நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கெல்லாம் வேட்பாளர் வாய்ப்பு என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை. கடந்த இதழின் தொடர்ச்சி இது...

கள்ளக்குறிச்சி

அ.தி.மு.க கூட்டணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியும், முன்னாள் அமைச்சர் மோகனின் தீவிர ஆதரவாளருமான சிட்டிங் எம்.பி காமராஜுக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அதேநேரம் தனது மகன் நமச்சிவாயத்துக்கு எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று சென்னையில் டேரா போட்டிருக்கிறார் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ-வும், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான குமரகுரு. தற்போதைய நகரச் செயலாளராக இருக்கும் ஷ்யாம் சுந்தரின் பெயரும் பட்டியலில் இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், இந்தத் தொகுதியில் எல்.வெங்கடேசன் களமிறங்கலாம். தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட மணிமாறனையே நிறுத்த முடிவு செய்திருக்கிறார்களாம். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியின் பெயரும் அடிபடுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர்தான் தி.மு.க வேட்பாளர் என்பதே தற்போதைய நிலவரம்.

மத்திய சென்னை

தயாநிதி மாறன் பெயர் அறிவிக்கப்படாதது மட்டும்தான் பாக்கி. கூட்டணிப் பேச்சுவார்த்தையே முடியாத நிலையில், இரண்டு பாகங்களாக முகவர்கள் கூட்டத்தை மத்திய சென்னையில் நடத்தி முடித்துவிட்டார் தயாநிதி மாறன். அ.தி.மு.க-வில் போட்டியிட கோகுல இந்திரா, மைத்ரேயன் இடையே போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்.பி-யான விஜயகுமாருக்கு தொகுதிக்குள் பெயர் இருந்தாலும், அவருக்கு வேட்டுவைக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள். முன்னாள் எம்.பி பாலகங்கா, சிட்டிங் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் இப்படிக் கடும்போட்டி நிலவுவதால் தொகுதியை பா.ம.க-வுக்கு ஒதுக்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. அ.ம.மு.க-வில் அமைப்புச் செயலாளராக இருக்கும் சுகுமார் பாபுவுக்கு சீட் கிடைக்கலாம். அதேசமயம் முஸ்லிம்கள் வாக்குகள் இங்கே அதிகம் என்பதால் அ.ம.மு.க-வில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு, தொகுதி போகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில், தேசியத் துணைத் தலைவர் தெஹ்லான்பாகவி அங்கே நிற்க வாய்ப்புண்டு.

வேலூர்

வன்னியர், முதலியார், இஸ்லாமிய சமூகத்தினர்தான் வேலூர் தொகுதியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்கள். இதனால் அனைத்துக் கட்சிகளும் இந்தச் சமூகத்திலிருந்துதான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். கடந்த தேர்தலிலேயே, தன் மகன் கதிர் ஆனந்துக்காக வேலூரைக் குறி வைத்திருந்தார் துரைமுருகன். இந்தமுறை எப்படியும் வாங்கிவிடுவார் என்கிறார்கள் உடன்பிறப்புகள். கட்சிக்காக உழைத்த பலர் உள்ள நிலையில், துரைமுருகன் மகனுக்குக் கட்சிக்குள்ளேயேக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. துரைமுருகனை எதிர்க்கப் பலம் இல்லாததால், ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ள ஒரு எம்.எல்.ஏ மூலம் குழி பறிக்கும் வேலையும் நடக்கிறது. தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறி வைக்கும் தொகுதிகளில் ஒன்றாக வேலூரும் இருக்கிறது.

அ.தி.மு.க-வில் செல்வாக்கு நிறைந்த முக்கியத் தலைகள் வேலூரில் இல்லை. அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால், அந்தக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வேலூரில் களமிறக்க அ.தி.மு.க முடிவெடுத்திருக்கிறது என்கிறார்கள். கடந்த தேர்தலில், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார் ஏ.சி.சண்முகம். தேர்தல் செலவுக்குப் பணமும் அவருக்கு ஒரு பிரச்னையாக இருக்காது. கடந்த தேர்தலில் இவரது தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, இந்தமுறை எப்படி இவருக்குத் தேர்தல் பணி செய்வார் என்ற கேள்வி எழுகிறது. அவரது ஒத்துழைப்பு இல்லாவிட்டால், இங்கே கரையேறுவது சிரமம். தவிர, அ.தி.மு.க-வில் மாநில எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் மூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகனான வழக்கறிஞர் பாலசந்தர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.

அ.ம.மு.க கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஞானசேகரன், கலையரசு இருவரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.

திருவள்ளூர்

கடந்த பத்தாண்டுகளாக எம்.பி-யாக இருக்கும் டாக்டர் பி.வேணுகோபால் மீண்டும் போட்டியிடலாம். மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்திருக்கிறார்கள். ஆனால், வாய்ப்புக் குறைவு என்கிறார்கள். கடந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு திருவள்ளூர் ஒதுக்கப்பட்டது. இந்தமுறை தி.மு.க-வே போட்டியிட விரும்புகிறது. தி.மு.க-வில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத் துணைச் செயலாளரான ஏற்கெனவே எம்.பி தேர்தலில் நின்று தோற்ற காயத்திரி ஸ்ரீதர், முன்னாள் எம்.பி-யான கிருஷ்ணசாமி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தவிர, தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமானவருமான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா பெயரும் அடிபடுகிறது. அ.ம.மு.க-வில் மாவட்டப் பாசறைத் துணைச்செயலாளர் வெற்றிவேல் போட்டியிடலாம்.

