Published:Updated:

பா.ஜ. அலுவலகம் முன்பாக இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு!

பா.ஜ. அலுவலகம் முன்பாக இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு!
பா.ஜ. அலுவலகம் முன்பாக இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு!

புதுடெல்லி: பிரதமர்  மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வீடுகள் முன்னர் பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்திற்கு பதிலடியாக, இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று டெல்லி பா.ஜனதா அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜ. அலுவலகம் முன்பாக இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்தது மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய விவகாரங்கள் தொடர்பாக அஸ்வனி குமார், பவன்குமார் பன்சால் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி கடந்தவாரம் பா.ஜனதாவினர், டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது மன்மோகன் சிங்கிற்கு எதிராக பா.ஜனதாவினர் வெளியிட்ட கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியினரை ஆத்திரமடைய வைத்தது. 

##~~##
இந்நிலையில் இதற்கு பதிலடியாக டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினர் போட்டிருந்த தற்காலிக தடைகளை உடைத்தனர். இதனை அடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.