“சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்” என்று போகிற போக்கில் கரி அள்ளிப்போட்டிருக்கிறார் மோடி. இதேபோல் கூட்டணிக் கட்சிக்காரர்களின் மனம் குளிர, வேறு எதற்கெல்லாம் எவர் பெயரைச் சூட்டலாம் என எல்லோருக்கும் ஐடியா கொடுக்கிறான் இந்த அய்யனாரு!

பொடி இட்லி, தட்டு இட்லி, மினி இட்லி, இவ்வளவு ஏன் குஷ்பு இட்லி கூட இருக்கிறது. ஆனால், இட்லி என்னும் பண்டைய உணவுக்கு மறுவாழ்வு கொடுத்த அ.தி.மு.க-காரர்களின் பெயரில் இட்லி இல்லாததை நினைத்தாலே வெறும் இட்லியை முழுங்கினாற்போல் தொண்டை கவ்வுகிறது. அதனால், அந்த கோடி ரூபாய் இட்லிக்கு அம்மாவின் திருநாமத்தை சூட்டலாம். இதய தெய்வம் இடியாப்பம், தங்கத்தாரகை தோசை, புரட்சித்தலைவி புரோட்டா என அடுத்தடுத்த மெனுக்களையும் உருவாக்கி, கெத்து காட்டலாம்!

அண்ணாசாலை, அண்ணா சிலை, அண்ணாநகர், அண்ணா நினைவகம் என அண்ணாவின் பெயரில் மட்டுமே சென்னைக்குள் எண்ணற்ற இடங்கள் இருப்பதால், குழப்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைக்க, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் பெயரை மாற்றிவிடலாம். காடுவெட்டி குரு என்ற பெயரில் `காடு’ என்கிற வார்த்தை இருக்கும் ஒரே காரணத்தினாலும், வண்டலூருக்கும் பா.ம.க-வுக்கும் பல வருடப் பந்தம் இருப்பதாலும், மோடி அவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். கொளுத்திப் போடுவோம்!

CMBT-தான் கோயம்பேடு என அறிந்திடாத பல புதியவர்கள், கோயம்பேடு பஸ்ஸுக்காக மணிக்கணக்கில் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த அவலங்கள் அரங்கேறியிருக்கின்றன. இனி அதுபோன்ற சம்பவங்கள் நடந்திடாத வண்ணம், முதல்வேளையாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்குப் பெயரை மாற்றிவிடலாம். ஆக, CMBT-யை NMBT-யாக மாற்றி நரேந்திர மோடி பஸ் டெர்மினஸ் என அறிவித்துவிடலாம். எப்பூடி!

இதேபோல், வைகை அணைக்கு செல்லூர் ராஜுவின் பெயர். வங்காள விரிகுடாவுக்கு ஜெயக்குமாரின் பெயர், மாதவரம் பால் பண்ணைக்கு ஹெச்.ராஜாவின் பெயர் என எக்குத்தப்பாய் எல்லாவற்றுக்கும் பெயர்களை மாற்றிவிடலாம். கடைசியில், தமிழ்நாட்டுக்கே யார் பெயரையாவது மாத்திவிட்டு, கூட்டணி விசுவாசத்தைக் காட்டிக் கண்ணீர் வடிக்கலாம். என்ன, இதெல்லாம் உண்மையில் நடந்தாலும் ஆச்சர்யம் இல்லை.