அரசுத் துறையில் ஏதேனும் ஓர் அலுவலகத்தின் அறையில் வெறுமனே கிடக்கும் ஒரு செங்கல்லை எடுத்து, ஓர் அடி தூரம் தள்ளிவைக்க வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு பில் போட்டுச் செலவு எழுதி விடுவார்கள். மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி - 24) முன்னிட்டு தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தைக் கடந்த ஆண்டு திறந்தார்கள். அந்தத் திறப்பு விழாவுக்கான செலவு விவரங்கள், ஜூனியர் விகடனுக்குப் பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றன.

“ஜெயலலிதா படத்தைத் திறந்து வைப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை குறித்த தகவல்களைத் தர வேண்டும்” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவைச் செயலகம், பொதுப்பணித்துறை, செய்திப்பிரிவு உள்ளிட்ட துறைகளுக்கு விகடன் ஆர்.டி.ஐ குழு மூலம் தகவல்கள் கேட்டோம். நாம் கேட்ட எந்தத் தகவல்களுக்கும், சட்டப்பேரவைச் செயலகமோ, அரசுத் துறைகளோ உரிய முறையில் பதில்கள் அளிக்கவில்லை. ‘செலவினங்களுக்கான பட்டியல் இதுவரை தீர்வு செய்யப்படவில்லை’ என்ற மழுப்பலானப் பதில்களைத்தான் நமக்குச் சொன்னார்கள்.

அவர்கள் தகவல் அளிக்க மறுத்ததால், அது குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நமக்கு அதிகரித்தது. எனவே, அந்த நிகழ்ச்சிக்கு ஆன செலவு குறித்துத் தோண்ட ஆரம்பித்தோம். செய்தியாளர் என்று காட்டிக்கொள்ளாமல் சிலரிடம் நாம் பேசினோம். “ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்காக 750 அழைப்பிதழ்கள் அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டன. எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், முக்கியப் பிரமுகர்கள், அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசுத் தலைமை வழக்கறிஞர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சட்டமன்ற முன்னாள் செயலாளர்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் நேரில் தரப்பட்டன” என்றார்கள்.

ஜெயலலிதாவின் படத் திறப்பு விழா முழுவதும் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டது. இதை, தமிழ்நாடு அரசு திரைப்படப் பிரிவு மேற்கொண்டது எனச் சொல்லப்பட்டாலும், அதுவும் தனியார் வசம்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான செலவைச் செய்தித் துறை செய்திருக்கிறது. விழாவுக்கு வந்தவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி, ஸ்நாக்ஸ், காபி, டீ ஆகியவை வழங்கப் பட்டிருக்கின்றன. விழாவுக்காக, கோட்டையில் வாழை மரங்கள் கட்டப்பட்டன. இதற்கு எந்தச் செலவும் செய்யவில்லை எனப் பொதுப்பணித் துறை பதில் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், வாழை மரங்களே நடந்துவந்து அங்கே நின்றுகொண்டனவா எனத் தெரியவில்லை.

“விழா நாளில் தலைமைச் செயலகத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணி சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மின்னல் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்திடம் தரப்பட்டிருந்தது. இதற்காக, அந்த நிறுவனத்துக்கு 2,53,000 ரூபாய் தரப்பட்டது. இதுதவிர, கட்டட மற்றும் மின்சாரப் பணிகளுக்காக 8.91 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. ஜெயலலிதா திருவுருவப்படத்தை வரைவதற்கான டெண்டரில் ஓவியர் மதியழகன் தேர்வு செய்யப்பட்டு, அவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது” என்றார்கள் விஷயம் அறிந்தவர்கள். எனினும் ஓவியருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது என்ற நமது ஆர்.டி.ஐ கேள்விக்கு உரிய பதில் அளிக்கவில்லை. நம் விசாரணையில் ஓவியருக்கு 10 லட்சம் ரூபாய் தரப்பட்டது என்ற தகவல் தெரியவந்தது.

வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் அம்மாவின் வழியில் நடக்கும் எடப்பாடி அரசு, அம்மாவின் படத்தைத் திறப்பதற்குச் செய்த செலவை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தயக்கம்?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி