@மா.உலகநாதன், திருநீலக்குடி.
மு.க. ஸ்டாலின், வெற்றிக்கோட்டைத் தொடுவாரா?

கூட்டணி குருமா இப்போதுதான் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தொடுவாரா... விடுவாரா என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்.

எஸ்.அன்பழகன், செங்கல்பட்டு.
‘தி.மு.க கூட்டணிக்கு இந்தத் தடவையும் தோல்விதான்’ என்று மு.க. அழகிரி கூறுகிறாரே?

கட்சியில் இவரைச் சேர்த்துக்கொண்டு, ஒரு சீட்டும் கொடுத்திருந்தால், என்ன சொல்லியிருப்பார் என்று யோசியுங்கள்!

@கே. இந்துகுமரப்பன், விழுப்புரம்.
நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?

விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் மட்டும்தான் அரசியல்வாதி என்பதற்கான உண்மையான அர்த்தத்தோடு நடைபோடக்கூடியவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். பெரும்பாலான நாடுகளில் அராஜகவாதிகள்தான். வாயைத் திறந்தாலே சுட்டுக்கொல்லப்படும் நாடுகளுக்கு நடுவே நம் நாட்டு ஜனநாயகத்தில் ஊடகங்களின் சுதந்திரத்தினால், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன.

@வெங்கடேஷ் கன்னியப்பன்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்திலாவது டெபாசிட் வாங்குமா அ.ம.மு.க?

ஆர்.கே. நகரில் அதிரடிகாட்டி அத்தனை கட்சிகளையும் மண்ணைக் கவ்வ வைத்த தினகரன், அத்தனை சுலபமாக இந்தத் தேர்தலைக் கடந்துவிடுவார் என்று தோன்றவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கும்வரை காத்திருக்கலாமே!

@கோ.செழியன், உத்தமபாளையம்.
அனைத்துக் கட்சிகளும் கொள்கையில் நாணலாக இருக்கின்றனவே?

அதற்காக அவர்கள் துளிகூட நாணுவதே இல்லை!

@இ. முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்
ம.தி.மு.க, நாம் தமிழர், மே 17 இயக்கம் போன்ற தமிழக அமைப்புகள் ஏன் சேர்ந்து செயல்பட மறுக்கின்றன?

இவர்கள் தமிழ் மற்றும் தமிழர் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள். இதேரீதியில் மனித உரிமை, சுற்றுச்சூழல், சமூகநீதி, விவசாயம், ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு, ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை என்று பல்வேறு தளங்களில் குரல் கொடுப்பவர்களும்கூட சேர்ந்து பயணிப்பதில்லை. பல்வேறு அமைப்புகளாக, கட்சிகளாக, இயக்கங் களாகத்தான் சிதறிக் கிடக்கிறார்கள். கொள்கை ஒன்றே என்றாலும், ஒன்று சேர்ந்து பயணிக்கத் தடையாக இருப்பது, ஈகோ உள்ளிட்ட சில விஷயங்கள்தான். தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த விஷயங்களைக்கூடக் கடந்து ஒன்றுபட முடியாதவர்களால், ஒரு நாளும் கொள்கைகளை வென்றெடுக்க முடியாது. இதைத்தான் காலம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது!

என்.நடராஜன், திருவண்ணாமலை.
டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தைக் குறைத்திருப்பது, திருட்டுத்தனமான விற்பனையை இன்னும் அதிகரிக்கும்தானே?

நிச்சயமாக, இதனால் அரசாங்கத்தின் வருவாய் இலக்கு துளிகூட குறையாது. அதேசமயம், கோல்மால் ஊழியர்களின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கவே செய்யும்.

@கோவை. நா.கி.பிரசாத், கு.வடமதுரை, கோவை&-17.
‘தேர்தலில் போட்டியில்லை... எவருக்கும் ஆதரவும் இல்லை’ என்ற ரஜினியின் முடிவு, யாருக்குச் சாதகம், யாருக்குப்பாதகம்!?”

இரண்டுமே ரஜினிக்குத்தான்.

பி.பாலாஜி, உத்தரமேரூர்.
‘பாண்டவர்கள் அணியான அ.தி.மு.க கூட்டணி, கௌரவர்கள் அணியான தி.மு.க கூட்டணியை வெற்றிகொள்ளும்’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே?

அரசியல் என்பதே சூதாட்டமும் சேர்ந்ததுதானே!

@சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்
பா.ம.க-வை ஸ்டாலின் மோசமாக விமர்சித்தும் பெரிய அளவில் அன்புமணி எதிர்வினை ஆற்றக்காணோமே?

தேர்தலுக்குப்பிறகு ‘நேர்வினை’யாற்ற வேண்டியதுகூட இருக்கலாம் அல்லவா!

@மன்னை சித்து , மன்னார்குடி -1.
ரஜினியின் முரட்டுப் பக்தர், காந்தியவாதி தமிழருவி மணியனின் சத்தத்தையே காணோமே?

முதலில் ரஜினியின் சத்தத்தையே காணோமே!

@பி.ரஹீம், மதுரை-18.
சிறைப்பட்ட இந்திய விமானப்படை வீரர், தன்னுடைய முகவரியைக் கேட்டபோது ‘இந்தியா’ என்றுதான் கூறினார். ஆனால், ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் செய்த செயல் சரியானதா?

