Published:Updated:

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!
அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

இந்த வார ஜூனியர் விகடன் இதழை படிக்க க்ளிக் செய்க... : https://bit.ly/2TzD9Ma

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``ஜெயலலிதாவை வெளிநாட்டு சிசிக்சைக்குக் கொண்டுசெல்வதற்கு உதவ மத்திய அரசுத் தயாராக இருந்ததா, இல்லையா என்று நேரடியாக இதுவரை ஆணையத்தில் விவாதிக்கப்படவில்லை. அதனால் அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திடம், 'இதுகுறித்து மத்திய அரசின் பிரதிநிதியாகப் பிரதமர் நரேந்திர மோடி பேசினாரா?' என்ற கேள்வியை சசிகலா தரப்பு எழுப்பும். இதற்கு பன்னீர்செல்வம் தரவிருக்கும் பதில்களில்தான் இருக்கிறது க்ளைமாக்ஸ். பொதுவாகவே ராதாகிருஷ்ணன் முதல் விஜயபாஸ்கர் வரை இந்த விஷயத்தில் மத்திய அரசுக்குச் சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற வகையிலேயே பதில் தந்துள்ளனர். ஒரு முதலமைச்சரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்துக்கொண்ட அக்கறையை, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி எடுக்கவில்லையா என்பதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறது ஆணையம். 'மோடி சொல்லித்தான், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தேன்' என்று மோடிக்கு நம்பிக்கைக்குரிய நபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பன்னீர்செல்வம், இதற்கு என்ன பதில் சொல்வார் என்பதுதான் சஸ்பென்ஸ்" என்றார்கள்.

- ``ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும்" என்று 'தர்மயுத்தம்' நடத்திய ஓ.பன்னீர் செல்வத்துக்கு இப்போது அதே ஆறுமுகசாமி ஆணையத்தால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களையும் பின்னணியையும் தருகிறது 'ஜெ. மரண விசாரணை... மோடியை இழுப்பாரா ஓ.பி.எஸ்?'

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்–டாப், சைக்கிள், செருப்பு, ஸ்கூல் பேக் என 14 விதமான இலவசப் பொருள்களை அரசு வழங்குகிறது. லேப்–டாப்களை ஐ.டி துறையின் கீழ் வரும் 'எல்காட்' நிறுவனமும், சைக்கிளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், மற்ற பொருள்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் கொள்முதல் செய்து வழங்குகின்றன. இதில்தான், ஒவ்வொரு டெண்டரிலும் என்னென்ன முறைகேடு, எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது என்று பல விஷயங்களைத் துருவி எடுத்திருக்கிறார்கள்.''

``ஒரு லேப்-டாப்புக்கு 400 ரூபாய்வரை, துறையின் முக்கியப் புள்ளிக்கு கமிஷனாகப் போயிருக்கிறதாம். அதைத் தவிர்த்து, முடிவு செய்த அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் சேர்த்து, 1,500 ரூபாய் கமிஷன் என்று பேசப்பட்டிருக்கிறதாம். தி.மு.க தரப்பில், 'பழைய லேப்-டாப்பைவிட இது திறன் குறைவு என்பதைத் தொழில்நுட்ப ரீதியாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கவும் தயார்' என்று முஷ்டியை முறுக்குகிறார்கள்.''

``ஒரு ஜோடி செருப்புக்கு 20 ரூபாய் வரை கமிஷன் போகிறதாம். 70 லட்சம் ஜோடிகளுக்கு கமிஷன் எவ்வளவு என்பதைக் கணக்குப் போட்டுப் பாரும்!''

- ``இப்போது அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துவரும் நிலையில், இந்த 'மணி' மேட்டரைத்தான், முக்கிய ஆயுதமாகக் கையாள முடிவு செய்திருக்கிறது, தி.மு.க.'' - இதுகுறித்த உள் விவகாரங்களை 'நெருங்கும் தேர்தல்... உச்சத்தில் ஊழல்! - செருப்பு முதல் பருப்பு வரை!' எனும் தலைப்பில் அடுக்குகிறார் மிஸ்டர் கழுகு.

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

> ``வட இந்தியாவுல இருக்கிறவங்க தங்களோட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் ஒருகட்டத்துக்கு மேல பார்த்துக்க முடியாம ரயில் ஏத்தி அனுப்பிடுவாங்க... ரயில்ல வர்றவங்க இங்க சுத்தி, அடிபட்டு, உதைப்பட்டு, பிரச்னையாகி கடைசியில மனநலம் பாதிக்கப்பட்டவங்கன்னு தெரிஞ்சு, போலீஸ் இங்க வந்து சேர்த்துடும். கடந்த பத்து வருஷமா இப்படியான நிகழ்வுகள் அதிகரிச்சு இருக்கு. அதனாலதான் இங்க வட இந்தியாவைச் சேர்ந்தவங்க நிறையபேர் இருக்காங்க." 

> ஏழாம் எண் வார்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அதிர்ந்துவிட்டோம். இரும்புக் கதவால் பூட்டப்பட்ட அறையில் உடம்பில் ஆடையின்றி ஆதி மனிதர்களைப் போன்ற காட்சியைக் அங்கே கண்டோம். தன்னிலை மறந்து சிரித்துக்கொண்டும் அழுது கொண்டும் தனியாகப் பேசிக்கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தார்கள் அவர்கள். 

> கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதைச் செய்திருக்கிறார் என்றாலும் அல்லது அதற்குப் பிறகு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் அவர்கள் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள்.

> மனநல மருத்துவமனையில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ``எல்லாம் கனவுகளும் பொய்த்துப்போய்.... கடைசியாகத் தன்னோட மனம் விட்டுப் பேசவும் தன்னோட பேச்சைக் கேட்கவும் ஒரு ஜீவன் இருக்காதான்னு ஏங்குறாங்க. அதுவும் கிடைக்காத நிலையில்தான் இப்படி உடைஞ்சுப் போய், மன அழுத்தத்துக்கு ஆளாகி, அதன் அடுத்தகட்டமாக மனப் பிறழ்வு, மனச் சிதைவுன்னு பாதிக்கப்படுறாங்க."

> இன்னொரு பக்கம் ஒரு உண்மை மனதை வெகுவாகப் பாதிக்கிறது. மனநலக் காப்பகத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் மனநலம் குணமானவர்கள். ``எனக்கு நல்லா குணமாயிடுச்சுங்க. ஆனா, கூட்டிட்டுப் போக யாரும் இல்லை. சொந்த ஊருகூட மறந்துடுச்சு. அப்படியே விசாரிச்சு, அங்கே போனாலும் நம்மை சேர்த்துக்கிடுவாங்களான்னுத் தெரியலை" என்றார் ஒரு பெரியவர்.

- சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம், வெளியாட்கள் நுழையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதி. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு ஜூ.வி. டீம் உள்ளே அனுமதிக்கப்பட்டது. இது பரபரப்பு தேடும் முயற்சி அல்ல... உண்மையைத் தேடும் பக்குவப்பட்ட முயற்சி என்பதை ``குணமாகிட்டோம் கூட்டிட்டுப்போக ஆளில்லை!" கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகம் ஒரு லைவ் ரிப்போர்ட் எனும் ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரியை வாசித்து அறியலாம். 

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

மேற்கு வங்காளத்தில் நிகழும் இந்த மோதலுக்கான ஆரம்பப் புள்ளி உத்தரப் பிரதேசத்தில் தொடங்குகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிவிடும் வலுவுடன் இருக்கிறது. 'உ.பி-யில் சுமார் 50 எம்.பி தொகுதிகளை பி.ஜே.பி இழக்கும்' என்கின்றன கணிப்புகள். 'இந்த இழப்பை எங்கு ஈடு செய்வது?' என்ற பி.ஜே.பி-யின் தேடலில் முதலிடத்தில் வந்து நிற்பது மேற்கு வங்காளம்தான். ஏனெனில், உ.பி மற்றும் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பது மேற்கு வங்காளத்தில்தான்...

பல அரசியல் தலைவர்களைச் சிறைக்கு அனுப்பிய இந்த வழக்கு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ விசாரணையில் உள்ளது. இந்த மோசடியில் மம்தாவை நேரடியாகக் குற்றம்சாட்டுகிறது பி.ஜே.பி. மம்தா பானர்ஜி வரைந்த சில ஓவியங்கள் பொது ஏலம் விடப்பட்டு, நிதி திரட்டப்பட்டது... சி.பி.ஐ எதிர்ப்பு விவகாரத்தால் கலவரம் நடந்தாலோ, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானாலோ, மம்தாவின் பெயர் கெடும். 'ஊழல்வாதிகளைக் காப்பாற்றுகிறார்' என்ற பிரசாரத்துக்கும் அது உதவும்...

- தன்னை வருங்காலப் பிரதமராகவே கற்பனை செய்துகொண்டிருக்கும் மம்தா பானர்ஜிக்கும், பிரதமராக இருக்கும் மோடிக்குமான நிழல் யுத்தத்தில், மேற்கு வங்காள போலீஸாரும் சி.பி.ஐ அதிகாரிகளும் நேரடியாக மோதிக்கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணியை விவரிக்கிறது `மம்தாவா? மோடியா? - உச்சம் தொட்ட நிழல் யுத்தம்!' எனும் சிறப்புக் கட்டுரை. 

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``ராஜ்குமார் தன் பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்துடன் கொண்டாடியிருக்கிறார். அப்போது, என் மகளை அவர்கள் கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில், உடல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட என் மகளை, சிலர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதன் பின்பே எங்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். நாங்கள் அதன் பின்பு மூன்று மருத்துவமனைகளில் மாற்றி, மாற்றி  குழந்தைக்குச் சிகிச்சை அளித்தோம். ஆனால், ஒவ்வொரு மருத்துவமனையிலும் எங்களைப் பின்தொடர்ந்து வந்த எம்.எல்.ஏ-வின் ஆள்கள், மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி எங்களுக்கு உண்மை தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். மகள் இறந்தபின்பு பிரேதப் பரிசோதனையிலும் எதுவும் சொல்லவில்லை."

