Published:Updated:

இன்ஜின் இல்லாத `வந்தே பாரத் ரயில்' - பிப்.15-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இன்ஜின் இல்லாத `வந்தே பாரத் ரயில்' - பிப்.15-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இன்ஜின் இல்லாத `வந்தே பாரத் ரயில்' - பிப்.15-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத முதல் ரயில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸை’ பிப்ரவரி 15-ம் தேதியில் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலால் `வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று சமீபத்தில் பெயரிடப்பட்ட ரயில் பெட்டி சென்னையிலிருக்கும் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்தான் இந்தியாவின் அதிவேக விரைவு ரயில் ஆகும்.

``பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 15-ம் தேதி காலை 10 மணியளவில் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து இந்த ரயிலைத் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயில் விரைவில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது என்பது இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும்” என்று ரயில்வே அமைச்சகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த ரயில் 16 பெட்டிகளுடன் பழைமையான ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸுக்கான மாற்றாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதில் பயணிப்பதற்கான பயணச்சீட்டு விவரம் எதுவும் இன்னும் சரியாகத் தெரியவில்லை. இந்த ரயில் தன்னுடைய முதல் பயணத்தை புது டெல்லியிலிருந்து வாரணாசி வரை தொடங்கவுள்ளது.