Published:Updated:

`டாஸ்மாக்கை மூடுங்கள்!'- தி.மு.க போராட்டத்தில் குவிந்த பெண்கள்

`டாஸ்மாக்கை மூடுங்கள்!'- தி.மு.க போராட்டத்தில் குவிந்த பெண்கள்
`டாஸ்மாக்கை மூடுங்கள்!'- தி.மு.க போராட்டத்தில் குவிந்த பெண்கள்

ஜவுளித்தொழிலுக்குத் தேவையான நூல்களை வண்ணமேற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பிரச்னையை தீர்க்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதுநாள் வரை சாயக்கழிவுநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. இதுபோல் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், தாலுகா மருத்துவமனைக்கான மருத்துவ வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியவில்லை. தவிர, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பார்கள் மற்றும் சந்துக் கடைகளில் 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்.

சந்துக் கடைகள் மற்றும் அனுமதியில்லாத கடைகளை மூட வேண்டும். அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும் மற்றும் சாயத்தொழிலுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்காத அ.தி.மு.க அரசைக் கண்டித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில், நேற்று குமாரபாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.