நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அரசியல் கட்சிகள் திரைமறைவிலும், வெளிப்படையாகவும் கூட்டணி குறித்துப் பேசிவருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க கூட்டணியில் இந்த இந்தக் கட்சிகள்தான் இடம்பெறும் என்ற இறுதியான நிலவரத்தை நோக்கிக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சென்றுகொண்டிருக்கின்றன. கூட்டணிக் கணக்குகள் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு தொகுதியிலும் யார் போட்டியிடுவது என்பது குறித்து அந்தத் தொகுதிகளில் இப்போதே சிலர் கெத்துக் காட்டுகிறார்கள். ஒரே கட்சியில் ஒரே தொகுதியைக் குறிவைத்து பலர் களம் இறங்குவதால், போட்டி கடுமையாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, எந்தெந்தத் தொகுதிகளில் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது குறித்த கணிப்பு இது...

தூத்துக்குடி
ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் கடந்த ஓராண்டாகவே அந்தத் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். எனவே, கனிமொழிக்கு தூத்துக்குடி ‘முன்பதிவு’ செய்யப்பட்டுவிட்டதாக தி.மு.க-வினர் சொல்கின்றனர். தொகுதிக்கு உட்பட்ட வெங்கடேசுவரபுரம் கிராமத்தைத் தத்தெடுத்து, ரூ.1.5 கோடி வரையில் பணிகளைச் செய்திருக்கிறார், கனிமொழி. தூத்துக்குடி தொகுதிக்குள் நடந்த தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களிலும், பங்கேற்று மக்களின் மனநிலையை அறிந்துவருகிறார். தூத்துக்குடியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான கீதாஜீவனின் சகோதரர் ஜெகன், வழக்கறிஞர் ஜோயல், முன்னாள் எம்.பி-யான ஜெயதுரை ஆகியோரும் ‘மூவ்’ செய்தாலும், அவர்களுக்கு வேட்டுதான்.

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப் பாண்டியன், தற்போதைய எம்.பி-யான ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பி.ஹெச்.பாண்டியன், அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி ஆகியோர் காய்நகர்த்தி வருகின்றனர். நட்டர்ஜி, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்கிற அதிருப்தி நிலவுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் நெருக்கமாக இருக்கும் செல்லப்பாண்டியன் எப்படியும் சீட் பெற்றுவிடத் துடிக்கிறார். செல்லப் பாண்டியனுக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். கனிமொழிக்கு எதிராக வலுவான வேட்பாளராக சரத்குமாரை நிறுத்தலாமா என்கிற யோசனையும் அ.தி.மு.க தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. அ.ம.மு.க-வில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா, மாநிலங்களவை எம்.பி-யான சசிகலா புஷ்பா ஆகியோர் முயற்சி செய்துவருகிறார்களாம். தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி பி.ஜே.பி-க்கு ஒதுக்கப்படுவதும், அங்கே தமிழிசை செளந்தரராஜன் களமிறங்குவதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. எது எப்படியோ, தூத்துக்குடி ஸ்டார் தொகுதி அந்தஸ்து பெற்றுவிடும்.

கோவை
அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பி.ஜே.பி-க்கு கோவை தொகுதி நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியுடன் சி.பி.ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் சீட்டுக்காக மல்லுக்கட்டுகிறார்கள். கடந்த முறை சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்புக் கிளம்பியது. அதையும் மீறித்தான் அவர் போட்டியிட்டார். அவரது தோல்விக்கு அதிருப்தியாளர்கள்தான் காரணம் என்ற பேச்சு இன்றளவும் இருக்கிறது. ஆனால், அமித் ஷாவின் ஆசி இருப்பதால் இந்த முறையும் சி.பி.ஆருக்கே சீட் என்கிறார்கள் பி.ஜே.பி-நிர்வாகிகள்.

தி.மு.க கூட்டணியில் தி.மு.க-வுக்கே தொகுதி கிடைத்தால் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அல்லது அவரின் மருமகன் கோகுல் களமிறக்கப்படலாம். ஆனால், எதிர்க் கூட்டணியில் தேசியக் கட்சியான பி.ஜே.பி களம் இறங்குவதால், தி.மு.க கூட்டணியிலும் தேசியக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சீட் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகத் தோழர்கள் பேசுகின்றனர். எனவே, சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினரான சி.பத்மநாபன், முன்னாள் எம்.பி-யான பி.ஆர்.நடராஜன், தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராசன் ஆகிய மூவரில் ஒருவருக்கு சான்ஸ் அடிக்கலாம். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால், மயூரா ஜெயக் குமாருக்கு சீட் கிடைக்கலாம். அ.ம.மு.க-வில் சேலஞ்சர் துரைக்கே வாய்ப்பு அதிகமாம்.

திருப்பூர்
அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பி.ஜே.பி-க்குப் போகும் சூழல் ஏற்பட்டால், கோவையில் வாய்ப்பு மறுக்கப்படும் ஒருவருக்கு திருப்பூரில் சான்ஸ் அடிக்கலாம். அ.தி.மு.க-வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நிறுத்தப்படலாம். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அல்லது தே.மு.தி.க-வில் இருந்து வந்த தினேஷ்குமார் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு. கடந்த எம்.பி தேர்தலில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட தினேஷ்குமார், தி.மு.க-வைப் பின்னுக்குத்தள்ளி, 2-வது இடத்தைப் பிடித்தவர். தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், முன்னாள் எம்.எல்.ஏ-வான சுப்பராயன் களமிறங்க வாய்ப்பு உண்டு.

