‘நிச்சயம் தோல்விதான்’ என்பதை அறிந்தே எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிட்டுவருபவர், பத்மராஜன். அதனாலேயே ‘தேர்தல் மன்னன்’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ள இவர், 200-வது முறையாகத் தேர்தல் களம் காணப்போகிறார்.

மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூரில் வசிக்கும் பத்மராஜனை நாம் சந்திக்கச் சென்றபோது அவர், டூவீலருக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தார். அவரிடம், “இத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் எதைச் சாதித்தீர்கள்?” என்று கேட்டோம்.

‘‘தேர்தல் என்று வந்துவிட்டால், பஞ்சர் ஒட்டுற பத்மராஜனும், பாரதப் பிரதமரும் ஒண்ணுதான் என்ற செய்தியை உலகத்துக்குச் சொல்லியிருக்கிறேனே...’’ என்றார். அவரிடம் மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இதுவரை எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள்?”

‘‘கடைசியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தலுடன், 199-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 200-வது முறையாகப் போட்டியிடப் போகிறேன். தர்மபுரி தொகுதியில் நிற்பேன்.”

“நீங்கள் வாங்கிய அதிக வாக்குகள் எவ்வளவு? குறைந்த வாக்குகள் எவ்வளவு?”

“1999-ம் ஆண்டு வீரக்கல்புதூர் வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்றேன். ஓர் ஓட்டுக்கூட எனக்கு விழவில்லை. ரொம்பவே அப்செட் ஆகிவிட்டேன். 2011-ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் 6,273 ஓட்டுகள் வாங்கினேன். அதுதான், நான் அதிகமாக வாங்கிய ஓட்டு. எனக்கு ஓட்டுப் போட்டவர்களை நினைத்து, அன்றைக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.”

“உங்கள் குடும்பத்தினர் உங்களைத் திட்ட மாட்டார்களா?”

‘‘என் மனைவி, ஆரம்பத்தில் திட்டினார். பிறகு நான் திருந்தமாட்டேன் என்று தெரிந்ததும், தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்.’’

“உங்கள் கொள்கை என்ன?”

‘‘கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்ற விரும்ப வில்லை. என்னைத் தேர்ந்தெடுத்தால், ஊருக்கு உழைப்பேன். இல்லையென்றால், வீட்டுக்கு உழைப்பேன்.’’

“தேர்தல் மன்னன் என்ற பட்டம் வாங்கியதைத் தவிர, வேறு என்ன சாதித்தீர்கள்?”

‘‘1991-க்கு முன்பு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைக் கடத்திக்கொண்டு போய்விட்டாலோ, வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டாலோ, உடனே தேர்தலை நிறுத்திவிடுவார்கள். நான் 1991-ல் ஆந்திராவில் உள்ள நந்தியால் தொகுதியில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை எதிர்த்துப் போட்டியிட்டேன். அப்போது, சிலரால் கடத்தப்பட்டு, கண்காணாத இடத்தில் விடப்பட்டேன். நான் கடத்தப்பட்ட சம்பவம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குப் போனது. உடனே வேட்பாளர் கடத்தப்பட்டாலும், மரணம் அடைந்தாலும் தேர்தல் நடத்தப்படும் என்ற புதிய சட்டத்தை அறிமுகம் செய்தார்கள். அதேபோல, 1996-ம் ஆண்டில் ஐந்து மாநிலங்களில் எட்டுத் தொகுதிகளில் போட்டியிட்டேன். அதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் ஆணையம், ஒருவர் இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. இவையெல்லாம் சாதனைகள் இல்லையா?”

- வீ.கே.ரமேஷ் , படம்: எம்.விஜயகுமார்