பொள்ளாச்சி

பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைந்தாலும் பொள்ளாச்சியை அ.தி.மு.க விட்டுத்தராது. சிட்டிங் எம்.பி-யான மகேந்திரன் மீண்டும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார். தொகுதியில் தனக்கு நல்ல பெயர் இருப்பதால், அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறார். பொள்ளாச்சி நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் சீட் வாங்க முயற்சி செய்கிறார். மகேந்திரனுக்கு வாய்ப்பு அதிகம். அ.ம.மு.க-வில் மடத்துக்குளம் சண்முகவேல், முன்னாள் அமைச்சர் தாமோதரன் பெயர்கள் அடிபட்டன. ஆனால், தாமோதரன் தடாலடியாக தாய்க்கட்சிக்கே திரும்பிவிட, ஆடிப்போயிருக்கிறது அ.ம.மு.க வட்டாரம். அதனால், சண்முகவேலுதான் அ.ம.மு.க-வின் சாய்ஸ்.

பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க பலவீனமாக இருக்கிறது என்கிறார்கள். கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிட்டும், தி.மு.க மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தது. இரண்டாம் இடம்பிடித்தவர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். எனவே, தி.மு.க கூட்டணியில் ஈஸ்வரன் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. ஈஸ்வரன் நாமக்கல்லுக்கு மாறினால், தி.மு.க-வில் மாநிலப் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

நீலகிரி

ஆளுங்கட்சியில், சிட்டிங் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகர மன்ற முன்னாள் தலைவர் சரவணன், ஜெகதளா பேரூராட்சியின் முன்னாள் தலைவர் உஷா விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். கோபாலகிருஷ்ணன் பெயர் ஏகத்துக்கும் ‘டேமேஜ்’ ஆகியிருப்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் பி.ஜே.பி நிர்வாகி குருமூர்த்தி வேட்புமனு குளறுபடியில் திடீரென்று ‘பேக்’ அடித்ததால்தான், அ.தி.மு.க வெற்றி பெற்றது. அந்த குருமூர்த்தி, இப்போது அ.தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார். அவரும் அ.தி.மு.க-வில் சீட் வாங்கிவிட முயற்சி செய்கிறார். சபாநாயகர் தனபாலின் மகன் லோகநாதனும் இந்த ரேஸில் இருக்கிறார். பி.ஜே.பி போட்டியிட்டால் நாமக்கல் முருகன் வேட்பாளராக நிறுத்தப்படலாம்.

அ.ம.மு.க-வில் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், ஊட்டி நகராட்சி முன்னாள் தலைவர் சத்யபாமா பெயர்கள் அடிபடுகின்றன. தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாதான் மீண்டும் போட்டியிடுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவருக்காக, சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்யும் பணியை, தி.மு.க-வினர் இப்போதே தொடங்கிவிட்டனர்.

நாமக்கல்

கொங்கு வேளாளர் சமூக மக்கள் அதிகமுள்ள நாமக்கல் தொகுதியில் சிட்டிங் எம்.பி-யான பி.ஆர்.சுந்தரம் மீண்டும் போட்டியிட காய்நகர்த்துகிறார். அமைச்சர் தங்கமணி, தனக்கு விசுவாசமாக உள்ள ஒருவரை நிறுத்த முயற்சிசெய்கிறார். தி.மு.க-வில் காந்திச்செல்வனுக்கு சீட் உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதேசமயம், காந்திச்செல்வனுக்கு எதிரியாக இருக்கும் ‘வெப்படை’ செல்வராஜ், காந்திச்செல்வன் சீட் பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தொகுதி தே.மு.தி.க–வுக்கு ஒதுக்கப்பட்டால், மோகனூர் விஜயன், செளந்தரராஜன், பொங்கியண்ணன், அ.ம.மு.க-வில் ஆடிட்டர் நல்லியப்பன் (ராசிபுரம்), என்.கே.பி.ரவிச்சந்திரன் (நாமக்கல்) ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம்.

திருச்சி

சிட்டிங் அ.தி.மு.க எம்.பி-யான குமார், மூன்றாவது முறையாகக் களமிறங்க நினைக்கிறார். இதற்காக அவர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமிருந்த திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கட்சிக்காரர்களைப் பலமாகக் கவனிக்கும் வேலைகளிலும் இறங்கியுள்ளார் குமார். திருச்சி புறநகர் ஜெயலலிதா பேரவை நிர்வாகியான பவன்குமார், அருண் செந்தில்ராம், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோரும் மலைக்கோட்டை மாநகரைக் குறிவைக்கிறார்கள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேருவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான மலைக்கோட்டை கார்த்திகேயன் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளரான புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் ஆகியோரும் சீட் கேட்டிருக்கிறார்கள். யாருக்குக் கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் நேருவிடம், திருச்சி மாநகரச் செயலாளர் அன்பழகன், இந்தமுறை மீண்டும் சீட் வாங்கிக்கொடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளாராம். ம.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் திருச்சியைக் குறிவைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி-யான அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸ், கடந்த சில வருடங்களாகவே தேர்தலைக் குறிவைத்து வேலை செய்துவருகிறார். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரும் திருச்சியைப் பெற்றுவிட ‘மூவ்’ செய்கிறார். இன்னொரு பக்கம் குஷ்பு பெயரும் அடிபடுகிறது. ஆனால், திருநாவுக்கரசர் நிற்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க.,வந்தால் திருச்சியில் சுதீஷ் அல்லது ஏ.எம்.ஜி.விஜயகுமார் போட்டியிடலாம். அ.ம.மு.க-வில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் அல்லது புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திகேயன் போட்டியிடக்கூடும்.

- சி.ய.ஆனந்தகுமார், ஜெ.முருகன், இரா.குருபிரசாத், இரா.தேவேந்திரன், ர.ரகுபதி, கோ.லோகேஸ்வரன், பொன் குமரகுருபரன்