திருவண்ணாமலை
தி.மு.க கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையே மீண்டும் போட்டியிடலாம் என்கிறார்கள். எ.வ.வேலுவோ, தன் மகன் கம்பனுக்கு சீட் கேட்டு வருகிறாராம். அ.தி.மு.க-வில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் ஆதரவுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சீட் கேட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனும், எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என முழு மூச்சில் செயல்பட்டு வருகிறார். அ.ம.மு.க-வில் மாவட்டச் செயலாளர் தர்மலிங்கம் அல்லது அவரின் மகன் விஜயராஜ்க்கு சீட் உறுதியாம்.

ஆரணி
அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம் போட்டியிட வாய்ப்பு அதிகம். இப்போதே சண்முகத்தின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். தி.மு.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவானந்தம், தொகுதியைக் குறிவைத்திருக்கிறார். காங்கிரஸுக்குத் தொகுதி போனால், விஷ்ணுபிரசாத் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அ.ம.மு.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் செய்யாறு வரதனுக்கும் போளூர் சி.எழுமலைக்கும் இடையே போட்டி வலுக்கிறது.

காஞ்சிபுரம் (தனி)
தி.மு.க கூட்டணியில் காஞ்சிபுரத்தில் திருப்போரூர் தெற்கு தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருக்கும் பையனூர் சேகருக்கு சீட் கிடைக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சேகர், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர். விட்டமின் ‘ப’ சத்து நிறைந்தவர் எனக் காரணங்களை அடுக்குகிறார்கள். அதே வேளையில், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலாளர் ‘சிறுவேடல்’ செல்வமும் சீட் வாங்க அறிவாலயத்துக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி-யான மரகதம் குமரவேல், மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், காஞ்சிபுரம் இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, காஞ்சிபுரம் ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்
தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலில் தி.மு.க-வில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனிடம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இதனால், இந்தத் தொகுதியை ஜெகத்ரட்சகன் விரும்பவில்லையாம். டி.ஆர்.பாலு இங்கே போட்டியிட விரும்புகிறார் என உடன்பிறப்புகள் சொல்கிறார்கள். 2009-ல் வெற்றிபெற்ற தொகுதி என்பதால், இந்த முறை வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார் டி.ஆர்.பாலு. அதே வேளையில், ராஜீவ் காந்தி இறந்த தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இந்தத் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க-விடம் கேட்டு வருகிறார்கள். அவர்களின் கோரிக்கைக்கு இந்த முறையாவது பலன் இருக்குமா என்று தெரிய வில்லை. எதிரணியில் இப்போதைய அ.தி.மு.க எம்.பி-யான கே.என்.ராமச் சந்திரன் தனக்கு சீட்டு வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார். ஸ்ரீபெரும்புதூரை பா.ம.க குறிவைப்பதால் குழப்பம் நீடிக்கிறது.

தேனி
தன் மூத்த மகன் ரவீந்திர நாத்குமாரை டெல்லிக்கு அனுப்ப வேண்டுமென்பது, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பல வருடக் கனவு. அதனால்தான், ரவீந்திரநாத்குமாரை தேனி தொகுதிக்கு விருப்ப மனுத் தாக்கல் செய்ய வைத்திருக் கிறார். அதே நேரத்தில், எடப்பாடி ஆதரவாளரான கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், தன் மகன் பாலமணி மார்பனுக்கு தேனியைத் தர வேண்டும் என்று கேட்கிறார். பாலமணிமார்பனும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருக்கிறார். சீட் கிடைத்தால் ஒன்று ரவிக்கு அல்லது பாலமணிமார்பனுக்கு என்கின்றனர் தேனி அ.தி.மு.க-வினர்.

தி.மு.க தரப்பில் தேனியில் உதயநிதி களம் இறக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். அதனால்தான், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்த ஊராட்சி கூட்டத்துக்கு மகன் உதயநிதியை ஸ்டாலின் அனுப்பிவைத்தார் என்கின்றனர் தி.மு.க-வினர். அ.ம.மு.க-வைப் பொறுத்தவரை, டி.டி.வி.தினகரன் இங்கே எம்.பி-யாக இருந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை வைத்திருந்தார். எனவே, ‘இளவரசி மகன் விவேக்கை தேனியில் களம் இறக்குவதற்கான வேலை நடந்துவருகிறது’ என்கின்றனர் தேனி மாவட்ட அ.ம.மு.க-வினர். வி.ஐ.பி தொகுதி வரிசையில் தேனியும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

- பா.ஜெயவேல், எம்.புண்ணியமூர்த்தி, இ.கார்த்திகேயன், தி.ஜெயப்பிரகாஷ், கா.முரளி, எம்.கணேஷ்
படங்கள்: தி.விஜய், எல்.ராஜேந்திரன், வீ.சக்தி அருணகிரி, ம.அரவிந்த்