“சாதி மோதலை உருவாக்கும்விதமாகப் பேசினார்” என்று தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன்மீது புகார் எழுந்துள்ளது. கீதாஜீவன் பேசியதாக தேர்தல் நேரத்தில் வெளியாகியிருக்கும் ஆடியோவால், தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்படுமோ என்று அதன் நிர்வாகிகள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி எம்.எல்.ஏ-வான கீதாஜீவன் ஒரு நபரிடம் பேசுவதாக ஆடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த ஆடியோவில் கீதாஜீவன், ‘பட்டியல் இனத்தில் உள்ள ஏழு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கலைஞர் முதல்வராக இருந்தபோதே வந்தது. அதைப் பரிசீலிக்கவும் அதுதொடர்பாக அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களிடம் ஒப்புதல் கேட்டு அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பரிசீலனை செய்வோம் என்றுதான் ஸ்டாலினும் பேசியிருக்கிறாரே தவிர, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட மாட்டோம்’ என்று அந்த நபரிடம் சமாதானப்படுத்தும் வகையில் கீதாஜீவன் பேசத்தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘இந்தக் கோரிக்கையை ஆதரித்து கோவில்பட்டிக்கு கனிமொழி வந்தபோதே சைவ வேளாளர் அமைப்பைச் சேர்ந்த சிலர் மனுக் கொடுத்தார்கள். உங்களுக்கு அதில் விருப்பம் இல்லையென்றால், உங்களுடைய எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் அரசு குழுவின் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் மனுக் கொடுங்கள். கனிமொழி, ஸ்டாலின், அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் உங்கள் எதிர்ப்புக் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் மனுக் கொடுங்கள். டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் மனு அனுப்புங்கள். அதில், ‘எங்களுடைய வேளாளர் பெயரைச் சேர்க்கக் கூடாது. முக்குலத்தோர் என இருப்பதுபோல தேவேந்திர குலத்தோர் என வைத்துக்கொள்ளுங்கள்’ என எழுதி அனுப்புங்கள். இது உங்களின் உரிமை. அதற்கு மரியாதை கொடுத்துக் கேட்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை’ என்று பேசுகிறார்.

இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் பேசியவர்கள், ‘‘கீதாஜீவனின் பேச்சு வன்மம் கொண்டதாக இருக்கிறது. இது குறித்து தி.மு.க தலைமையிடம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாகப் புகார் செய்திருக்கிறோம். அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்’’ என்று முடித்துக்கொண்டார்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ-வான கீதாஜீவனிடம் பேசினோம். “தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி மேடத்திடமும் தம்பி உதயநிதியிடமும் குறிப்பிட்ட ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதே கோரிக்கை, கடந்த தி.மு.க ஆட்சியிலும் வைக்கப்பட்டது. அப்போது ஏழு பிரிவுகளில் ஒன்றான வாதிரியார் சமூகத்தினர் தங்களைத் தேவேந்திரகுல வேளாளர் என்ற பிரிவில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், அப்போதைய முதல்வர் கலைஞர், ஏழு பிரிவுகளின் மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அரசுக்கு அறிக்கை தர நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் கமிட்டி அமைத்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த கமிட்டியின் அறிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்வோம் எனச் சொன்னோம்.

சில நாள்களுக்கு முன்பு ஒருவர் போன் செய்து, ‘வேளாளர் என்ற எங்க சாதியை தேவேந்திர குலத்தாருடன் இணைத்து அறிப்போம்னு எப்படி சொல்வீங்க...’ என்று அவதூறாகப் பேசினார். பிறகு, திரும்பத் திரும்ப வெவ்வேறு எண்களிலிருந்து போன் வந்தது. அப்படி வந்த அழைப்பில் ஒருவர், பொறுமையாக என்னிடம் பேசினார். அவரிடம் இந்த விளக்கங்களைச் சொன்னேன். அப்போது என்னிடம் அந்த நபர், ‘வேளாளர் சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக் கொடுக்க உள்ளனர்’ என்று சொன்னார். ‘தற்போது ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க-தான். அதனால் அவங்ககிட்டயும் எல்லா எம்.எல்.ஏ-க்கள்கிட்டயும் மனுக் கொடுங்கள்’ என்று அப்போது சொன்னேன். இதுதான் நடந்தது. நான் சாதிப் பிரச்னையைத் தூண்டிவிடுகிறேன் என்று சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். நான் விளக்கம் அளித்த முழுமையான உரையாடலை அவர் வெளியிடவில்லை. எடிட் செய்து தங்களுக்குச் சாதமாகப் பரப்புகின்றனர். இதன் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாகச் சந்தேகிக்கிறேன்’’ என்றார்.

- பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன்
படம்: எல்.ராஜேந்திரன்