Published:Updated:

`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை!

`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை!
`நிச்சயம் இதற்கான விளைவை மம்தா அனுபவிப்பார் ' - அமித் ஷா எச்சரிக்கை!

பா.ஜ.க தலைவர்களை மாநிலத்துக்குள் அனுமதிக்காது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிச்சயம் அதற்கான விளைவைச் சந்திப்பார் என அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``பா.ஜ.க தலைவர்கள், மேற்குவங்கம் மாநிலத்தில் நுழைவதை மம்தா தடுக்கிறார். அவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறார். அம்மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் 23 தொகுதிகள் தாமரையால் மலரும். தாமரையை மலர வைக்காமால் ஓயமாட்டோம்' என்று சபதமிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ``நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  விமானம் தரையிறங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்றதொரு நிலைதான் முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இன்று நேர்ந்துள்ளது. பிரதமருக்கே சிறிய மைதானம்தான் ஒதுக்கபட்டது. அதுவும் இரவுதான் தீர்மானிக்கபட்டது. நிச்சயம் இதற்கான விளைவுகளை அவர் அனுபவிப்பார். இந்தக் காட்சிகள் யாவும் முடிவு பெற உள்ளன. பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உள்ளது. அம்மாநில ஆணையர், சிபிஐயிடம் ஊழல்கள் குறித்து எங்கே சொல்லிவிடப்போகிறாரோ என்ற பயத்தில் அவரைக் காப்பாற்றி வருகிறார் மம்தா.

மேற்குவங்கத்தில் இதுவரை 65 பா.ஜ.கவினர் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சமூக விரோதிகளால் கொல்லபட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அதுக்காக வன்முறையையும் கையிலெடுக்க மாட்டோம். தாமரையை சின்னத்தில் மக்களை வாக்களிக்க வைத்து எதிர்வினையாற்றுவோம். பா.ஜ.க ஆட்சியால் நாடே பாதுகாப்பாக உள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நாடே விரும்புகிறது. ஆனால் ராகுல், மம்தா, அகிலேஷ் போன்றோர் எதிர்கின்றனர். அயோத்தியில் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்படும்'' என்றார்