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு ‘பொலிட்டிக்கல் மிராக்கிள்’ ஏற்படப்போகிறது. ஊழலில் கொழிக்கும் அமைச்சர்களை ஓரங்கட்டிவிட்டு, கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் வரப்போகின்றன. இந்த தேர்தலுடன் நாங்கள் காணாமல் போய்விடுவோம் என்று தங்கமணி கூறுகிறார். ஆமாம், நாங்கள்தான் பிரதமரை தேர்ந்தெடுக்க டெல்லி சென்றுவிடுவோமே, இங்கு யார் இருக்கப் போகிறார்கள் (மீண்டும் சிரிக்கிறார்).”

“ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ–க்கள் மீதான தகுதிநீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?”

‘‘இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேர்தான். இதற்கு சட்டமன்றத்திலேயே ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் உள்ளன. ஆனால், தவறே செய்யாத எங்கள் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்துவிட்டு, தவறிழைத்தவர்களுக்குப் பதவி வழங்கியுள்ளனர். உரிமைக்காகக் குரல் கொடுத்து, நாங்கள் பதவியைத் தியாகம் செய்துள்ளோம். நீதிமன்றம் இவ்வழக்கை தாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது.’’

“முக்குலத்தோர் சமூகத்துக்கு ஆதரவான கட்சி என்று அ.ம.மு.க மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?”

‘‘கடந்த ஒரு மாதமாக கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு எல்லாம் சாதி பார்த்துத்தான் மக்கள் கூடுகிறார்களா? இல்லை, அந்த பகுதிகளெல்லாம் முக்குலத்தோர் அதிகமாக உள்ள பகுதிகளா? இளைஞர்கள், சிறுபான்மையினர், அம்மா மீது ஈர்ப்பு கொண்டவர்கள் மத்தியில் தினகரனுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அது பொறுக்க முடியாதவர்கள், இப்படியான கதையைக் கட்டிவிடுகிறார்கள். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க-வில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். இதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.’’

“21 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?”

‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலுடன், 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது என்பது என் கருத்து. திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளதால், அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறலாம். 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அந்த முடிவுகள் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.’’

“சசிகலா, முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இருக்கிறதா?”

‘‘அதுபற்றி எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பததற்கு இல்லை.’’

– ந.பொன்குமரகுருபரன்
படம்: வீ.சக்தி அருணகிரி