``இரண்டு அரசு மருத்துவமனைகள் உட்பட மூன்று மருத்துவமனைகளில் சிறுமிக்கு மருத்துவம் பார்த்தனர். 'பாலியல் கொடுமை நடந்துள்ளது' என்று மூன்று மருத்துவமனைகளிலும் சொல்லவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகு, பாலியல் கொடுமையால் இறந்ததாக, கேரள அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கேரளத்திலும் தமிழகத்திலும் தொடர் போராட்டங்கள் நடத்தினோம். அதன் பிறகுதான், எஃப்.ஐ.ஆர் மாற்றிப் பதிவு செய்யப்பட்டது. எங்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர். எல்லாவற்றையும் மீறி, குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளோம்."

- வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில்  தி.மு.க-வின் பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவரது நண்பருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்பு வரை பாதிக்கப்பட்ட தரப்பு சந்தித்த நெருக்குதல்களை அப்படியே சொல்கிறது 'தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு பத்தாண்டுகள் சிறை!' எனும் செய்திக் கட்டுரை.

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``இந்த ஆண்டு போலியோ தடுப்பபூசியின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே அதை வாங்குவதற்கு 100 கோடி ரூபாய் வரை கூடுதலாகச் செலவாகும். இதுகுறித்து மத்தியச் சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசோ நிதி ஒதுக்குவதற்குப் பதில், 'சர்வதேசத் தன்னார்வ நிறுவனத்திடம் நிதி வாங்கி முகாமை நடத்துங்கள்' என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது. இதனால்தான் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்குத் தாமதம் ஆகிறது" என்றார்கள்.

- போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்தியா. 2011-க்குப் பிறகு இந்தியாவில் ஒரு போலியோ நோயாளிகூட உருவாகவில்லை. வருடத்துக்கு இரண்டு முறை போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதுடன், தொடர்ச்சியாக ஏற்படுத்திய விழிப்பு உணர்வால்தான் சாத்தியமானது இது. இப்படியாகக் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பாட்டிலிருந்த இந்த நடைமுறையைத் தற்போது மாற்றியிருக்கிறது மத்திய அரசு. இதனால், பிப்ரவரி 3-ம் தேதி நடத்த வேண்டிய போலியோ சொட்டு மருந்து முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியைக் கேட்டறிந்து சொல்கிறது ``மத்திய அரசின் 'போலியோ' தாக்குதல்!" எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிக் கட்டடம் கட்டியதாகத் தினமும் பல நிறுவனங்களுக்குச் 'சீல்' வைத்து அதிரடி காட்டுகிறார் நாகர்கோவில் நகராட்சி ஆணையாளர் சரவணகுமார். பிரபலப் பெரிய நிறுவனங்களும் இவரது அதிரடி நடவடிக்கைக்குத் தப்பவில்லை. அமைச்சர் தொடங்கி உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை இவரது நடவடிக்கைக்கு எதிராக அழுத்தம் கொடுத்தும், எதற்கும் அசராமல் கையில் நீண்ட பட்டியலுடன் கிளம்பியிருக்கும் ஆணையாளரின் அதிரடியால் கதிகலங்கிக் கிடக்கிறார்கள் விதிமுறைகளை மீறிய நாகர்கோவில் வணிகர்கள். இதற்கிடையே ஆணையாளரின் அதிரடி நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கிறது.

- இதுகுறித்த கள நிலவரம் தருகிறது 'விதிமீறல் நிறுவனங்களுக்கு சீல்! - அதிரடி காட்டும் நாகர்கோவில் ஆணையாளர்!' எனும் செய்திக் கட்டுரை. 

அப்போலோ to கீழ்ப்பாக்கம்: 6 நிமிட வாசிப்பில் பின்னணி கிளறும் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

`தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சிப் பேரவை மாநாடு' ஜனவரி 27-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. இதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``முதல்வரிடம் நம் கம்மநாயுடு மாநாடு குறித்த அழைப்பிதழைக் காண்பித்து, சிறப்பு அனுமதி வாங்கிக் கலந்துகொண்டிருக்கிறேன். நம்மிடம் எழுச்சி உள்ளது. இதைப் பயன்படுத்திப் புரட்சி செய்ய வேண்டும். உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டுசெல்வேன். காலம் மாறுகிறதுதான். அதற்காக, பழைமையை மறக்கக் கூடாது. வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கு மொழி பேசுபவர்தான். அவருக்கு கயத்தாறில் மணி மண்டபம் கட்ட முயற்சி செய்துவருகிறோம். நம் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்காகக் குழு அமைத்துச் செயல்படுங்கள். உங்களது தேவைகளுக்கு, அரசு தரப்பில் இருந்து என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன்" என்றார். 

- கோவையில் நடைபெற்ற கம்மநாயுடு எழுச்சிப் பேரவை நடத்திய மாநாட்டில் அமைச்சர் கடம்பூர் ராஜு, ம.தி.மு.க நிர்வாகி தனமணி வெங்கடபதி ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த பின்னணியைத் தருகிறது 'சாதி அமைப்பு நடத்திய மாநாடு... சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்!' எனும் செய்திக் கட்டுரை.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2t5LvQl