Published:Updated:

`ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!'- தி.மு.க-வின் கிராமசபை குறித்து ஓ.பி.எஸ் கிண்டல்

`ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!'- தி.மு.க-வின் கிராமசபை குறித்து ஓ.பி.எஸ் கிண்டல்
`ஸ்டாலினின் நோக்கம் இதுதான்!'- தி.மு.க-வின் கிராமசபை குறித்து ஓ.பி.எஸ் கிண்டல்

``தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டம் மக்களை ஏமாற்ற நடத்தும் கண்துடைப்பு நாடகம்'' என துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் சாடியுள்ளார்.

மதுரை விமான நிலையம் இன்று வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த ஜெயலலிதாவைத் தொடர்ந்து 17 ஆண்டுகளாக அ.தி.மு.க.வை வழி நடத்தினார் மக்கள் போற்றும் விதமாக. 27 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் ஓர் உரிமையை தமிழக மக்கள் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையாகக் கொடுத்துள்ளனர். இதையெல்லாம் மு.க.ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். வரலாறுகளை மறந்துவிட்டுப் பேசக் கூடாது.  அ.தி.மு.க.வினர் மக்களுக்காக உழைத்துள்ளார்கள். கிராமசபை கூட்டம் அரசின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் குடிதண்ணீர், சாக்கடை பிரச்னை என அனைத்து அடிப்படை விவரங்களையும் கேட்டறிந்து சரி செய்து கொடுத்து வருகின்றனர். ஆனால் தானும் கிராம சபை கூட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் தி.மு.க, தலைவர் ஸ்டாலின் கண் துடைப்பாக கிராமசபை கூட்டம் நடத்துகிறார். இதை மக்கள் நம்பவில்லை. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் சரி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கிராம சபை கூட்டத்தை நடத்தவில்லை. தற்போது தேர்தல் நோக்கத்தை வைத்துதான் கிராம சபை கூட்டத்தை வைத்து நாடகம் நடத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.