2016 சட்டமன்றத் தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு நான்கு இடங்களைக் கொடுத்து அழகு பார்த்த தி.மு.க., இந்தமுறை அந்தக் கட்சிக்கு சீட் எதுவும் ஒதுக்கவில்லை. இதனால், கொதிநிலையில் இருக்கும் அந்தக் கட்சியின் தொண்டர்கள் சமூகவலைதளங்களில் தி.மு.க-வை வறுத்தெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்துப் பேசினோம்.

“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ம.ம.க-வின் தற்போதைய நிலை என்ன?’’

“வருகிற 9-ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும். அதில், தேர்தலை எதிர்கொள்வது குறித்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு முடிவுசெய்வோம்.’’

“நீங்கள், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது’ என்று தெரிவித்ததுடன், திருநெல்வேலி தொகுதியைக் குறிவைத்துக் கேட்டதால்தான், தி.மு.க கூட்டணியில் உங்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை என்கிறார்களே... உண்மையா?’’

“தொகுதி பேச்சு வார்த்தை அளவுக்கு எல்லாம் போகவே இல்லை. ஆனால், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது’ என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், இருக்கிறோம். காரணம், பதிவுசெய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளர், வேறொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு முரணானது. எனவே, நாங்கள் அதில் விட்டுக்கொடுக்கவில்லை. எங்களது இந்த உறுதியான நிலைப்பாடே, சீட் கிடைக்காமல் போனதற்கான காரணமாகவும் இருக்கலாம்.’’

“விடுதலைச் சிறுத்தை கட்சியினரையும் தி.மு.க., தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகக் கூறப்பட்டது. ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் ம.தி.மு.க-வினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் என்ன ஆகும்?’’

“நிச்சயமாகச் சிக்கல் ஏற்படும். தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டும்தான் சொந்தச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பதிவுபெற்ற ஓர் அரசியல் கட்சி. எனவே, அந்தக் கட்சியின் தலைவரான தோழர் திருமாவளவன், நாளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், அவர் தி.மு.க உறுப்பினராகவே கருதப்படுவார். அப்போது அவர் தன்னை வி.சி.க-வின் உறுப்பினர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதனால் ஏற்படப்போகும் சட்டச் சிக்கல்களுக்கு உதாரணங்களாக, பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சின்னம் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை.”

“தி.மு.க கூட்டணியில் இடம் அளிக்கப்படாதது, ம.ம.க-வின் பி.ஜே.பி எதிர்ப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?’’

“பி.ஜே.பி-யை எதிர்க்க வேண்டும்; மீண்டும் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனவே, இந்த விஷயத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். ஆனால், இதையே எங்களது பலவீனமாக யாரும் கருதிவிடக் கூடாது. மாவட்டம், ஒன்றியம் என்று தமிழகம் முழுவதும் வலுவான கட்டமைப்பு கொண்டுள்ள ம.ம.க-வுக்கு, தி.மு.க கூட்டணியில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரத்தில் - உரிமையில் கைவைக்கப்பட்டதாகவே எங்கள் மக்கள் கருதுகிறார்கள். எனவே, பி.ஜே.பி எதிர்ப்பு மற்றும் கட்சியின் எதிர்காலம் இரண்டையும் கருத்தில்கொண்டே செயற்குழுவில் கூடி முடிவு எடுப்போம்.’’

“தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு சீட் வழங்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அங்கீகாரம்தானே?’’

“சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கட்சிகள் தி.மு.க-வுடன் இணைந்து பயணித்துவரும் சூழலில், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு சீட் வழங்கப்பட்டிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேநேரம் ம.ம.க-வுக்கு இடம் அளிக்கப்படாததால், சிறுபான்மை இன மக்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் குறைகிறது அல்லவா... இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இந்தக் குறையை நேர்செய்யும் வாய்ப்பு தி.மு.க-வுக்கு இருக்கிறது.’’

“2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவந்த எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு இடம் மறுக்கப்பட்டதும், இறுதியாக வந்துசேர்ந்த ம.ம.க-வுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதும் நடந்திருக்கிறதே?’’

“அப்படியல்ல... 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாங்கள் தி.மு.க கூட்டணியில், இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில்தான் போட்டியிட்டோம். தொடர்ந்து அவர்களுடனேயே கூட்டணியில் இருந்துதான், 2016 சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தோமே தவிர, கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்டோம் என்பது தவறான தகவல்.’’

‘‘சீட் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில், ‘பி.ஜே.பி எதிர்ப்பு வாக்குகள் சிதறிவிடக்கூடாது’ என்றபடி தொடர்ந்து தி.மு.க அணிக்கு ஆதரவு அளிப்பீர்களா?’’

“பி.ஜே.பி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி என்ற முறையிலும் எங்களை ஆதரிக்கும் மக்களின் விருப்பத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டே நல்லதொரு முடிவு எடுப்போம்!’’

- த.கதிரவன்
படம்: தே.அசோக்குமார்