முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஓரங்கட்டும் வகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்போகிறார்கள், அங்கு வைகோ போட்டியிடுவார் என்ற தகவல் திருச்சி தி.மு.க-வுக்குள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியில், தி.மு.க-ம.தி.மு.க இடையே பல காய்நகர்த்தல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

திருச்சியில் நடந்துவரும் இந்த அரசியல் மல்லுக்கட்டு குறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், “முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர், ம.தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் வீரபாண்டியன். இவர் 20 வருடங்களுக்கு முன்பு, அன்பில் தர்மலிங்கம் குறித்த புத்தகம் ஒன்றை எழுதி, வைகோ-வை வைத்து வெளியிட முயற்சி எடுத்தார். சில அரசியல் காரணங்களால் அது தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை அச்சிட்டு, வைகோவை வைத்தே வெளியிட்டார். அன்பில் குடும்ப விசுவாசம் காரணமாக, திருச்சி மாவட்ட அரசியலில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு எதிராகவே வீரபாண்டியன் அரசியல் செய்கிறார். இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள தங்களுக்கு திருச்சி தொகுதியைக் கேட்டுவாங்கி, வைகோவைப் போட்டியிடவைக்கலாம் என வீரபாண்டியன் திட்டமிட்டார்” என்ற அவர், மேலும் தொடர்ந்தார்.

“திருச்சியில் வைகோ போட்டியிட்டால், நிச்சயம் வெற்றிபெற்று விடுவார் என வீரபாண்டியன் உறுதியாக நம்புகிறார். எங்களுக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறது.

இது தொடர்பாக, எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் மற்றும் வைகோ இடையிலான சந்திப்புக்கு இரண்டு முறை ஏற்பாடு செய்தார், வீரபாண்டியன். பிறகு, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் வைகோ தனது விருப்பத்தை நேரடியாகக் கூறினார். திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட நான்கு தொகுதிகளை வைகோ கேட்டார். இறுதியாக, இரண்டு தொகுதிகள் கொடுத்தால் திருப்தி என்றும் குறிப்பாக, ‘திருச்சி கிடைத்தால் மகிழ்ச்சி’ என்றும் கூறியுள்ளார். நேரு துபாய் சென்றிருந்தபோது, வீரபாண்டியன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவுக்கு ஸ்டாலினிடம் தேதி வாங்கியதுடன், வீரபாண்டியன் எழுதிய நூலை ஸ்டாலின், வைகோ வெளியிட நேருவைப் பெற்றுக்கொள்ள வைத்தனர்” என்றார் அந்த ம.தி.மு.க புள்ளி.

இந்நிலையில், தன்னைச் சந்தித்த ம.தி.மு.க நிர்வாகிகளிடம் நேரு, ‘2009-ல் இப்படிப் போட்டி போட்டுச் செயல்பட்டதால்தான், காங்கிரஸின் சாருபாலா தொண்டைமான் தோற்றார். உங்கள் தலைவர் ராஜ்யசபா சீட் வாங்கிக்கொண்டு, வேறு யாரையாவது நிறுத்தலாம்’’ என்றாராம்.
இதுகுறித்து நேரு தரப்பினரோ, “அன்பில் தர்மலிங்கம் மறைவுக்குப் பிறகு, அவர் வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் வசம் வந்தது. அவர் ம.தி.மு.க-வுக்குச் சென்றதால், அந்தப் பொறுப்பு நேரு வசம் வந்தது. இப்போது வரை, மாவட்ட அரசியலில் நேரு நிலைத்து நிற்கிறார். அவரை வீழ்த்த, மீண்டும் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ், நேருவுக்கு எதிராகக் காய்நகர்த்துகிறார். கடந்த சில வருடங்களாக, திருச்சி தி.மு.க-வில் கோஷ்டிபூசல் இல்லாமல் இருந்தது. இப்போது, வேறு வடிவில் மீண்டும் கோஷ்டிபூசல் தொடங்கியுள்ளது” எனப் புலம்பினர்.

இது குறித்து வீரபாண்டியனிடம் நாம் கேட்டோம். “தலைவர் வைகோ திருச்சியில் என்னை நிற்கச் சொன்னார். எனக்குச் சரிப்பட்டு வராது என்பதால், அவரையே திருச்சி தொகுதியில் நிற்கச் சொல்லி, அவரிடம் பேசிவருகிறோம். அப்பா அன்பில் தர்மலிங்கம் குறித்து நான் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, எங்கள் குடும்ப நிகழ்வு. அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நான் நேருவை ஓரங்கட்ட வைகோவைத் திருச்சியில் நிறுத்தத் திட்டமிடுவதாகக் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. நேரு என் பள்ளிக்கால நண்பர். சொல்லப்போனால், நேருவை நம்பித்தான் வைகோவை திருச்சியில் நிறுத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

‘துணை’வர்கள்!

ம.தி.மு.க சார்பில் கருணாநிதி நினைவேந்தல் மற்றும் வீரபாண்டியன் எழுதிய “தமிழின் தொன்மையும் சீர்மையும் - கலைஞர் உரை” புத்தக வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. மேடையில் பேசிய ஸ்டாலின், “கலைஞர் உயிருடன் இருந்தபோது, கோபாலபுரம் வீட்டுக்கு வந்த வைகோ, அவர் கையைப் பிடித்து, ‘உங்களுக்குத் துணையாக இருந்ததுபோல், ஸ்டாலினுக்கும் துணை யாக இருப்பேன்’ என்றார். அந்த வார்த்தை களை நான் எப்போதும் மறவேன். நானும் சொல்கிறேன்... வைகோவுக்கு உயிருள்ள வரை துணையாக இருப்பேன்’’ என்றார்.

திருச்சியில் குஷ்பு?

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான குஷ்புவுக்கு சீட் கொடுக்கும்படி தமிழக தலைமையிடம் கூறியுள்ளதாம். அதன் அடிப்படையில், திருச்சியில் குஷ்பு களமிறக்கப்படுவார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

“திருச்சி எனக்குப் பிடித்த ஊர். எனக்கு கோயில் கட்டிய ஊர். அரசியலில் அவமானப்படுத்தப்பட்ட ஊர். திருச்சியில் போட்டியிடுமாறு கட்சித் தலைமை சொன்னால் எனக்கு ஓகே” என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் குஷ்பு சொல்லிவருகிறாராம்.