நிச்சயமாக வெட்கப்பட வேண்டிய செயலே! ‘இந்தியாவில் தென்பகுதி’ என்பதோடு நிறுத்திக் கொண்டார் அபிநந்தன். ஆனால், வீட்டுவாசல் வரை படம்பிடித்துப் போட்டுவிட்டார்கள். ‘ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி’ என்று அத்தனை அரசியல்வாதிகளும் அவருடைய வீட்டுக்கு வேறு படையெடுத்தனர்.

@நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், யார் பிரதமர்?

அப்போது ஒரிஜினல் இத்தாலி. அதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இப்போது, இந்திய - இத்தாலி கூட்டுத்தயாரிப்பு. இதற்கு எதிர்ப்பு கிளம்பாது என்றே தோன்றுகிறது. ஒருவேளை தோன்றினால், இருக்கவே இருக்கிறார்... சிங்.

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.
அபிநந்தனின் முதல் வீடியோ காட்சிகள் வெளிவராமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

‘கெட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் குப்பைத் தொட்டி’ என்று சமூகவலைதளங்களின்மீது குற்றம்சாட்டப்படுகிறது. அதேசமயம், அபிநந்தனைக் காப்பாற்றியது போன்ற நல்ல விஷயங்களுக்கும் அதே சமூகவலைதளங்கள்தான் காரணமாக இருக்கின்றன. அந்த வீடியோ மட்டும் பகிரப்படாமல் இருந்திருந்தால்... இந்நேரம் போர்கூட மூண்டிருக்கக்கூடும்.

எம்.டி. சகுந்தலா, சென்னை.
‘பீரியட். எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’ (Period. End of Sentence) என்ற இந்தியாவின் ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதைப்பற்றி?

இயற்கையின் ஏற்பாடான மாதவிடாய் என்பதுதான் பிறப்பின் ரகசியமே! ஆனால், மூடநம்பிக்கையின் காரணமாக அதையும் இங்கே முடக்கிவைத்துவிட்டோம். அந்த நாள்களில் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக நினைத்துக் கொண்டு, வாழ்நாள் எல்லாம் பெண்கள் வலி சுமக்கும் நிலையை உருவாக்கி வைத்துள்ளோம். ‘நாகரிகச் சமுதாயம்’ என்று சொல்லிக்கொள்ளும் இந்த நாள்களிலும்கூட, அதுவும் தலைநகர் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும்கூட இந்தப் பிரச்னைகளால் பெண்கள் அல்லல்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். இதற்கு விடைதேடும் விதமாகத் தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் ஆரம்பித்த குறைந்தவிலை நாப்கின் என்பதுப் பெரும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் கிடைத்த மரியாதையே... இந்த ஆஸ்கர்!

ஜி.குணசேகரன், செங்கல்பட்டு.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து கலைமாமணி விருது அறிவித்துள்ளார்களே, இது சரியா?

சரியானவர்களுக்கு மட்டுமே அறிவித்திருந்தால் சரியே. சரிப்பட்டு வருபவர்களுக்கு அறிவித்திருந்தால் தவறே!

ஜே. ஜானி, சென்னை 69
‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்திருப்பது தமிழக மண்ணையும் மக்களையும் மீட்டெடுக்கத்தான்’ என்கிறார் அன்புமணி. யாரிடமிருந்து மீட்டெடுக்கப் போகிறார்?

முதலில் இவர்களிடமிருந்து நாம்தான் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
தொலைந்துபோன குழந்தை, தாயோடு சேரும் அந்தத் தருணம்?

‘ஒரு தெய்வம் தந்த பூவே!’

@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.
புத்தக வடிவில் படித்த அதே கதையை, சினிமாவாகத் திரையில் காணும்போது ஏமாற்றம் ஏற்படுவது ஏன்?

மசாலா தூவினால்தான் வெற்றி என்கிற மூடநம்பிக்கை; வார்த்தைகளைக் காட்சிகளாக வடிவமைப்பதில் இருக்கும் சிக்கல்கள்... இப்படிக் காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அச்சுமொழியில் பேசப்படும்வரை எழுத்தாளனின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இலக்கியம், திரைமொழியில் பேசப்படும்போது முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடுகிறது. இதுதான், பெரும்பாலான நாவல்களின் உயிர்ச் சிதைப்புக்கு முக்கியகாரணம்.

@கார்த்திகேயன் கவிதா.
அன்றைய தி.மு.க அரசுக்கு எதிராக எம்ஜிஆர் பாடிய சினிமா அரசியல் பாடல்கள், தற்போது அவரது கட்சிக்கே பொருந்துகிறதுதானே?

உண்மைதான், அவருடைய பல பாடல்கள்(அந்தப் பாடல் ஆசிரியர்கள் தீர்க்கதரிசிகள்) இன்று அ.தி.மு.க-வையும் நோக்கித்தான் அம்பு தொடுக்கின்றன.

‘ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் நிலை மாறும்’

‘மனிதன் என்ற போர்வையில்
மிருகம் வாழும் நாட்டிலே
நீதி என்றும் நேர்மை என்று
எழுதி வைப்பார் ஏட்டிலே’

‘போடும் பொய்த்திரையைக்
கிழித்துவிடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்’

- இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

படங்கள்: சு.குமரேசன்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757,
அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!