Election bannerElection banner
Published:Updated:

`துரோகம் அழிந்து நீதி தழைக்கும் காலம் வந்துவிட்டது!' - சி.ஆர் சரஸ்வதி

`துரோகம் அழிந்து நீதி தழைக்கும் காலம் வந்துவிட்டது!' - சி.ஆர் சரஸ்வதி
`துரோகம் அழிந்து நீதி தழைக்கும் காலம் வந்துவிட்டது!' - சி.ஆர் சரஸ்வதி

சர்க்கஸ் நடக்கும்போது மக்கள் சோர்ந்துபோகாமல் இருக்க, அவ்வப்போது கோமாளியை உள்ளே விட்டு மக்களுக்கு சிரிப்புக் காட்டுவார்கள். அதுபோல அண்ணன் ஜெயக்குமாரை இ.பி.எஸ் ஓ.பி.எஸ் பயன்படுத்துகிறார்கள்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணைந்து பல கட்சிகள் கூட்டணிக்கு ஆர்வம்காட்டிவருகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார். அத்துடன், ``தி.மு.க மற்றும் அ.ம.மு.க தவிர எந்தக் கட்சியுடன் கூட்டணிக்குத் தயார்’’ என அவர் சொல்லியிருந்தார். இதற்குப் பதிலாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதியிடம் பேசினோம். 

``சர்க்கஸ் நடக்கும்போது மக்கள் சோர்ந்து போகாமல் இருக்க, அவ்வப்போது கோமாளியை உள்ளே விட்டு மக்களுக்கு சிரிப்புக் காட்டுவார்கள். அதுபோல, அண்ணன் ஜெயக்குமாரை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பயன்படுத்துகிறார்கள். எந்தத் துறையின்மீது விமர்சனம் வைத்தாலும் 'நான்தான் இருக்கேன்ல' என ஜெயக்குமார் வந்துவிடுகிறார். அவர்கள் என்ன சொல்வது, எங்களிடம் கூட்டணி இல்லையென்று. துரோகத்தின் முழு உருவமான இவர்களிடம் நாங்கள் ஒருதும் கூட்டணி வைக்க மாட்டோம். பா.ஜ.க அரசு இன்னும் எவ்வளவு நாள்கள் இவர்களைக் காப்பாற்றப்போகிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். துரோகம் அழிந்து, நீதி தழைக்கும் காலம் வந்துவிட்டது" என்றார் சி.ஆர் சரஸ்வதி.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு