ஜனவரி 27-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை 40 நாள்களுக்குள் நான்குமுறை தமிழகத்துக்கு விசிட் அடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார், பிரதமர் மோடி. நான்காவது முறையாக மார்ச் 6-ம் தேதி சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழா, அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியின் சார்பில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் மோடி பங்கேற்றார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, மார்ச் 6-ம் தேதி பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துக்கு கூட்டம் சேர்ப்பதற்காகத் திருப்பிவிடப்பட்டன. மதியம் ஒரு மணியிலிருந்தே பொதுக்கூட்டத்துக்கு வந்த தொண்டர்களை உள்ளே அடைத்துவைக்கத்தொடங்கினார்கள். உள்ளே சென்றவர்கள் கடுமையான வெயில் காரணமாகத் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் பிரதமர் வந்த ஹெலிகாப்டர் இறங்கியது. முதலாவதாக நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி, பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் பேச்சுகளில், மோடி புகழாரம் தூக்கலாகவே இருந்தது. எடப்பாடி பழனிசாமி, “வலிமையான பாரதத்தை உருவாக்க மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும்” என்றார். பன்னீர்செல்வம், “இந்திய நாட்டின் நன்மைக்காக உறுதியான நடவடிக்கை எடுத்துவரும் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று பாரத நாடே சொல்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளைத் தமிழகத்தில் நிறைவேற்றிவருகிறோம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என்று பெயர் வைக்கப்படும். தமிழகத்துக்கு வந்துசெல்லும் விமானங்களின் புறப்பாடு பற்றி இனி தமிழிலும் அறிவிக்கப்படும்” என்றார். இந்தக் கூட்டத்துக்கு விஜயகாந்தை அழைத்து வரவேண்டும் என்று அ.தி.மு.க தரப்பிலும் பி.ஜே.பி தரப்பிலும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும், அவை பலன் அளிக்கவில்லை. இதனால், மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் புகைப்படம், பிரதமர் வருகைக்கு முன்பு அகற்றப்பட்டது. தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்ட கொடிக் கம்பங்களில் அ.தி.மு.க கொடிகள் பறக்கவிடப்பட்டன.

2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைக் காஞ்சிபுரத்தில் தொடங்கினார் ஜெயலலிதா. அப்போது அமைக்கப்பட்டது போலவே, இப்போதும் சென்டிமென்ட்டாக வடக்கு நோக்கிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க என்று மூன்று பெரிய கட்சிகள் இணைந்தும் எதிர்பார்த்த அளவுக்கு அதிகக் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை. பிரதமர், முதல்வர் பேசும் முன்பே கூட்டத்தினர் கலைந்துசென்றதையும் பார்க்க முடிந்தது.

- பா.ஜெயவேல்
படங்கள்: சி.ரவிக்குமார்